தனுஷூன் வேங்கை படத்திற்கு சிக்கல் நீங்கியது

தனுஷூன், "வேங்கை" படத்தின் தலைப்பை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதையடுத்து, "வேங்கை" படத்திற்கான சிக்கல் தீர்ந்தது.

ஹரி இயக்கத்தில், தனுஷ், தமன்னா, ராஜ்கிரண், கஞ்சா கருப்பு ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் "வேங்கை".

இப்படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், "வேங்கை" படத்தின் தலைப்பை பயன்படுத்த கூடாது என்று கலைராஜன் என்பவர் சிலதினங்களுக்கு முன்னர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அதில் எங்களது நிறுவனத்தின் சார்பில், "வேங்கை" என்ற படத்தை தயாரிக்கிறோம். இதுதொடர்பாக இப்படத்தின் தலைப்பு ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ளோம்.

அப்படி இருக்கையில், இப்போது தனுஷ், தமன்னா நடிப்பில் "வேங்கை" என்ற படம் உருவாகியுள்ளது.

எனவே இந்தபடத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமது மனுவில் கூறியிருந்தார். இந்தவழக்கை விசாரித்த நீதிபதி, "வேங்கை" படத்தின் தலைப்பை உபயோகப்படுத்த தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரனைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், வேங்கை படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து ஆடியோ ரிலீஸ் கூட நடந்துவிட்டது. இனிபோய் படத்தின் தலைப்பை மாற்றுவது என்பது சாத்தியமற்றது.

எனவே வேங்கை படத்தின் தலைப்பை தொடரலாம் என்று தீர்ப்பளித்தார். நீதிபதிகளின் உத்தரவையடுத்து வேங்கை படத்திற்கான சிக்கல் தீர்ந்தது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

தெய்வத்திருமகள் படத்திற்கு யு சான்று

பல்வேறு படதலைப்புகளின் மாற்றத்திற்கு பின்னர் இறுதியாக "தெய்வத்திருமகள்" என்று மாறியிருக்கும் விக்ரம் படத்திற்கு "யு" சான்று கிடைத்திருக்கிறது.

விஜய் இயக்கத்தில், விக்ரம், அனுஷ்கா, அமலாபால், சந்தானம், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் "தெய்வத்திருமகள்".

இந்தபடத்தில் மூளை வளர்ச்சியற்ற இளைஞனாக, ஒரு குழந்தை போல் விக்ரம்நடித்திருக்கிறார் விக்ரம். ஆரம்பத்தில் படத்தலைப்பு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையால், மூன்று முறை படத்தின் தலைப்பை மாற்றினர்.

இந்நிலையில் படத்தலைப்பு பிரச்சனை எல்லாம் சரியாகி ரிலீஸ்க்கு தயாராகி இருக்கிறது.

இதனிடையே இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், "தெய்வத்திருமகள்" படத்திற்கு "யு" சான்று அளித்தனர்.

மேலும் படத்தை அருமையாக எடுத்திருப்பதாக கூறி டைரக்டர் விஜய்யையும் பாராட்டினர்.

ஜீவாவை இயக்குகிறார் கவுதம் மேனன்!

"கோ" படத்தின் வெற்றியின் மூலம் ஜீவாவின் மதிப்பு மேலும் ஒருபடி முன்னேறியிருக்கிறது. மேலும் அவரை இயக்க பலரும் போட்டி போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கவுதம் வாசுதேவ் மேனன் படத்தில் நடிக்க ஜீவாவிற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தில் கவுதமிற்கு கிடைத்த வெற்றி, "நடுநிசி நாய்கள்" படத்திற்கு கிடைக்கவில்லை.

இதற்கு காரணம் அந்தபடத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளும், அதனால் அவருக்கு கிடைத்த எதிர்ப்பும் தான்.

இந்நிலையில் மீண்டும் ஒரு அருமையான காதல் கதை ஒன்றை உருவாக்கி இருக்கிறார் கவுதம். அதில் நாயகனாக ஜீவா நடிக்கிறார். ஜீவாவிற்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

சமந்தா ஏற்கனவே "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்திலும் நடித்து இருந்தார்.

