நயன நடிகையை நெருங்கும் ஆந்திர ஹீரோக்கள்


விரல்வித்தை, நடன சூறாவளி ஆகிய நடிகர்களால் காதலிக்கப்பட்டு பின்னர் கழட்டிவிடப்பட்ட அந்த நயன நடிகை, இப்போது ஆண் வாசனையே இல்லாமல் பிரமச்சர்யம் கடைபிடிக்கப்போவதாக அறிவித்து வருகிறார். 

அதனால், கவர்ச்சிகரமான உடைகள் அணிந்து நடித்தாலும், மற்ற நேரங்களில் போர்த்திக்கொண்டுதான் வெளியே வருகிறார். 

அதோடு, கடலை போடும் சில நடிகர்களைக்கண்டால் கண்டும் காணாததும் போல் விலகியே செல்கிறார் நடிகை.

ஆனால், அம்மணியின் ஓரக்கண்ணில் ஏற்கனவே விழுந்து கிடக்கும் சில ஆந்திர தேசத்து ஹீரோக்கள் அவரை தங்கள் பக்கம் இழுக்கும் சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்களாம். 

ஆனால் முதல் ரவுண்டில் அவர்களுடன் கட்டிக்கலந்தாடிய நடிகையோ, இப்போது அவர்களை விரோதி போலவே பாவிக்கிறாராம்.

ஆனாலும் சம்பந்தப்பட்ட நடிகர்கள் விடுவதாக இல்லையாம். நடிகை ஐதராபாத்தில் தங்கியிருக்கும் ஹோட்டல்களுக்கும் அவ்வப்போது விசிட் அடித்து பழைய நட்பை புதுப்பிக்க பலசுற்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்களாம். 

என்றாலும் அவர்களுக்கு பிடிகொடுக்காமல் கழுவுற மீனில் நழுவுற மீனாய் எஸ்கேப்பாகி வரும் நடிகை, இப்போது தனது சேப்டிக்காக தான் ஐதராபாத்தில் தங்கும் நாட்களில் தன்னுடன் தனது பெற்றோரையும் கொண்டு வைத்துக் கொள்கிறாராம். 

இதனால் அம்மணியை நெருங்க முடியாமல் அலைபாய்ந்து கொண்டு திரிகிறார்களாம் மேற்படி நடிகர்கள்.

அமெரிக்க தமிழ் நடிகையை காதலிக்கும் மூன்றெழுத்து சிக்ஸ்பேக் ஹீரோ


மூன்று நம்பர் எழுத்து படத்தில் நடித்துள்ள மூன்றெழுத்து சிக்ஸ்பேக் நடிகர், சமீபத்தில்தான் விரைவில் தான் திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக அறிவித்தார். 

அதையடுத்து அவருடன் ஏற்கனவே இரண்டு படங்களில் செகண்ட் ஹீரோயினியாக நடித்த அமெரிக்காவில் வாழும் மூன்றெழுத்து தமிழ் நடிகைதான் அவருக்கு தயாராகி வரும் மணப்பெண் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

மேற்படி நடிகை, செல்லம் நடிகர் தயாரித்த காஞ்சிவரம் என்ற படத்தில் அறிமுகமானவர், அதன்பிறகு பல படங்களில் நடித்தார். 

இதில் நம்முடைய மூன்றெழுத்து ஹீரோவுடன் இரண்டு படங்களில் நடித்தார். அப்போது அவர்களுக்கிடையே காதல் பத்திக்கொண்டதாம். 

அதன்பிறகு நடிகைக்கு சரியான படமில்லாமல் அமெரிக்கா சென்று விட்டபோதும், அவர்களுக்கிடையிலான காதல் அறுந்து போகவில்லையாம். கனெக்ஷனிலேயே இருந்து வருகிறார்களாம்.

இந்தநிலையில், தற்போது அந்த நடிகருக்கு திருமணம் என்றதும், அப்படின்னா மணப்பென் அந்த நடிகையாகத்தான் இருக்க வேண்டும். மேற்படி நடிகரின் நண்பர்கள் அந்த நடிகையை அண்ணி அண்ணி என்றுதான் முன்பு அழைத்து வந்தனர். 

அதனால் மேற்படி சிக்ஸ்பேக் நடிகரும் கூடிய சீக்கிரமே நடிகையுடனான காதலையும் சொல்லி கல்யாண தேதியையும் அறிவிக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

பட்டையை கிளப்பும் பட்டத்து யானை


நடிகர் விஷால் மதுரையை பின்னணியாக (திமிரு...) கொண்டு நடித்த படங்களும், திருச்சியை பின்னணியாக (மலைக்கோட்டை) கொண்டு நடித்த படங்களும் ஹிட் அடித்துள்ளன! 

தெரிந்தோ(?) தெரியாமலோ(!) ‘‘பட்டத்து யானை’’ படத்தில் மதுரை, திருச்சி இந்த இரண்டு மாநகரங்களுமே பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளன. அப்புறமென்ன... காமெடி சரவெடி, ஆக்ஷ்ன் அதிரடி என்று அசத்தியிருக்கும் ‘‘பட்டத்து யானை’’ சூப்பர்-டூப்பர் ஹிட் அடிக்க இருக்கிறது. கங்கிராட்ஸ் விஷால்!!

காரைக்குடியின் பிரபல சமையல் சக்ரவர்த்தி சந்தானம், அவரிடம் பாவா லட்சுமணனின் சிபாரிசில், விஷால் தலைமையிலான ஐவர் குழு சமையலுக்கு வந்து சேருகிறது. 

வந்து சேர்ந்த வேகத்திலேயே சந்தானத்தை ஒரு பெரும் ரவுடியுடன் கோர்த்து விட்டு பயத்தில் சந்தானத்தை திருச்சிக்கு மூட்டை முடிச்சை கட்ட வைக்கிறது. இந்த ஐவருடன் திருச்சியில் ஹோட்டல் வைத்து பிழைத்துக் கொள்ளலாம் எனும் ஐடியாவுடன் ரூ.2 லட்சம் பணத்துடன் திருச்சிக்கு கிளம்பும் சமையல் சக்கரவர்த்தி சந்தானத்தை, திருச்சியில் சி்ங்கிள் டீக்கு வழியில்லாமல் ’அம்போ’ என விட்டுவிட்டு செல்கிறது விஷால் கோஷ்டி! 

கூடவே 2 லட்சம் பையையும் மிஸ் செய்யும் விஷாலுக்கு, அந்த காணாமல் போன பையால் கதாநாயகி பள்ளி மாணவியான ஐஸ்வர்யா அர்ஜூனுடன் காதல் ‘பிக்ஸ்’ ஆகிறது! அப்புறம்? அப்புறமென்ன, அந்த ஊர் வில்லனுக்கும் சில, பல காரணங்களால் ஐஸ் அர்ஜூன் மீது காதலும், அவர் குடியிருக்கும் வீட்டின் மீது ஒரு கண்ணும் விழுகிறது. 

வில்லன் கோஷ்டி, சமையல்காரன் தானே?! என்று விஷாலை சாதாரணமாக நினைத்து ஐஸ்ஸையும், அவர் குடியிருக்கும் வீட்டையும் தூக்க பார்க்க, கைவசம் இருக்கும் சாரணி, சட்டுவத்தால் இருநூறுக்கும் மேற்பட்டி வில்லனின் கையாட்களையும், வில்லனையும் நையப்புடையத்து அனுப்பும் விஷால், தான் சாதாரண சமையல்காரன் அல்ல, மதுரையில் 3 பேர‌ை கொன்று அதற்கு சில வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தபோது, சிறையில் தான் சமையல் செய்வதையே கற்றுக்கொண்டதாக ப்ளாஷ்பேக் விரிக்கிறார். 

அங்கு அராஜமாக நடந்து கொள்ளும் 3 பேரை விஷால் நியாயத்திற்கா‌க போட்டுத்தாக்கும் கதை விரிகிறது! அதன்பின் மதுரை வில்லன், சென்னை வில்லன், திருச்சி வில்லன் இன்னும் சில சில்லரை வில்லன்கள் எல்லோரும் சேர்ந்து ஐஸ்வர்யாவையும், விஷாலையும் தீர்த்துகட்ட முயற்சிக்கின்றனர். 

அவர்களிடமிருந்து ஐஸ்ஸை காத்து அவர் விரும்பும் எம்.பி.பி.எஸ்., படிக்க வைக்கும் விஷால், தன்னையும் காத்துக் கொண்டு சந்தானத்திற்கு தன் நண்பர்களுக்கும் நல்லபடியாக ஹோட்டல் வைத்து கொடுத்தாரா? இல்லையா? என்பது காமெடியாகவும், அதிரடியாகவும், அதிரி புதிரியாகவும் படமாகியிருக்கும் ‘‘பட்டத்து யானை’’ படத்தின் மீதிக்கதை!!

