தனுஷ் - சிவகார்த்திகேயன் புதிய பாசமலர்கள்தனுஷ், சிவகார்த்திகேயன் நட்புதான் இப்போது சினிமா வட்டாரத்தில் லேட்டஸ்ட் பரபரப்பு. தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தில் தனது பள்ளி நண்பராக சிவகார்த்திகேயனை நடிக்க வைத்தார். 

அதன் பிறகு தனது முதல் தயாரிப்பான ‘‘எதிர்நீச்சல்’’ படத்தில் சிவகார்த்திகேயனை சோலோ ஹீரோவாக்கினார். இதில் இவர்கள் இருவரின் நட்பும் நெருக்கமானது. 

திடீரென்று ஒருநாள் "சிவா உன்னை நான் ரொம்ப மிஸ் பண்றேண்டா" என்று தனுஷ்  டுவிட்டரில் போட கோலிவுட்டில் பற்றிக் கொண்டது. இதுவரை தனுஷ் தன் மனைவி குழந்தைகளை மிஸ் பண்ணுவதாக கூட டுவிட்டரில் போட்டதில்லை. சிவா மீது அப்படி என்ன பாசம் என்ற பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில்தான் சிவா நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் ஆடியோ ரிலீஸ் சத்யம் தியேட்டரில் நடந்தது. அங்கு தனுசும், சிவாவும் மாறி மாறி கொட்டிய பாசத்தால் சத்தியம் தியேட்டரே சென்டிமெண்டால் உருகியது.  விழாவில் முதலில் சிவகார்த்திகேயன் இப்படி பேசினார்.

"எனது முதல் படம் மெரீனா.  டி.வி காம்பயராக இருந்த என்னை சினிமாவுக்கு கொண்டு வந்த பாண்டிராஜ் சாரை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். 

மெரீனா நன்றாக ஓடினாலும் அடுத்து எனக்கு வாய்ப்பு தர யாரும் முன்வரவில்லை. டி.வி. தொகுப்பாளன்தானப்பா அவனுக்கெல்லாம் மார்க்கெட் கிடையாதுன்னு ஒதுக்கிட்டாங்க, ஏண்டா சினிமாவுக்கு வந்தோம்னு இருந்திச்சு. 

அப்ப என்னோட பிரண்ட்சுங்க சிலபேர் ஆளுக்கு கொஞ்சம் பணம்போட்டு என்னைய வச்சு ஒரு படம் எடுக்குறதுக்காக பிளான் பண்ணிக்கிட்டிருந்தாங்க. 

அப்பதான் தனுஷ் சாரை மீட் பண்ணினேன். என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்கன்னு கேட்டார். விபரத்தைச் சொன்னேன். நானே உங்கள வச்சு ஒரு படம் எடுத்து ஹீரோவா கொண்டு வந்து நிறுத்துறேன்னு அந்த ஸ்பாட்டுலேயே சொன்னார். 

அப்படித்தான் எதிர்நீச்சல் கிடைச்சுது. இன்னிக்கு ஹன்சிகாவோட நடிக்கிறேன். ஏ.ஆர்.முருகதாஸ் சார் படம் பண்ணப்போறேன்னா அதுக்கு காரணம் தனுஷ் சார்தான். 

அவருக்கும் எனக்கும் இருக்கிறது நட்புன்னு டக்குன்னு சொல்லிட முடியாது அதுக்கும் மேல... அதுக்கும் மேலன்னா... அதுக்கும்ம்ம்ம் மேல... இவ்வாறு சிவகார்த்திகேயன் உருகி உருகி பேசினார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...