அதேபோல் இந்தபடத்தை "கோ" படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க இருக்கிறது.

ஏற்கனவே இந்த நிறுவனம் தான், "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தையும் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா

தெலுங்குப் படமொன்றில் சீதாதேவியாக நடிப்பதால், தன் காதலன் மற்றும் வருங்கால கணவரான பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்துள்ளார் நடிகை நயன்தாரா. சிம்புவுடனான காதல் முறிவுக்கு பிறகு, ஆறுதலாக இருந்த பிரபுதேவாவை காதலித்து வருகிறார் நயன்தாரா.

இவருடனான காதலுக்காகவே தன் காதல் மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. விவாகரத்து வழக்கில் இன்னமும் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில், தீர்ப்பு வந்ததும் திருமணம் செய்ய பிரபுதேவா - நயன்தாரா ஜோடி தயாராக இருக்கிறது.

இதற்கிடையில் திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போடும் திட்டத்தில் இருக்கும் நயன்தாரா, தமிழில் புதுப்படங்கள் எதிலும் கமிட் ஆகவில்லை. தெலுங்கில் கமிட் ஆன ஸ்ரீராமராஜ்யம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படம்தான் நயன்தாராவுக்கு கடைசி படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து பிரபுதேவாவுடன் தாலி கட்டாமல் வாழ்ந்து வரும் நயன்தாரா ஸ்ரீராம ராஜ்யம் படத்தில் சீதா தேவியாக நடிக்கக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியதும், பின்னர் அந்த எதிர்ப்பு அடங்கியதும் தனிக்கதை.

இப்போது சூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. சமீபத்தில் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.

படத்தில் சீதையாக நடிப்பதால் சுத்தமாக இருக்க வேண்டும் என விரும்பிய நயன்தாரா சூட்டிங் முடியும் வரை அசைவ உணவுகளை தவிர்த்து விரதம் இருந்துள்ளார்.

அதேபோல பிரபுதேவாவை சந்தித்தால் விரதத்துக்கு பங்கம் வந்துவிடும் என்பதால் அவரைக் கூட பார்க்காமல் தனிமையில் இருந்தாராம் நயன்.

சீதை வேடத்துடன் ஒன்றிப் போக வேண்டும் என்பதாலேயே இத்தனை சுய கட்டுப்பாடுகளையும் போட்டுக் கொண்டாராம் நயன்தாரா. இந்த தகவலை மெய்சிலிர்க்க சொல்லி பெருமைப்படுகிறது ஸ்ரீராமராஜ்யம் படக்குழு.

சிக்கலில் தனுஷின் வேங்கை

டைரக்டர் ஹரி இயக்கத்தில், தனுஷ், தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள "வேங்கை" படத்தின் தலைப்பை பயன்படுத்த இடைக்கால தடைவிதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

"உத்தமபுத்திரன்" படத்தை தனுஷ் நடித்திருக்கும் படம் "வேங்கை". இப்படத்தை டைரக்டர் ஹரி இயக்கியுள்ளார். படத்தில் தனுஷூக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.

இவர்கள் தவிர ராஜ்கிரண், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் சூட்டிங் ‌எல்லாம் முடிந்து ரிலீசுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் "வேங்கை" படத்தின் தலை‌ப்பை உபயோகிக்க கூடாது என்று டைரக்டர் கலைச் செல்வம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அதில் எங்களது நிறுவனத்தின் சார்பில், "வேங்கை" என்ற படத்தை தயாரிக்கிறோம். இதுதொடர்பாக இப்படத்தின் தலைப்பு ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ளோம்.

அப்படி இருக்கையில், இப்போது தனுஷ், தமன்னா நடிப்பில் "வேங்கை" என்ற படம் உருவாகியுள்ளது. எனவே இந்தபடத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமது மனுவில் கூறியிருந்தார்.