விஷால், மெய்யாலுமே மிரட்டியிருக்கிறார். மனிதர் ஒவ்வொரு சண்டைக்காட்சியிலும் நூறு, இருநூறு அடியாட்களை அடித்து போடுவது நம்பும்படியாக இருப்பது படத்திற்கு பெரும் ப்ளஸ்! 

ஆனால், பள்ளி மாணவியாக வரும் ஐஸ்வர்யா பின்னால் வந்த வேலை, போன பணம், காத்திருக்கும் சந்தானம் பற்றியெல்லாம் கவலைபடாமல் லோலேவென சுற்றுவது நம்பும்படியாக இல்லை! விஷால் காதல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்! இயக்குநருக்கும் சேர்த்து தான் சொல்கிறோம்!

ஐஸ்வர்யா அர்ஜூன் அப்படியொன்றும் அழகில்லை என்றாலும் உடை, நடை, எடை, உயரம் உள்ளிட்ட விஷயங்களில் விஷாலுக்கு பொருத்தமான ஜோடியாக பளீரிடுகிறார். பலே, பலே! என்ன ஒரே குறை ஐஸ்வர்யாவின் முகத்தில் அர்ஜூனும் தெரிவது சற்றே சலிப்பு தட்டுகிறது. அடுத்தடுத்த படங்களில் அம்மணி அந்த குறையை மேக்கப்பில் - பேக்கப் பண்ணட்டும்!

சந்தானம், சமையல் சக்ரவர்த்தியாக பட்டையை கிளப்பி இருக்கிறார். சில கடித்தாலும், பல தியேட்டரை அதிர வைக்கிறது! அதிலும் நான் கடவுள் ராஜேந்திரன், சிங்கமுத்து உள்ளிட்டவர்களை ஒன்றாக நிற்க வைத்து மண்ணெண்யை உமிழ்ந்து நெருப்பு பற்ற வைக்கும் காமெடியில், சிங்கமுத்துவின் மனைவியையை மட்டும் அவர் செய்கையால் நகர சொல்லும் இடத்தில் பண்ணும் சேட்டைகளும், பதிலுக்கு அந்த அம்மணி வாழை இலையால் மூடியிருக்கும் தன் மேனியில் இருந்து இலையை விலக்கும் இடமும் கொஞ்சம் கா‌மநெடி என்றாலும் செம காமெடி!

ஜாக்பாட் - மயில்சாமி, முருகா - ஜெகன், மருதமுத்து - முரளி சர்மா, சரித்திரன், ஜான் விஜய், பெசன்ட்நகர் ரவி, நான்கடவுள் ராஜேந்திரன், சித்ராலட்சுமணன் எல்லோரும் சூப்பர்!

எஸ்.எஸ்.தமனின் இசையில் ஐந்து பாடல்கள், ஐந்தும் ஐந்து விதம்! அருமையான பதம்! எஸ்.வைத்தியின் ஒளிப்பதிவும், ‘‘மலைக்கோட்டை’’ ‘பளிச்’சை மறுபடியும் தந்திருக்கிறது. அனல் அரசுவின் நம்பும்படியான சண்டைக்காட்சிகள், ரமேஷ்.ஏ.எல்.லின் பக்குவமான படத்தொகுப்பு எல்லாம் சேர்ந்து இயக்குநர் ஜி.பூபதிபாண்டியனின் இயக்கத்தில் ‘‘பட்டத்து யானை’யை மகுடம் சூட வைத்திருக்கிறதென்றால் மிகையல்ல!

மொத்தத்தில், ‘‘பட்டத்து யானை’’ - ‘‘பட்டையை கிளப்பும் யானை!!’’

காதலில் சிக்கிய 5 நடிகைகள்ஹன்சிகா, சமந்தா, அமலாபால், காஜல் அகர்வால், லட்சுமிராய் ஆகிய ஐந்து நடிகைகள் காதலில் சிக்கியுள்ளனர். இதில் சிலருக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. 

ஹன்சிகா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். அவர் நடித்து சமீபத்தில் ரிலீசான தீயா வேலை செய்யனும் குமாரு, சிங்கம் 2 படங்கள் வெற்றிகரமாக ஓடின. 

இந்த நிலையல் சிம்புவுடன் காதல் வயப்பட்டு உள்ளார். இருவரும் காதலை பகிரங்கமாக அறிவித்து உள்ளனர். சிம்பு உடனடியாக திருமணம் செய்து கொள்ள அவசரப்படுகிறார் என்கின்றனர். ஹன்சிகாவோ ஐந்து வருடத்துக்கு பிறகு திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறார். 

சமந்தாவும், சித்தார்த்தும் காதல் வயப்பட்டு உள்ளனர். இருவரும் கோவில்களுக்கு ஜோடியாக சென்று பூஜைகளில் பங்கேற்றார்கள். விழாக்களுக்கு ஜோடியாக வருகிறார்கள். 

இருவருக்கும் விரைவில் திருமணத்தை முடிக்க குடும்பத்தினர் திட்டமிட்டு உள்ளனர். சமந்தா படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு வருகிறார். 

லட்சுமி ராயும் காதலில் விழுந்துள்ளார். அவர் கூறும் போது, நான் காதலிக்கிறேன். அவர் தொழில் அதிபராக இருக்கிறார். அவரைப்பற்றி வேறு விஷயங்கள் எதையும் இப்போது சொல்ல விரும்பவில்லை என்றார். 

அமலாபாலும் முன்னணி டைரக்டர் ஒருவரை காதலிப்பதாக கிசு கிசுக்கள் வெளியாகியுள்ளன. அது பற்றி வெளிப்படையாக எதுவும் அறிவிக்கவில்லை. ஆனால் ரகசியமாக சந்தித்து காதல் வளர்ப்பதாக கூறுகின்றனர். 

காஜல் அகர்வாலுக்கும், தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கமல், பவன் கல்யாண் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்புகளை சமீபத்தில் புறக்கணித்து விட்டார். தயாரிப்பாளரை மணப்பதற்காகவே சினிமாவில் நடிப்பதை குறைப்பதாக கூறப்படுகிறது.

படிப்பை தொடரும் நஸ்ரியாகேரளாவில் இருந்து வந்த, லட்சுமி மேனன், தற்போது, பிளஸ் 1 படிப்பை தொடர்வது போல், மற்றொரு கேரள நடிகையான, நஸ்ரியா, தற்போது பி.காம்., படிப்பை தொடர்ந்து வருகிறார். 

அவர் கூறுகையில், "நான் குழந்தை நட்சத்திரமாகவே, சினிமாவில் நடிக்கத் துவங்கினேன். நடித்துக் கொண்டே படித்து வந்தேன். 

பிளஸ் 2 படித்த போது, ஒரு மலையாள படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. இப்போது, பல படங்களில் நடித்து, ரொம்ப பிசியாகி விட்டேன். 

ஆனாலும், நடிப்பை போலவே, படிப்பிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. அதனால் தான், தற்போது கேரளாவில் உள்ள கல்லூரியில் பி.காம்., படித்து வருகிறேன். 

முடிந்தவரை, படிப்பு பாதிக்காத வகையில், படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கிறேன் என்கிறார். 

இதனால், படப்பிடிப்பின்போது, புத்தகமும், கையுமாகத் தான், வலம் வருகிறார், நஸ்ரியா.

சொன்னா புரியாது - சினிமா விமர்சனம் (பார்த்தா புரியும்)வேற்று மொழிகளில் எடுக்கப்படும் படங்களுக்கு தமிழில் டப்பிங் பேசும் பணி செய்து வருகிறார் சிவா. இவருடைய நண்பராக வருகிறார் ‘பிளேடு’ சங்கர். அப்பா இல்லாமல் அம்மா அரவணைப்பில் வாழும் சிவாவுக்கு திருமணத்தின் மீது ஈடுபாடு இல்லை. 

ஆனால் அவருடைய அம்மாவோ சிவாவுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்கவேண்டும் என முயல்கிறார். இருந்தும் சிவா அடம்பிடிக்கவே, திருமணம் செய்யவில்லையென்றால் திருப்பதி, பழனி, ராமேசுவரம் என சன்னியாசம்போகப்போவதாக அவருடைய அம்மா மிரட்டுகிறார். 

அம்மா மீது பாசம் கொண்ட சிவா, அம்மாவை பிரிய மனம் இல்லாததால் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். இதையடுத்து, மனோபாலா நடத்தும் திருமண தகவல் மையத்திற்கு சென்று பெண் பார்க்கின்றனர். அங்கு நாயகி வசுந்தராவின் புகைப்படத்தை பார்த்ததும் பிடித்துப்போக, அவளையே சிவாவுக்கு திருமணம் முடித்து வைக்க சிவாவின் அம்மா முடிவெடுக்கிறார். 

பின்னர் அவளுடைய வீட்டிற்கு சென்று நிச்சயதார்த்தமும் செய்துவிடுகிறார்கள். வசுந்தரா டிவியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். அரைகுறை மனதுடன் திருமணத்திற்கு சம்மதித்த சிவா இந்த திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என முயற்சி எடுக்கிறார். 

