காமெடி நடிகரின் முத்தத்தால் புலம்பும் நடிகை



தமிழில் படவாய்ப்புகள் கிடைக்காத காதல் நடிகைக்கு இரண்டெழுத்து படம் மூலம் சந்தன காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. 

சந்தன நடிகர் தற்போது உச்சத்தில் இருப்பதால், இதன்மூலம் மீண்டும் தமிழில் ஒரு ரவுண்டு வரலாம் என முடிவெடுத்து, நடிக்க ஒப்புக் கொண்ட நாயகி இப்போது ஏன் ஒப்புக் கொண்டோம்? என புலம்பி வருகிறாராம்.

இதற்கு காரணம், இந்த படத்தில் சந்தன நடிகர், காதல் நடிகையின் கன்னத்தில் முத்தமிடுவதுபோல் காட்சியமைக்கப்பட்டிருந்ததாம். 

மேலும் நடிகையின் இடுப்பை சந்தன நடிகர் கிள்ளுவது போன்ற காட்சியும் எடுக்கப்பட்டதாம். 

அப்போதெல்லாம் கூச்சப்படாமல் நடித்துவிட்டு வந்த நடிகை, தற்போது தனியாக ரூமில் உட்கார்ந்து புலம்ப ஆரம்பித்திருக்கிறாராம்.

இதுவரை தான் நடித்த படங்களில் இடுப்பை கிள்ளுவது போல எந்த காட்சியும் இல்லை. ஆனால் இந்த படத்தில் ஒரு காமெடி நடிகர் தன் இடுப்பை கிள்ளிவிட்டாரே என நினைத்து நினைத்து புலம்புகிறாராம். 

தமிழில் ரீ என்ட்ரி பண்ணலாமுன்னு வந்தா நம்மல வீட்டுக்கே திருப்பி அனுப்பிடுவாங்க போலிருக்கே... என்று புலம்பும் நடிகை மீண்டும் தன்னுடைய தாய்மொழிக்கே நடிக்க போய்விடலாமா எனவும் யோசித்து வருகிறாராம். 

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...