இந்தவழக்கை விசாரித்த நீதிபதி, "வேங்கை" படத்தின் தலைப்பை உபயோகப்படுத்த தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பான வழக்கை ஜூலை 1ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அமலா பால்க்கு அக்காவான சமீரா

லிங்குசாமியின் "வேட்டை" படத்தில் அமலா பாலின் அக்காவாக நடிக்கிறார் சமீரா ரெட்டி. பையா படத்திற்கு பிறகு டைரக்டர் லிங்குசாமி இயக்கி, தயாரிக்கும் படம் வேட்டை.

இந்தபடத்தில் ஆர்யா, மாதவன், அமலா பால், சமீரா ரெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் மாதவன், ஆர்யாவின் அண்ணனாக நடிக்கி்றார்.

அதேபோல் அமலா பாலின் அக்காவாக சமீரா நடிக்கிறார். படம் குறித்து லிங்குசாமி கூறும்போது, இது ஒரு குடும்பத்தில் நடக்கும் கதை.

இதில் காதல், பாசம் என்று எல்லாம் கலந்த கலவையாக வேட்டை படம் இருக்கும். நிச்சயம் இந்தபடம் ரசிகர்களின் மனதை வேட்டையாடும்.

தீபாவளிக்கு படத்தை திரையிட வேண்டி படப்பிடிப்பு வேகமாக ந‌டந்து வருகிறது. திரைக்கு வந்தபின்னர் ஒவ்வொரு குடும்பமும் கொண்டாடும் விதமாக வேட்டை படம் அமையும் என்கிறார் லிங்கு.

முன்னதாக இப்படத்தை க்ளவு நைன் மூவிஸ் சார்பில் துரை தயாநிதி தயாரிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென இப்படத்திலிருந்து துரை தயாநிதி விலகிக்கொள்ள, தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் சார்பில் லிங்குசாமியே தயாரிக்கிறார்.

லிங்குசாமியுடன் சேர்ந்து சுபாஷ் சந்திரபோஸ் என்பவரும் சேர்ந்து தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தீபாவளிக்கு வருகிறான் அரவான்

அங்காடித்தெரு படத்திற்கு பிறகு வசந்தபாலன் இயக்கி வரும் "அரவான்" படம் தீபாவளியன்று திரைக்கு வர இருக்கிறது.

"ஆல்பம்", "வெயில்", "அங்காடித்தெரு" உள்ளிட்ட ஹிட் படங்களாக கொடுத்த வசந்தபாலன் அடுத்து, "அரவான்" என்ற படத்தை இயக்கி வருகிறார்.

18ம் நூற்றாண்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் மிருகம், ஈரம் படங்களின் நாயகன் ஆதி, பேராண்மை தன்ஷிகா, பசுபதி, பாலிவுட் நடிகர் கபீர் பேடி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

அங்காடித்தெரு படத்திற்கு பிறகு, வசந்தபாலனின் அரவான் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை, தென்காசி, ஓகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது.

மேலும் படத்தின் நாயகன் ஆதிக்கு இந்தபடம், நிச்சயம் தன் சினிமா வாழ்வில் ஒரு திருப்புமுனை ஏற்படுத்தி தரும் படமாக அமையும் என்று கூறுகின்றனர்.

அவன் இவன் படத்திற்கு எதிர்ப்பு

சமீபத்தில் வெளியான அவன் இவன் படத்தில் சிங்கம்பட்டி ஜமீனை பற்றியும், காரையார் சொரிமுத்தையனார் கோவிலை பற்றியும் அவதூறான காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் பயங்கர எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால், மதுஷாலினி, ஜனனி அய்யர், அம்பிகா, ஆர்.கே., உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களுடன் கடந்த 17ம் தேதி திரைக்கு வந்தபடம் அவன் இவன். பாலா படமா அல்லது பலான படமான என்று சந்தேகத்தை ஏற்படுத்தும் படமாக அவன் இவன் படம் அமைந்திருப்பதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தபடத்திற்கு சிங்கப்பட்டி ஜமீன் தரப்பில் இருந்து பயங்கர எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அதாவது படத்தில் ஜமீன் தீர்த்தபதி என்று ஒரு கிராமத்தை காட்டுகிறார்கள். அதில் தீர்த்தபதி எனும் கேரக்டரில் நடித்திருப்பவர், குடிப்பது போன்றும், படத்தின் முடிவில் அவரை நிர்வாணமாய் ஓடவிடுவது போன்றும் காட்சி அமைப்புகள் உள்ளன.