இந்நிலையில், இந்த திருமணத்தில் வசுந்தராவுக்கும் சம்மதம் இல்லை என்பதை அறிகிறார். இறுதியில் இருவரும் இணைந்து திருமணத்தை நிறுத்தினார்களா? அல்லது இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதை நகைச்சுவையுடன் கலந்து சொல்லியிருக்கிறார்கள். 

சிவா வழக்கமான நக்கல், நையாண்டி பேச்சால் படம் முழுக்க கலகலக்க வைத்திருக்கிறார். குறிப்பாக இந்தியில் இவர் எழுதி, பாடும் பாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது. 

வசுந்தரா மீதான காதலை கவிதையாக சொல்வது ஏட்டில் பதிக்கவேண்டியது. வசுந்தரா காஷ்யாப் அழகாக இருக்கிறார். எதார்த்தமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். பாடல் காட்சிகளில் காதல் ரசம் சொட்ட சிவாவுடன் ஆடிப்பாடுவது ரசிக்க வைக்கிறது. 

மனோபாலா, சிவாவின் அம்மாவாக வரும் பெண் ஆகியோர் சிரிக்க வைத்திருக்கிறார்கள். 

சிவாவின் நண்பராக வரும் ‘பிளேடு’ சங்கர் அழுத்தமான கதாபாத்திரத்தில் மனதில் இடம்பிடிக்கிறார். 

இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் கலகலப்பான காமெடி படத்தை கொடுக்க முயற்சித்தத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். 

முதல் பாதியில் இருந்தே படம் மெதுவாக நகர்கிறது. சிவாவின் நக்கல், நையாண்டி பேச்சால் படத்தை தொடர்ச்சியாக ரசிக்க முடிகிறது. 

யாதீஷ் மகாதேவ் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசையில் திறம்பட செயல்பட்டிருக்கிறார். 

சரவணன் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. 

மொத்தத்தில் ‘சொன்னா புரியாது’ பார்த்தா புரியும்.

ஆர்யாவையே தூக்கி சாப்பிடும் தில்லுமுல்லு சிவா


இதுநாள் வரை நடிகைகளை கலாய்ப்பதில் ஆர்யாவுக்கு இணை யாரும் இல்லை என்ற நிலைதான் இருந்தது. 

ஆனால், இப்போது அவரையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு இன்னொரு கலாய்ப்பு மன்னன் கோடம்பாக்கத்தில் உருவாகி விட்டார். 

அவர் வேறு யாருமல்ல, கலகலப்பு, தில்லுமுல்லு உள்பட சில படங்களில் நடித்துள்ள மிர்ச்சி சிவாதான்.

ஆர்யாவாவது ஒரு ஸ்பாட்டில் புதுமுக நடிகைகள் யாரையாவது பார்த்து விட்டால், தூரத்தில் நின்றே பார்த்தபடி அவர் தன்னை பார்க்கிறாரா என்று வளைய வளைய வருவார். 

அதன்பிறகு மெல்ல அவரது கவனத்தை தன் பக்கம் திருப்பி பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பார். 

ஆனால் இந்த சிவா அப்படியில்லையாம். முன்னபின்ன அறிமுகமே இல்லாத நடிகையாக இருந்தாலும், தானே வலிய சென்று பேச்சுக்கொடுத்து அவரது பயோடேட்டாவை தெரிந்து கொள்வாராம்.

அதன்பிறகு அடுத்தநாள் முதல் அந்த நடிகைக்கு போன் போட்டு தனது கலாய்ப்பைத் தொடங்கி விடுவாராம். 

ஆனால் அவரது பேச்சில் சுவராஸ்யம் இருப்பதால் அந்த கலாய்ப்பை கேட்டு ரசிப்பதற்கென்றே ஒரு நடிகையர் கூட்டம் எந்நேரமும் சிவாவை மொய்த்துக்கொண்டுள்ளதாம். 

இதனால் ஆர்யாவின் மகளிர் மன்றத்தை விரைவில் ஒட்டுமொத்தமாக தன் பக்கம் இழுத்து விடுவார் இந்த நடிகர் என்கிறார்கள்.

சமந்தாவின் அடாவடித்தனம்

சமந்தா பார்ப்பதற்கு அமைதியான பெண் போன்றுதான் தெரியும். ஆனால், அவரது தோழிகளுக்குத்தான் அவரது நிஜ கேரக்டர் என்னவென்று தெரியுமாம்.

இதுபற்றி சமந்தா கூறுகையில், நான் சாதாரணமாக என்னிடம் பழகுபவர்களிடம் ரொம்ப அமைதியாக அடக்க ஒடுக்கமான பெண்ணாகத்தான் தெரிவேன். 

ஆனால் எனக்குள் ஒரு அடாவடியான சமந்தாவும் இருக்கிறாள். அவள் எப்போதும் வெளிப்படுவதில்லை. என்னுடன் படிக்கும் சகதோழிகளை கண்டுவிட்டால் எகிறி குதித்து வெளியே வந்து விடுவாள். 

படிக்கிற காலங்களில் அந்த சமந்தா எப்போதும் வெளியேதான் இருந்தாள். அதனால், பல நாட்களில் கல்லூரியை கட் அடித்து விட்டு சினிமாவுக்கு சென்றிருக்கிறேன். 

வீட்டில் பெற்றோரை ஏமாற்றி விட்டு தோழிகளுடன் ஊர் சுற்றியிருக்கிறேன். என்னை அமைதியாக பார்த்து பழக்கப்பட்டவர்கள் அந்த சமந்தாவைப்பார்த்தால் ஆடிப்போவார்கள்.

அந்த அளவுக்கு அரட்டை, கூத்து கும்மாளம் என்று நான் இருக்கிற ஏரியாவே அமளிதுமளியாக இருக்கும் என்று தனது சுயரூபத்தை ஓப்பன் பண்ணி விடுகிறார் சமந்தா. 

இப்படி தன்னைப்பற்றி வெளிப்படையாக சொல்லும் சமந்தா, சினிமாவுக்கு வந்து ஒரு இடத்தை பிடித்த பிறகு தனது சுட்டித்தனத்தை ஓரங்கட்டி வைத்துவிட்டவர், பொறுப்பான பெண்ணாகவும் மாறி விட்டாராம்.

தமன்னாவுக்கு ஷாக் கொடுத்த ஸ்ருதி

தமிழில், போதிய வாய்ப்புகிடைக்கவில்லை என்றாலும், தெலுங்கு,இந்தியில், யாரும் எட்டிப் பிடிக்க முடியாதஅளவுக்கு, முன்வரிசையில் இடம் பிடித்துவிட்டார், ஸ்ருதி ஹாசன். தெலுங்கிலும்,இந்தியிலும், அவருக்கு தொடர்ந்துபடங்கள் புக் ஆகி வருகின்றன.

சஞ்சய்லீலா பன்சாலி தயாரிப்பில்,புதிதாக ஒரு இந்தி படத்தில் நடிக்கஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்,தமன்னா. இதில், அக்ஷய் குமார் தான்ஹீரோ. 

ஆனால், பாலிவுட்டில்,தமன்னாவை விட, ஸ்ருதிக்கு நல்லசெல்வாக்கு இருப்பதால், தயாரிப்பாளர் மனதில் மாற்றம் ஏற்பட்டு விட்டதாம்.

அந்த படத்திலிருந்து, தமன்னாவைகழற்றி விட்டு, ஸ்ருதியை ஒப்பந்தம் செய்துள்ளதாக, பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

ஆனால், இந்தவிவகாரத்தில் தொடர்புடைய,ஸ்ருதியோ, தமன்னாவோ, இதுபற்றி,இன்னும் வாய் திறக்கவே இல்லை.

எழுச்சி டைரக்டர் ரகசிய திருமணம்

சீறும் டைகர் லீடரைப் பற்றிய கல்யாண செய்தி அவ்வப்போது வந்து பரபரப்பை ஏற்படுத்தும். சென்ற ஆண்டு விஜயமான லெட்சுமி நடிகை, சீறும் தலைவர் என்னை கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லி ஏமாற்றிவிட்டாருன்னு சொன்னாரு. 

இந்த வருட ஆரம்பத்துல அவரு ஒரு ஈழத்து பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டாருன்னு சொன்னாங்க. இப்போ வர்ற நியூஸ் என்னவென்றால் சீறும் தலைவருக்கும், மதுரையை சேர்ந்த மாஜி அமைச்சரின் மகளுக்கும் கல்யாணமாகிடுச்சுங்றதுதான். 

எது உண்மைன்னு சீறும் தலைவர் சொன்னத்தான் உண்டு. சினிமா இயக்குனரா இருந்த வரைக்கும் கிசுகிசு சகஜம்தான். ஆனா அரசியல் தலைவரா ஆனதுக்கப்புறம் சொந்த வாழ்க்கையை ஓப்பனா வச்சிக்க வேணாமான்னு அவரு கட்சிக் காரங்களே புலம்ப ஆரம்பிச்சிருக்காங்களாம்.