அதேபோல் மற்றொரு காட்சியில் சொரிமுத்து என்ற கேரக்டரை உருவாக்கி இந்த கோவிலை நம்பிதான் நீங்க வாழ்ந்திட்டிருக்கிறீங்க என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. இதற்கு அம்பை,ஆலங்குளம் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

அம்பை,சிங்கை மற்றும் நெல்லையில் பல இடங்களில் இதுபற்றிய கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அவன்-இவன் படத்துக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக சிங்கம்பட்டி சமஸ்தானம் அறிவித்து உள்ளது.

இதுபற்றி சிங்கம்பட்டி சமஸ்தானம் இளைய ஜமீன்தார் டி.எம்.டி. தாயப்பராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சிங்கம்பட்டி ஜமீன் மூலம் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கடந்த 1910ல் தீர்த்தபதி ராஜா பெயரில் இலவச ஆஸ்பத்திரிகள், பள்ளி கூடங்கள் அமைக்கப்பட்டு, இன்றும் அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது. நெல்லை டவுன் தேரோட்ட வீதிகளில் தண்ணீர் டேங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள காரையார் சொரிமுத்தையனார் கோயில் இந்த ஜமீனுக்கு பாத்தியப்பட்டது. இங்கு, பல்வேறு விழாக்கள் சிறப்பாக நடந்து வருகின்றன. ஆடி அமாவாசையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அன்று, சிங்கம்பட்டி ஜமீன் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி ராஜா, ராஜ தரிசனம் வழங்கி வருகிறார். இன்றும் இப்பகுதி மக்கள் ஜமீன் மீது பாசத்துடனும், மரியாதையுடனும் இருந்து வருகின்றனர். ஜமீன் மூலம் மக்களுக்கு இயன்ற உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.

புகழ் பெற்ற இந்த ஜமீனையும், பழமை வாய்ந்த சொரிமுத்தையனார் கோயிலையும் “அவன் இவன்’ படத்தில் அவதூறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குனர் பாலாவை கண்டிப்பதுடன், அவதூறு காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ரசிகர்களுக்கு ரஜினி உருக்கமான கடிதம்

உங்களை மகிழ்விப்பது தான் என் லட்சியம் என, ரசிகர்களுக்கு நடிகர் ரஜினி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சிறுநீரக கோளாறு காரணமாக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினி, தீவிர சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறி, மருத்துவமனையிலிருந்து திரும்பியுள்ளார்.

தற்போது, சிங்கப்பூரில் தங்கியுள்ள அவர், தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். தமிழக முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆகியோருடன் தொலைபேசி மூலம் பேசிய ரஜினி, ரசிகர்களுக்கு தன் கைப்பட நான்கு பக்க கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

வாழ்க்கை என்ற விளையாட்டில், காசை மேலே சுண்டிவிடுவது தான் மனிதனின் வேலை, அது கீழே விழும்போது, பூவா, தலையா என்பதை ஆண்டவன் முடிவு செய்கிறான். என் வாழ்க்கையில், பணம், மருந்து, அறிவியல், சிறந்த மருத்துவர்கள் என, ஒரு புறம் எனக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

மற்றொரு புறம், சிறப்பு பூஜைகள், பிரார்த்தனைகள் செய்தும், உண்ணாவிரதம் இருந்தும் நான் நலமடைய என் ரசிகர்கள் செய்த வேண்டுதலும், என் மீது அவர்கள் காட்டிய அன்பும் தான், என்னைக் காப்பாற்றி உள்ளது. விரைவில், "ராணா படம் மூலம் ரசிகர்களை மகிழ்விப்பேன். அது தான் என் லட்சியம்.

இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.

ரசிகர்களுக்கு கடிதம் எழுதுவதற்காக, பேப்பர் மற்றும் பேனாவை கொண்டு வரச் சொல்லி, ரஜினியே கடிதத்தை எழுதியதாக, ரஜினியின் பி.ஆர்.ஓ., கூறியுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை இசபெல்லா மருத்துவமனையில் ஏப்ரல் 29ம் தேதி ரஜினி சேர்க்கப்பட்டார்.

அன்றைய தினமே வீடு திரும்பிய ரஜினி, மீண்டும் இசபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கிருந்து, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு, மே 13ம்தேதி மாற்றப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனைக்கு, மே 27ம்தேதி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்சி மாற்றத்துக்கு விஜய்தான் காரணம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிற்கு நடிகர் விஜய்தான் காரணம் என்று டைரக்டரும், நாம் தமிழர் கட்சித்தலைவருமான சீமான் சீரியஸாக பேசி காமெடி செய்துள்ளார்.

பெப்ஸி விஜயன் மகன் சபரீஷ் ஹீரோவாக அறிமுகமாகும் மார்க்கண்டேயன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர்கள் விஜய் மற்றும் சல்மான்கான், டைரக்டர் சீமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விஜயலட்சுமி விவகாரத்தில் சிக்கியிருக்கும் டைரக்டர் சீமான் பேசுவதற்காக மைக்கை பிடித்ததும், விழாவுக்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் சீரியஸாக கேட்க ஆரம்பித்த‌னர். ஆனால் சீமானோ காமெடியாக பேசினார்.

அதிலும் நடிகர் விஜய் பற்றிய பேசிய பேச்சை கேட்டதும் அரங்கத்தினுள் ஒரே கிச்சு கிச்சு. சீமான் பேசும்போது, தமிழ்நாட்டில் ஒரு புரட்சியை நடத்திவிட்டு சத்தம் போடாமல் அமர்ந்திருக்கிறார் என் தம்பி விஜய். அவர் நடத்திய மவுன புரட்சிதான் இன்று ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படவே வழி வகுத்தது, என்றார்.

தேர்தல் நேரத்தில் வெளிப்படையாக பிரச்சாரம் செய்ய தயங்கி, தனது அப்பாவை தேர்தல் களத்திற்கு அனுப்பி வைத்தவர் விஜய். அதிமுகவுக்கு ஆதரவாக விஜய் அறிக்கை தர மாட்டார்;

பேட்டி கொடுக்க மாட்டார் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரே இரு மாதங்களுக்கு முன்பு பலமுறை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். அதேப்போலவே விஜய் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததே தவிர விஜய் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை.

இன்னும் சொல்லப்போனால் தேர்தலுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கக் கூட மறுத்துவிட்ட விஜய், ஜெயித்த பிறகு சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை இப்படியிருக்க... டைரக்டர் சீமானோ... ஆட்சி மாற்றத்திற்கு விஜய்தான் காரணம் என்று பேசியிருப்பது... அதுவும் ரொம்பவே சீரியஸாக பேசியிருப்பது சரியா? தவறா? என்பதை ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும்.

புதிய சர்ச்சையில் மங்காத்தா

டைரக்டர் வெங்கட்பிரபுவின் மங்காத்தா படம் புதிய சர்ச்சையில் சி்க்கியிருக்கிறது. நேரடி தமிழ்ப்படம் என்ற பெயரில் வெளியானாலும் அந்த படம் ஏதோஒரு மொழியின் தழுவல் என்று சர்ச்சையை கிளப்புவதற்கென்றே சினிமாவில் சிலர் இருக்கிறார்கள்.