குண்டு உடம்புக்கு ஆசைப்படும் நடிகை

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என மும்மொழிகளிலும் கால்பதித்த கேடி நடிகைக்கு மூன்று மொழிகளிலும் எதிர்பார்த்த அளவு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. 

தற்போது கோலிவுட் பக்கம் போகலாம் என முடிவெடுத்துள்ளவருக்கு பஞ்சத்தில் அடிபட்டது போன்று உடல் ஒட்டிப்போய் இருப்பதால் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்காது என்று யோசித்த நடிகை, இதுவரை கடைப்பிடித்து வந்த உணவு கட்டுப்பாடுகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு, கையில் கிடைத்ததை எல்லாம் சாப்பிட முடிவு செய்துள்ளாராம். தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப குண்டு நடிகையாகப் போகிறேன் என கூறியுள்ளாராம்.

மரியான் - சினிமா விமர்சனம்கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஒரு அழகான மீனவ கிராமம். அங்கு மீனவராக இருக்கிறார் மரியான் எனும் தனுஷ். ‘மரியான்’ என்பவர் ஆழ்கடலில் மூச்சை அடக்கி ஒரு ஈட்டி மட்டுமே துணை கொண்டு மீன்களை பிடிப்பவர் என்று பொருள்படும். 

மீனவ கிராமத்தில் தன்னுடைய நண்பர்களான அப்புக்குட்டி, இமான் அண்ணாச்சி ஆகியோருடன் சேர்ந்து மீன் பிடித்து வருகிறார் தனுஷ். அதே ஊரில் மீனவப் பெண்ணாக வரும் பார்வதி தனுஷை ஒருதலையாக காதலிக்கிறார். தன்னுடைய தொழிலில் எப்போதுமே சாவை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டும் என்பதால் தனுஷ் பார்வதியை காதலிப்பதை தவிர்த்து வருகிறார். 

இந்நிலையில், தனுஷின் நண்பர்கள் பார்வதியை காதலிக்க அவனை வற்புறுத்துகின்றனர். ஒருகட்டத்தில் பார்வதி மீது காதல் வயப்படுகிறார் தனுஷ். இருவரும் காதலித்து வருகின்றனர். அதே ஊரில் வட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதிக்கும் ரவுடி ஒருவனும் பார்வதி மீது காதல் கொள்கிறான். இந்த விஷயம் தனுஷுக்கு ஒருநாள் தெரிகிறது. 

அப்போது தனுஷ் அவனை மிரட்டி அனுப்புகிறார். பார்வதியின் அப்பா ரவுடியிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருக்கிறார். அதனால், அவர் வீட்டுக்கு சென்று ரவுடி பெண் கேட்கிறார். இல்லையென்றால் வட்டிக்கு கொடுத்த பணத்தை திரும்பிக் கொடுக்கும்படி மிரட்டுகிறார். 

மறுமுனையில் நடுக்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தன் நண்பன் அப்புக்குட்டி குண்டடிபட்டு சடலமாக அவரது உடல் கரை ஒதுங்குகிறது. இதைப் பார்த்து கதறி அழுது கொண்டிருக்கும் தனுஷிடம் பார்வதி நேரில் வந்து, ரவுடி பெண் கேட்டு வந்திருப்பதை சொல்கிறாள். இதையடுத்து பார்வதியின் வீட்டுக்கு வரும் தனுஷ், அந்த ரவுடியை அடித்து விரட்டுகிறார்.

உடனே, ரவுடி வட்டிக்கு கொடுத்த பணத்தை திருப்பித் தராவிட்டால் குடும்பத்தோடு கொன்றுவிடுவேன் என்று பார்வதியின் தந்தையை மிரட்டிவிட்டு செல்கிறான். இதனால் என்ன செய்வதென்று யோசிக்கும் தனுஷ், வெளிநாட்டுக்கு சென்று சம்பாதித்து இந்த கடனை அடைக்க முடிவெடுக்கிறார். 

அதன்படி 2 வருட ஒப்பந்தத்தில் தென்ஆப்பிரிக்கா செல்கிறார். 2 வருட ஒப்பந்ததில் 1 வருட சம்பளத்தை முன்பணமாக பெற்று அந்த பணத்தில் பார்வதி தந்தையின் கடனை அடைத்துவிட்டு, தென்ஆப்பிரிக்காவுக்கு பயணமாகிறார். 

அங்கு பணிபுரிந்துவிட்டு ஊருக்கு புறப்படும் வேளையில் தனுஷ் மற்றும் அவருடன் பணிபுரியும் நண்பர்களை கடத்திச் சென்று பணம் பறிக்கும் கும்பல் ஒன்று தூக்கிச் சென்றுவிடுகிறது. 

இவர்களை பணய கைதிகளாக வைத்து இவர்கள் கம்பெனியிடம் பணம் கேட்கிறது அந்த கும்பல். இதிலிருந்து தனுஷ் தப்பித்து சொந்த ஊர் திரும்பினாரா? பார்வதியை கரம் பிடித்தாரா? என்பதே மீதிக்கதை. 

தனுஷ் இப்படத்தில் மீனவராக நடிக்கவில்லை, வாழ்ந்தே இருக்கிறார். ஆழ்கடலில் மூழ்கி மூச்சை அடக்கி இவர் மீன் பிடிக்கும் காட்சி மயிர்கூச்செரிய வைக்கிறது. தென்ஆப்பிரிக்காவில் கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பித்து சென்று, பாலைவனத்தில் தவிக்கும் காட்சியில் நம்மை அழவைக்கிறார். படம் முழுவதும் தனது நடிப்பை அசாத்தியமாக வெளிப்படுத்தியுள்ளார். 

நடிகை பார்வதி படம் முழுவதும் மேக்கப்பே இல்லாவிட்டாலும் அழகாக இருக்கிறார். இந்த படத்தில் ஒரு பாடல்கூட பாடியிருக்கிறார். மீனவ பெண் பனிமலர் என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். தனுஷிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்துவதில் அழுத்தமாக பதிந்திருக்கிறார். 

நண்பர்களாக வரும் அப்புக்குட்டி, இமான் அண்ணாச்சி, தென்ஆப்பிரிக்கா நண்பராக வரும் ஜெகன், தனுஷ் அம்மாவாக வரும் உமா ரியாஸ்கான் ஆகியோர் படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும், தங்கள் கதாபாத்திரத்திற்கு உண்டான நடிப்பை திறம்பட வெளிப்படுத்தியிருக்கின்றனர். 

இயக்குனர் பரத்பாலா இப்படத்தை ஒரு பொழுதுபோக்கு படமாக இல்லாமல், ஒரு ஆவணப் படம் போல் படமாக்கியுள்ளார். முதல் பாதி விறுவிறுப்பாக நகர்ந்தாலும், இரண்டாவது பாதியில் படம் மெதுவாக நகர்கிறது. திரைக்கதையில் இயக்குனர் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கின்றன. ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால்தான் என்ன’ பாடல் கேட்பதற்கு மட்டுமல்லாமல் பார்ப்பதற்கும் இனிமையாக இருக்கிறது. பின்னணி இசையிலும் தனது திறமையை நிரூபித்திருக்கிறார். 

மார்க் கோனிக்ஸ் ஒளிப்பதிவில் கன்னியாகுமரி பகுதி மீனவ கிராமம் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் பாலைவனம் ஆகியவை நாம் அதற்குள் நுழைந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. 

மொத்தத்தில் ‘மரியான்’ வெல்வான்.

நடிகை ஹன்சிகாவை காதலிப்பது உண்மை - சிம்புசிம்புவும், ஹன்சிகாவும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் வாலு மற்றும் வேட்டை மன்னன் படங்களில் ஜோடியாக நடிக்கிறார்கள். 

அப்போது நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. சிம்பு அடிக்கடி ஐதராபாத் சென்று ஹன்சிகாவை சந்தித்து காதல் வளர்ப்பதாகவும் செய்திகள் உலவின. இதற்கு இருவரும் பதில் அளிக்காமல் இருந்தனர். இதனால் காதலிப்பது உறுதிதான் என பேசப்பட்டது.

சிம்புவின் தந்தையும், சினிமா டைரக்டருமான டி.ராஜேந்தரிடம் சமீபத்தில் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், சிம்பு யாரை திருமணம் செய்து கொள்ள விரும்பினாலும் ஏற்றுக் கொள்வேன். அது ஹன்சிகாவாக இருந்தாலும் சந்தோஷம்தான் என்றார்.

இதனால் இவ்விவகாரம் மேலும் சூடுபிடித்தது. இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என பேச்சு அடிபட்டது.

ஆனால் இரு தினங்களுக்கு முன்பு ஹன்சிகா இதனை மறுத்தார். சிம்புவும் நானும் நண்பர்களாகத்தான் பழகுகிறோம் என்றார். இதனால் இருவரும் காதல் முறிந்து பிரிந்துவிட்டதாக செய்தி பரவியது.

இந்த நிலையில் சிம்புவும் ஹன்சிகாவும் இன்று டூவிட்டர் இணைய தளத்தில் தங்கள் காதலை பகிரங்கமாக அறிவித்தார்கள்.

ஹன்சிகா தனது டூவிட்டரில் என் சொந்த வாழ்க்கை பற்றி டூவிட்டரில் பல விதமான வதந்திகள் பரவுகின்றன. இப்போது என் நிலையை சொல்கிறேன். நான் சிம்புவை காதலிப்பது உண்மைதான். ஆனாலும் எனது சொந்த வாழ்க்கை குறித்து தற்போது எதுவும் கூற விரும்பவில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதையடுத்து சிம்புவும் தனது டூவிட்டரில் நானும் ஹன்சிகாவும் சேர்ந்து பழகுவது உண்மைதான். ஹன்சிகா என்னுடன் நன்றாக இருக்கிறார். எங்கள் திருமணம் பற்றி பெற்றோர் விரைவில் பேசி முடிவு செய்வார்கள். எனது சொந்த வாழ்க்கை பற்றி தவறான செய்திகளை மீடியாக்களில் வெளியிட வேண்டாம் என்று குறிப்பிட்டு உள்ளார்.

காமெடி நடிகரின் முத்தத்தால் புலம்பும் நடிகைதமிழில் படவாய்ப்புகள் கிடைக்காத காதல் நடிகைக்கு இரண்டெழுத்து படம் மூலம் சந்தன காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. 

சந்தன நடிகர் தற்போது உச்சத்தில் இருப்பதால், இதன்மூலம் மீண்டும் தமிழில் ஒரு ரவுண்டு வரலாம் என முடிவெடுத்து, நடிக்க ஒப்புக் கொண்ட நாயகி இப்போது ஏன் ஒப்புக் கொண்டோம்? என புலம்பி வருகிறாராம்.

இதற்கு காரணம், இந்த படத்தில் சந்தன நடிகர், காதல் நடிகையின் கன்னத்தில் முத்தமிடுவதுபோல் காட்சியமைக்கப்பட்டிருந்ததாம். 

மேலும் நடிகையின் இடுப்பை சந்தன நடிகர் கிள்ளுவது போன்ற காட்சியும் எடுக்கப்பட்டதாம். 

அப்போதெல்லாம் கூச்சப்படாமல் நடித்துவிட்டு வந்த நடிகை, தற்போது தனியாக ரூமில் உட்கார்ந்து புலம்ப ஆரம்பித்திருக்கிறாராம்.

இதுவரை தான் நடித்த படங்களில் இடுப்பை கிள்ளுவது போல எந்த காட்சியும் இல்லை. ஆனால் இந்த படத்தில் ஒரு காமெடி நடிகர் தன் இடுப்பை கிள்ளிவிட்டாரே என நினைத்து நினைத்து புலம்புகிறாராம். 

தமிழில் ரீ என்ட்ரி பண்ணலாமுன்னு வந்தா நம்மல வீட்டுக்கே திருப்பி அனுப்பிடுவாங்க போலிருக்கே... என்று புலம்பும் நடிகை மீண்டும் தன்னுடைய தாய்மொழிக்கே நடிக்க போய்விடலாமா எனவும் யோசித்து வருகிறாராம். 

வந்தாச்சு 8 பேக் ஹீரோ


ஏழாம் அறிவு படத்துக்காக சூர்யா 6 பேக் வைத்தார், சமர் படத்துக்கு விஷால் வைத்தார், ஒஸ்தி படத்துக்கு சிம்பு வைத்தார் (-?), 555 படத்துக்கு பரத் வைத்திருக்கிறார். 

இன்னும் நிறைய ஹீரோக்கள் 6 பேக் டிரை பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இதற்காக சோறு தண்ணி இல்லாம ஜிம்மே கதின்னு கிடக்குறாங்க. 

இப்போ இவிங்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டு 8 பேக்கோடு ஒரு நியூபேஸ் வந்திருக்கிறார். பெயர் ஆதவன். 

நடிக்கும் படத்தின் பெயர் மின்னல். அங்கனா ஹீரோயின். ஆஸ்மி பிலிம்ஸ் தயாரிக்குது. சிராஜ் டைரக்டர்.

"காதல், காமெடி, ஆக்ஷன், எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணிய கமர்ஷியல் படம். அதற்கு வல்லமை நிறைந்த ஹீரோ வேண்டும். 

எல்லா ஹீரோக்களும் 6 பேக் வைக்றாங்க உங்களால 8 பேக் வைக்க முடிமான்னுதான் கேட்டேன். 

ஒரு மாசத்துல பயங்கரமா ஒர்க் அவுட் பண்ணி ஆதவன் வந்து நிண்ணப்போ அசந்துட்டேன். 

அவர்கிட்ட நல்ல டெடிக்கேஷன் இருக்கு. நிச்சயம் ஆதவன் பெரிய இடத்துக்கு வருவார்" என்று நற்சான்றிதழ் தருகிறார் டைரக்டர் சிராஜ்.

கண்ணாடியை பார்த்து அழும் நடிகை

அனுஷ்க நடிகை செகண்ட் வேர்ல்டு படத்திலும் லயன் படத்திலும் நடித்தபோது, இந்தியாவில் மட்டுமின்றி பல நாடுகளிலும் அவர் நடித்த காட்சிகளை சுட்டெரிக்கும் வெயிலில் படமாக்கினார்களாம். 

இதனால் நடிகையின் பளபள தேகம் தற்போது ரொம்பவும் மங்கிவிட்டதாம். 

அரசி வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும் படத்திற்காகவும் பாலைவன பிரதேசங்களுக்கு கூட்டிச் சென்று படமாக்கினார்களாம். 

இதனால் கிட்டத்தட்ட ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு நடிகை கறுத்துப்போய் விட்டாராம். 

இதனால் தன் முகத்தை தினமும் கண்ணாடியில் பார்த்தபடி கலங்கி நிற்கிறாம் நடிகை.

தாய்குலத்திடம் புலம்பிய கோ பட நடிகை


கோ பட நாயகி மும்பையில் பிறந்து வளர்ந்தவர். அதனால் கிராமத்து வாழ்க்கை என்பது அவருக்கு சுத்தமாக தெரியாத ஒன்று. இருப்பினும் அம்மா சொன்னதிற்கிணங்க அந்த கிராமத்து இயக்குனரின் படத்தில் நடித்தார். 

ஆட்டுக்குட்டிகள் அடைக்கும் பட்டியில்கூட நாள்கணக்கில் மூக்கை பொத்திக்கொண்டு நடித்தார். காரணம், அந்த டைரக்டரின் படத்தில் நடித்தால் உனது திறமை வளரும், விருதுகூட கிடைக்கும் என்று அம்மா சொன்னதினால்தான். 

ஆனால் இப்போது படமே ஓடவில்லை என்பதால் அம்மா மீது செம காண்டாகி விட்டாராம் நடிகை. ஒரு வருசத்துக்கும் மேலாக அந்த படத்துக்காக பல படங்களை விட்டுட்டு நடிச்சேன். குறைச்சலான சம்பளம் என்றாலும், பெரிய டைரக்டர் படமாச்சேன்னு எல்லாத்தையும பொறுத்துக்கிட்டேன். அதோட, நீங்க சொன்ன ஒரே காரணத்துக்காக அரைநிர்வாணமா கூட நடிச்சேன்.

இப்போ படமும் ஓடல, எனக்கு அதை வச்சு ஒரு படமும் கெடைக்கல. ஆட்டுமந்தை கூட்டத்தோட ஒரு வருசமாக நான் நடிச்சதுதான் மிச்சம். எப்படியோ உங்க விருப்பத்துக்காக என் மனச கட்டுப்படுத்திக்கிட்டு அந்த படத்துல நடிச்சேன. இப்ப அத்தனை கஷ்டப்பட்டு நடிச்சு ஒரு பலனும் இல்லை என்று தாய்குலத்திடம் சொல்லி புலம்புகிறாராம் நடிகை.

இதை சற்றும் எதிர்பார்க்காத இரண்டெழுத்து மாஜி நடிகையும், மகளிடம் மன்னிப்பு கேட்காத குறையாய், இனிமேல் உன் சினிமா வாழ்க்கையில் நான் குறுக்கிட மாட்டேன். உனக்கு எந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அந்த படத்தில் நீ நடிக்கலாம் என்று மகளுக்கு சுதந்திரம் கொடுத்து விட்டாராம். 

அதனால் இதுவரை எடுத்ததற்கெல்லாம் அம்மாவின் முகத்தை பார்த்த கோ பட நாயகி, இப்போது புதிய படங்களுக்கான கதையை தானே கேட்டும் முடிவு செய்யும் அளவுக்கு மாறியுள்ளார். அதேசமயம் இனிமேல் எக்காரணம கொண்டும் நான் கிராமத்து கதைகளில் நடிக்க மாட்டேன என்பதை தனது கொள்கையாகவே கடைபிடிக்கத் தொடங்கியிருக்கிறார் நடிகை.

தனுஷ் - சிவகார்த்திகேயன் புதிய பாசமலர்கள்தனுஷ், சிவகார்த்திகேயன் நட்புதான் இப்போது சினிமா வட்டாரத்தில் லேட்டஸ்ட் பரபரப்பு. தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தில் தனது பள்ளி நண்பராக சிவகார்த்திகேயனை நடிக்க வைத்தார். 

அதன் பிறகு தனது முதல் தயாரிப்பான ‘‘எதிர்நீச்சல்’’ படத்தில் சிவகார்த்திகேயனை சோலோ ஹீரோவாக்கினார். இதில் இவர்கள் இருவரின் நட்பும் நெருக்கமானது. 

திடீரென்று ஒருநாள் "சிவா உன்னை நான் ரொம்ப மிஸ் பண்றேண்டா" என்று தனுஷ்  டுவிட்டரில் போட கோலிவுட்டில் பற்றிக் கொண்டது. இதுவரை தனுஷ் தன் மனைவி குழந்தைகளை மிஸ் பண்ணுவதாக கூட டுவிட்டரில் போட்டதில்லை. சிவா மீது அப்படி என்ன பாசம் என்ற பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில்தான் சிவா நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் ஆடியோ ரிலீஸ் சத்யம் தியேட்டரில் நடந்தது. அங்கு தனுசும், சிவாவும் மாறி மாறி கொட்டிய பாசத்தால் சத்தியம் தியேட்டரே சென்டிமெண்டால் உருகியது.  விழாவில் முதலில் சிவகார்த்திகேயன் இப்படி பேசினார்.

"எனது முதல் படம் மெரீனா.  டி.வி காம்பயராக இருந்த என்னை சினிமாவுக்கு கொண்டு வந்த பாண்டிராஜ் சாரை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். 

மெரீனா நன்றாக ஓடினாலும் அடுத்து எனக்கு வாய்ப்பு தர யாரும் முன்வரவில்லை. டி.வி. தொகுப்பாளன்தானப்பா அவனுக்கெல்லாம் மார்க்கெட் கிடையாதுன்னு ஒதுக்கிட்டாங்க, ஏண்டா சினிமாவுக்கு வந்தோம்னு இருந்திச்சு. 

அப்ப என்னோட பிரண்ட்சுங்க சிலபேர் ஆளுக்கு கொஞ்சம் பணம்போட்டு என்னைய வச்சு ஒரு படம் எடுக்குறதுக்காக பிளான் பண்ணிக்கிட்டிருந்தாங்க. 

அப்பதான் தனுஷ் சாரை மீட் பண்ணினேன். என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்கன்னு கேட்டார். விபரத்தைச் சொன்னேன். நானே உங்கள வச்சு ஒரு படம் எடுத்து ஹீரோவா கொண்டு வந்து நிறுத்துறேன்னு அந்த ஸ்பாட்டுலேயே சொன்னார். 

அப்படித்தான் எதிர்நீச்சல் கிடைச்சுது. இன்னிக்கு ஹன்சிகாவோட நடிக்கிறேன். ஏ.ஆர்.முருகதாஸ் சார் படம் பண்ணப்போறேன்னா அதுக்கு காரணம் தனுஷ் சார்தான். 

அவருக்கும் எனக்கும் இருக்கிறது நட்புன்னு டக்குன்னு சொல்லிட முடியாது அதுக்கும் மேல... அதுக்கும் மேலன்னா... அதுக்கும்ம்ம்ம் மேல... இவ்வாறு சிவகார்த்திகேயன் உருகி உருகி பேசினார்.

நாட்டாமை - சண்டக்கோழி மோதல்

சீனியர் நாட்டாமை நடிகருக்கும், ஜூனியர் சண்டக்கோழி நடிகருக்கும் நடக்கும் மோதல்தான் இப்போ சினிமா வட்டாரத்துல ஹாட் டாபிக். 

ஆக்டருங்க சங்கத் தலைவர் பதவியிலேருந்து நாட்டாமைய கீழே இறக்கியே தீருவது என சண்டக்கோழி நடிகர் தீவிரமா வேலை செய்றாராம். 

ஆக்டருங்க சங்க இடத்தை கைமாற்றி விட்டதுல நாட்டாமையும், அவரது மச்சான் நடிகரும் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்களாம். அதற்கு ஆதாரபூர்வமா வச்சிருக்கிறாராம் சண்டக்கோழி. 

இதை எல்லா யங் ஹீரோக்கள்கிட்டேயும் காட்டி நாட்டாமைக்கு எதிரா கையெழுத்து வேட்டை நடத்துறாராம். எல்லா யங் ஹீரோவும் கையயெழுத்து போட்டுருக்காங்களாம். 

ஆக்டருங்க சங்கத்துக்கு யங் லீடரு வரட்டும்னு உலக நாயகனும் கையெழுத்துப் போட்டுட்டாராம். இனி உச்ச நடிகருக்கிட்ட மட்டும் கையெழுத்து வாங்கிட்டா மீடியாவ கூப்பிட்டு பேச இருக்காறாம் சண்டக்கோழி. இதுல வேடிக்கை என்னான்னா... சண்டக்கோழி பின்னாடி முதல் ஆளா நிக்குறது நாட்டாமையோட லட்சுமிகரமான மகள்தானாம்.

ஆகஸ்ட் 3ல் இரண்டாம் உலகம் ஆடியோ ரிலீஸ்
ஆர்யா நடித்து வரும் இரண்டாம் உலகம் படத்தின் ஆடியோ ரிலீஸ் வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. 

மயக்கம் என்ன படத்திற்கு பிறகு டைரக்டர் செல்வராகவன் இயக்கி வரும் படம் இரண்டாம் உலகம். இப்படத்தில் ஆர்யா ஹீரோவாகவும், அனுஷ்கா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். 

இருவரும் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார், ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். 

பி.வி.பி. சினிமாஸ் சார்பில் பிரசாத் வி.பொட்ரிலு இப்படத்தை பிரமாண்ட முறையில் தயாரித்துள்ளது. 

சுமார் இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிடும் எண்ணத்தில் இருக்கின்றனர் படக்குழுவினர். 

அதற்கு முன்பாக படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை சென்னையில் வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி பிரமாண்டமாக நடத்துகின்றனர். 

இதற்கான ஏற்பாடுகளை பி.வி.பி. சினிமாஸ் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. 

கொன்னுட்டாங்களே - நடிகையின் தாய்குலம் புலம்பல்

2 வது லயன் வேகமா ஒடுறதுல எல்லோருக்கும் சந்தோஷம்தான்.  ஆனா ஒரே ஒருத்தர் மட்டும் ரொம்ப கவலையில இருக்காராம். அது அந்தப்படத்தில் சத்யா ரோலில் நடித்த நடிகையோட அம்மா குலம். 

"அந்த இயக்குனரு என் மகளை அநியாயமா கொன்னுட்டாரேன்னு (படத்துலதான்) எல்லோர்கிட்டேயும் புலம்பிக்கிட்டிருக்காராம். 

அந்த உசரமான நடிகை வில்லன்களால் கொல்லப்பட்டு விடுவார். அதுக்குபிறகு தன் மகள் தான் ஹீரோவுக்கு ஜோடியா வருவா, ஒரு வேளை பார்ட் 3 எடுத்தா உங்க மகள்தான் ஹீரோயின்னு சொல்லியிருந்தாங்களாம். 

கதைய அப்படியே மாற்றி எடுத்து என் மகளை கொன்னுட்டாரேன்னு புலம்பிக்கிட்டு திரிகிறாராம் அம்மா குலம்.

சம்பளம் தான் பெஸ்ட் மற்றதெல்லாம் வேஸ்ட்

சம்பள விஷயத்தில்,கறார் கண்ணம்மாவாக உருவெடுத்துள்ளார், காஜல்அகர்வால். தன்னை புக் செய்ய வரும் தயாரிப் பாளர்களிடம்,வெட்டுஒண்ணு, துண்டு ரெண்டு என்ற கணக்கில் தான் பேசுகிறாராம்.

முன்னணி நிறுவனம், பின்னணி நிறுவனம்,பெரிய நடிகர்,சிறிய நடிகர், பெரிய பட்ஜெட், சிறியபட்ஜெட் என, எதைப்பற்றியும்கவலைப்படுவ தில்லையாம், காஜல். 

தற்போதைய சூழ்நிலையில்,மார்க்கெட்டில் தனக்கு கிராக்கி நிலவுவதை பார்த்து, அதற்கேற்ற படி,பல லகரங்களை சம்பளமாக கேட்கிறாராம். அதற்கு சம்மதித்தால் மட்டுமே, கால்ஷீட் கொடுக்கிறார்.

தன்னுடன், எவ்வளவு பெரியநடிகர்கள் நடித்தாலும், அதற்காக சம்பளத்தை குறைக்க மாட்டாராம்."காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பது, என் பாலிசி என்கிறார், காஜல். 

ஆகஸ்ட் 9 ல் விஜய்யின் தலைவா ரிலீஸ்


விஜய் ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி, ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த தலைவா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது. 

துப்பாக்கி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய், டைரக்டர் விஜய் இயக்கத்தில் நடித்துள்ள படம் தலைவா. முதன்முறையாக விஜய்யுடன் அமலாபால் ஜோடி சேர்ந்துள்ளார். 

இவருடன் இன்னொரு நடிகையாக இந்தி நடிகை ராகிணியும் இணைந்துள்ளார். இவர்களுடன் சந்தானம், ராஜிவ் பிள்ளை, அபிமன்யூ சிங், சுரேஷ், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்ரீ மிஸ்ரி புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார்.

ஆக்ஷ்ன் மற்றும் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடந்து வந்தன. 

சமீபத்தில் விஜய் பிறந்தநாளின் போது தலைவா படத்தின் ஆடியோவும், டிரைலரும் வெளியிடப்பட்டது. பாட்டும் சரி, டிரைலரும் சரி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. 

இந்நிலையில் தலைவா படம் வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி ரிலீஸ் ஆவதாக ஐயங்கரன் இண்டர்‌நேஷனல் பிலிம் நிறுவனம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் தலைவா படத்தை வேந்தர் மூவிஸ் வெளியிடுகிறது. தமிழகம் தவிர்த்து வெளிநாடுகளில் ஐயங்கரன் நிறுவனம் வெளியிடுகிறது. 

தனுஷைத் தொடர்ந்து விஜய்யும் இந்தி நடிகை கேட்கிறாராம்

தனுஷ் ராஞ்சனா படத்தில் சோனம்கபூருடன் நடித்தாலும் நடித்தார் இப்போது கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பலருக்கு இந்தி நடிகைகளை ஜோடியாக்க வேண்டும் என்ற மோகம் அதிகரித்து விட்டது. 

அதோடு, இப்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தான் நடிக்கும் படத்திலும் இந்தி நடிகையே வேண்டும் என்று அடம் பிடிக்கிறாராம் தனுஷ். 

அதனால், வழக்கம்போல் காஜல்அகர்வால், தமன்னா என்று பட்டியல் போட்டுக்கொண்டிருந்த கே.வி.ஆனந்த் இப்போது தனுஷின் வேண்டுகோளை ஏற்று ஆலியாபட்டை தேர்வு செய்துவிட்டார்.

இதையடுத்து ஏற்கனவே சச்சின் படத்தில் பிபாசா பாசுவை தமிழுக்கு கொண்டு வந்த விஜய்யும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தான் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு பாலிவுட் நாயகிதான் வேண்டும் என்று கேட்டுள்ளாராம். 

அதனால், ஏற்கனவே இந்தி நடிகைகளுக்கு பரிட்சயமானவரான முருகதாஸ், விஜய் எதிர்பார்ப்பதை விட ஒரு பிரபல பாலிவுட் நடிகையை அவருடன் டூயட் பாட வைக்கும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறாராம்.

லிங்குசாமி தயாரிப்பில் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன்


லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மேலும் இரண்டு படங்களை தயாரிக்க இருக்கிறது. தேசிய விருது பெற்ற சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படம் ஒன்றை இயக்குகிறது. 

விஜய்சேதுபதியை தென்மேற்கு பருவக்காற்று படத்தில் அறிமுகப்படுத்தியவர் சீனு ராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது. 

அடுத்து பூபதி பாண்டியன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை தயாரிக்கிறது. 

காமெடி ஆக்ஷன் படங்ககளை இயக்குவதில் வல்லவரான பூபதி பாண்டியன் தற்போது விஷால், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நடிக்கும் பட்டத்துயானை படத்தை இயக்கி வருகிறார்.

"இந்த இரண்டு படத்தின் படப்பிடிப்புகளும் செப்டம்பர் மாதம் துங்குகிறது. ஹீரோக்கள் தவிர மற்ற கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது. 

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடிக்கும் படமும் விரைவில் துவங்குகிறது. 

இந்த மூன்று படஙங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்து விடும். 

அதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது" என்கிறார் தயாரிப்பாளரும், லிங்குசாமியின் சகோதரருமான என்.சுபாஷ் சந்திரபோஸ்.

தலைமறைவாக இருக்கும் இயக்குனர்

முகமூடியின் தோல்விக்கு பிறகு மிஷ்கின் சினிமா நண்பர்கள் தொடர்பை முற்றிலுமாக துண்டித்து விட்டு தனிமையில் வாழ்கிறார். தனது செல்போன், இண்டர்நெட் உட்பட அத்தனை  தொடர்புகளையும் துண்டித்து விட்டார். 

அவரின் உதவியாளர்களில் ஒருவர் மட்டுமே அவருடன் தொடர்புகொள்ள முடியும். ஒரு படம் எடுத்து ஜெயித்துக் காட்டிய பிறகுதான் தன் முகத்தையே வெளியில் காட்டுவது என்ற முடிவில் இருக்கிறாராம். 

தனது ஓநாயும், ஆட்டுக்குட்டியும் படம் பற்றி சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர். "நான் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறேன். 

இதன் பிறகு என்னை தேட வேண்டாம், படம் ஹிட்டாகும்போது இதே மாதிரி நான் உங்களை அழைத்துப் பேசுவேன்" அதுவரை நான் தனியாக வேட்டையாடும் ஒநாய்தான் என்றாராம்.

விஸ்வரூபம் 2 படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டார் கமல்


கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் விஸ்வரூபம். மாபெரும் வெற்றி பெற்ற அந்த படத்தை அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளை களமாக வைத்து கதை பண்ணியிருந்தார் கமல். 

ஆனால், இப்போது இரண்டாவது பாகத்தை முழுக்க முழுக்க இந்தியாவில் நடப்பது போல் படமாக்கியிருக்கிறார். 

சில டெக்னீஷியன்கள் மட்டுமே மாற்றப்பட்ட நிலையில், முதல் பாகத்தில் நடித்த அதே நடிகர்-நடிகையரே இரண்டாவது பாகத்திலும் நடித்துள்ளனர்.

மேலும், இதுவரை இரண்டாம் பாகம் பற்றிய எந்த தகவல்களையும் வெளியிடாமல் இருந்த கமல், இப்போது தமிழ் மற்றும் இந்தி போஸ்டர்களை வெளியிட்டுள்ளார். 

இந்நிலையில், விஸ்வரூபம் முதல் பாகம் சர்ச்சைகளை கிளப்பியதால், இரண்டாம் பாகத்தில் என்ன விசயத்தை படமாக்கியிருக்கிறாரோ என்று பலரும் போஸ்டரை உற்று நோக்கத் தொடங்கியுள்ளனர்.

சிங்கம் 2 - சினிமா விமர்சனம்நாயகர் சூர்யா, நாயகி அனுஷ்கா, இயக்குனர் ஹரி உள்ளிட்ட "சிங்கம்" பட வெற்றிக் கூட்டணி, அந்த வெற்றியின் தொடர்ச்சியாக இணைந்திருக்கும் படம் மட்டுமல்ல, சிங்கத்தின் பாகம் இரண்டாகவும் வெளிவந்திருக்கும் படம் தான் "சிங்கம்-II".

"சிங்கம்-I"-ன் க்ளைமாக்ஸில் வில்லன் பிரகாஷ்ராஜை ஆந்திராவில் வைத்து அழித்தொழித்ததும் இனி போலீஸ் உத்தியோகமே வேணாம், காதலி அனுஷ்காவை கல்யாணம் கட்டிக்கொண்டு சொந்தமான பலசரக்கு கடையில் பொட்டலம்‌ போட்டு பொழைச்சுக்குறேன் என்று காதலியுடன் காரில் ஏறி பறக்கும் சூர்யாவை வழி மறித்து அமைச்சர் ராமநாதன், தூத்துக்குடி துறைமுகப்பகுதியில் ஆயுத கடத்தல் நடப்பதாக தகவல், அதை ஆப்த ரெக்கார்டு போலீஸாக இருந்து கண்காணித்து உரிய நேரத்தில் சார்ஜ் எடுத்து கொண்டு அந்த கும்பலை கூண்டோடு கைலாசம் அனுப்பும்படி அறிவுறுத்தப்படுவார். அதன்படி சூர்யாவும் தன் வருங்கால மனைவி அனுஷ்காவிற்கே தெரியாமல் போலீஸ் பொழப்பு நடத்த உறுதி பூணுவார் அல்லவா?! அதன் தொடர்ச்சி சிங்கம் பகுதி-2 படமாகி உளறது. 

அதாகப்பட்டது, போலீஸ் உத்தியோகம் போனதால் சூர்யா - அனுஷ்காவின் திருமணமும் தள்ளிபோகிறது. தன் அப்பாவிடமும் தான் போலீஸ்தான் என்ற உண்மையை சூர்யா சொல்லாமல், அடித்தாலும் (வடிவேலு பாணியில்...) அடித்து கேட்டாலும் சொல்லாமல், தூத்துக்குடி தனியார் பள்ளி ஒன்றில் என்.சி.சி மாஸ்டராக செம பில்டப் கொடுக்கிறார். 

அதே பள்ளியில் படிக்கும் பெரிய இடத்துப் பெண் ஹன்சிகா, சூர்யாவை ஒன் சைடாக காதலிக்கிறார். ஹன்சிகாவின் காதலை புறக்கணிக்கும் சூர்யாவோ தூத்துக்குடி கடற்கரையை தீவிரமாக கண்காணிக்கிறார். அங்கு ஆயுத கடத்தல் இல்லை... சர்வதேச அளவில் போதை பொருட்கள் கடத்தப்படுகிறது! 

விடுவாரா சூர்யா சரியான நேரத்தில் சார்ஜ் எடுத்துக் கொண்டு வில்லன்களை வெளுத்து கட்டுகிறார். மயிரிழையில் தப்பிக்கும் சர்வதேச போதை கடத்தல் தாதா டேனியையும் சவுத் ஆப்ரிக்கா போய் சட்டையை பிடித்து இழுத்து வந்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார். இடை‌யி‌டையே அனுஷ்காவுடன் டூயட் பாடுகிறார். ஹன்சிகாவின் கனவில் வருகிறார்... இது தான் சிங்கம்-2வின் கமர்ஷியல், கலர்புல் கதை மொத்தமும்!!

சூர்யா - துரை சிங்கமாக ஆக்ஷ்ன், லவ், சென்டிமெண்ட், காமெடி கலாட்டா என வழக்கம் போலவே சகல ஏரியாக்களிலும் சகட்டு மேனிக்கு புகுந்து விளையாடி இருக்கிறார். என்.சி.சி. மாஸ்டராகவும், போலீஸ் டிஎஸ்பியாகவும் அவர் காட்டும் மிடுக்களுக்கு அடிக்கலாம் ஒரு ராயல் சல்யூட்! அதுவும் ஆபரேஷன் டி எனும் பெயரில் டேனியைத் தேடி ஆப்ரிக்கா போய், அந்த ஊர் காவலர்களுடன் சேர்ந்து அவர் பண்ணும் அதிரடியில் என்னதான் கமர்ஷியல் சினிமா என்றாலும் தியேட்டரே உறைந்து ‌போகிறது... நிஜம் என நம்பி! வாவ் ஹாட்ஸ் ஆப் சூர்யா!

அனுஷ்கா, ஹன்சிகா என இரண்டு நாயகியர். இருவரில் அனுஷ்கா அரேபிய குதிரை என்றால், ஹன்சிகா துள்ளி விளையாடும் புள்ளி மான்! ஆனால், இந்த சிங்கத்துக்கு என்னாச்சு...?! புள்ளிமானின் இளங்கறியை ருசிக்காமல், பந்தயக்குதிரை மீதே பால் ஈர்ப்பு கொண்டு பவனி வருகிறது...?! சிங்கம் பகுதி-2 லாவது அனுஷ்காவை கொன்று, ஹன்சிகாவை சூர்யா ஜோடியாக்குவார் இயக்குனர் எனப் பார்த்தால் ஹன்சிகாவை போட்டுத்தள்ளி அனுஷ்காவை திருப்திபடுத்தியிருக்கிறார் இயக்குனர் ஹரி!

சந்தானம், நாசர், மன்சூரலிகான், ரகுமான், தலைவாசல் விஜய், ராதாரவி, மனோராமா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள். இவர்களுடன் வில்லனாக ஹாலிவுட் நடிகர் டேனி ஸ்பானியும் பாத்திரமறிந்து மிரட்டியிருக்கிறார். பலே, ‌பலே! பிரியனின் ஓவிய ஒளிப்பதிவு, தேவிஸ்ரீ பிரசாத்தின் மிரட்டல் மியூசிக் இரண்டும் படத்திற்கு பெரிய ப்ளஸ்!

ஸ்கூல் பிரேயரில் தேசிய கீதம் பாடும்போது சவுண்டு விடும் ஒரு மாணவனின் அடாவடி அப்பாவையும் மற்றும் அவரது அடியாட்களையும் போட்டு தாக்கும் சூர்யா, அதே பிரேயரில் தமிழ்த்தாய் வாழ்த்து ‌பாடும் போது நடப்பது, திரும்புவது... என திரிவது... உள்ளிட்ட ஒரு சில குறைபாடுகள் இருப்பினும் ஹரியின் இயக்கத்தில் "சிங்கம் - II", கமர்ஷியல் "தங்கம்"! வசூல் "வைரம்"! ஆகலாம்!!

சமந்தாவின் அடுத்த இன்னிங்ஸ்


தற்போது தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாக இருக்கிறார் சமந்தா. அதோடு, தெலுங்கில் ஓரளவு கிளாமராகவும் நடிப்பவர், தமிழில் இன்னமும் கோடு தாண்டாமல் நடித்து வருகிறார். 

இந்த நிலையில், சின்னத்திரையில் நல்ல கதைகள் கிடைத்தால்கூட நடிப்பேன் என்று கூறியுள்ளார். மார்க்கெட் கெட்டியாக இருக்கும் நேரத்தில் இதுமாதிரியெல்லாம் யாராவது யோசிப்பார்களா? என்று சிலர் சமந்தாவிடம் கேட்டார்களாம்.

அதற்கு, தென்னிந்தியாவில்தான் சினிமாவில் நடிப்பவர்கள் சின்னத்திரையில் முகம் காட்டினாலே மட்டமாக நினைக்கிறார்கள். 

ஆனால், பாலிவுட்டில் அப்படியில்லை, அமீர்கான், சல்மான்கான் போன்ற முன்னணி ஹீரோக்களே டி.வியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள். 

டிவியில் முகம் காட்டுவதால் சினிமாவில் அவர்களுக்கு யாரும் சான்ஸ் தர தயங்குவதில்லை. 

அதனால் எனக்கு நல்ல கதைகள் கிடைத்தால் டி.வியில் நடிப்பேன். அப்படி நடித்து எதிர்வரும் காலங்களில் தென்னிந்திய நடிகர்-நடிகைகளும் சினிமா-சின்னத்திரை என இரண்டு துறைகளிலும் அங்கம் வகிக்கும் நிலைமையை ஏற்படுத்துவேன் என்கிறார் சமந்தா.

சிவகார்த்திகேயனுக்கு ஹன்சிகா ஜோடியா?


மான்கராத்தே என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார் என்பது முடிவாகி விட்டது. 

அதனால் இந்த இனிப்பு செய்தியை கோலிவுட்டில் உள்ள தனது நட்பு வட்டாரங்களுக்கு தெரியப்படுத்தி தனது ரேஞ்ச் உயர்ந்து விட்டதை நோட்டீஸ் கொடுக்காத குறையாய் சொல்லி வருகிறார் சிவகார்த்திகேயன்.

ஆனால், இந்த சேதியை கோலிவுட்டில் உள்ள முன்னணி கலைஞர்கள் சிலர் நம்ப மறுக்கிறார்களாம். ஹன்சிகாவின் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. 

அப்படி நடிக்கும் எல்லா படங்களிலுமே முன்னணி ஹீரோக்களுக்குத்தான் ஜோடியாக நடிக்கிறார். இன்னும் சில முன்னணி நடிகர்களின் படங்கள் அவரது கால்சீட்டுக்காக காத்திருக்கினன்றன. 

இந்த நேரத்தில் எப்படி வளர்ந்து வரும் நடிகரின் படத்துக்கு கால்சீட் கொடுத்து அவரது ரேஞ்சை தாழ்த்திக்கொள்வார் என்கிறார்களாம்.

இன்னும் சிலர், எங்களுக்கும் சினிமா தெரியும். இதே பீல்டுல வருடக்கணக்குல குப்பை கொட்டிக்கிட்டுதான் இருக்கோம். 

யாராவது மஞ்சப்பையை தூக்கிட்டு ஏவிஎம் வாசல்ல வந்து நிப்பாங்க அவங்ககிட்ட போயி சொல்லுங்க தம்பி, காதை தீட்டி வச்சிக்கிட்டு கேட்பாங்க என்று சிலர் கிண்டலாகவும பேசுகிறார்களாம்.

இதனால் நம்ம வளர்ச்சி பிடிக்காம இப்படி பேசுறாங்களா? இல்லை வேண்டுமென்றே நம்மளை கலாய்க்கிறாங்களா? என்பது புரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
Related Posts Plugin for WordPress, Blogger...