அப்படியொரு சர்ச்சையில்தான் இப்போது மங்காத்தா சிக்கியிருக்கிறது. சரோஜா படம் ரீலிஸ் ஆனபோது அந்‌த படம் பேபல் என்ற படத்தின் தழுவல் என்று கூறப்பட்டது.

அதனை மறுக்காத வெங்கட்பிரபு, பேபல் படத்தின் ஸ்கி‌‌ரீன்ப்ளேயின் பாதிப்பிலேயே சரோஜா திரைக்கதையை அமைத்தேன் என்று கூறினார்.

இப்போது அவரது இயக்கத்தில் உருவாகி வரும் மங்காத்தா படமும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. இந்தியில் மேட்ச் பிக்சிங்கை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இம்ரான் ஹஸ்மி நடித்த ஜான்னெட் படத்தின் தழுவலாகத்தான் மங்காத்தா உருவாகியிருக்கிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் அதனை அடியோடு மறுத்திருக்கிறார் மங்காத்தா தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி. இரண்டு படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியிருக்கும் அவர், படம் வெளிவந்தால் ரசிகர்களுக்கே இது தெ‌ரிந்துவிடும் என்றும் கூறியிருக்கிறார்.

எங்கள் ஆசான் பட பஞ்சாயத்து கேப்டனுக்கு தெரியுமா?

சில ஆண்டுகளுக்கு முன் கேப்டன் விஜயகாந்த் நடித்து வெளிவந்த "எங்கள் ஆசான்" படத்தை செங்கல்பட்டு - பாண்டிச்சேரி உள்ளிட்ட சில ஏரியாக்களுக்கு பல லட்ச ரூபாய் கொடுத்து வாங்கி ரிலீஸ் செய்திருந்தார், பாண்டியை சேர்ந்த முத்து எனும் லாரி அதிபர்.

அப்படம் ‌அவர் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் தராமல் போகவே, அந்தபடத்தை தான் வாங்கி வினியோகிக்க காரணமாயிருந்த தியேட்டர் கன்பார்மர் ஆப்பிரகாம் என்பவரை அழைத்துக் கொண்டு "எங்கள் ஆசான்" படத்தின் தயாரிப்பாளரும், காமெடி நடிகருமான தங்கராஜை அவரது சென்னை சாலி கிராமம் அலுவலகத்திற்கு சில நாட்களுக்கு முன் சந்தித்திருக்கிறார் முத்து!

அப்பொழுது மேற்படி ஏரியாக்களில் எங்கள் ஆசான் படத்தால் எனக்கு கிட்டத்தட்ட 14லட்சங்கள் நஷ்டம். அதை உடனடியாக வட்டியும் அசலுமாக தர வேண்டும் என வாக்குவாதம் செய்ய, தயாரிப்பாளர் தங்கராஜோ எனக்கு அப்படத்தால் வரவேண்டிய பணம் இன்னமும் நிறைய இடங்களில் இருந்து வரவில்லை.

அது கைக்கு வந்ததும் பார்க்கலாம், என கையை விரிக்க, கடுப்பான பாண்டி முத்து, தயாரிப்பாளர் தங்கராஜ் தரவேண்டிய பணத்துக்கு நீதான் பொறுப்பு என உடன் வந்த தியேட்டர் கன்பார்மர் ஆபிரகாமை தன் காரிலேயே வைத்து அடியாட்கள் மூலம் அடித்து உதைத்து, வெற்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கி கொண்டதுடன், அவர் வசம் இருந்த பிளான்க் செக்குகளையும் எடுத்துக் கொண்டு அவரை வடபழனி குமரன் காலனி பகுதியில் காரிலிருந்து தள்ளிவிட்டு விட்டு பாண்டிச்சேரிக்கு கிளம்பி போய்விட்டார் முத்து.

அவ்வாறு போகும் போது போலீஸீக்கு போனால் உன் குடும்பத்தையே காலி செய்வோம் எனும் மிரட்டல் வேறு!

எங்கள் ஆசான் படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகாமல் தள்ளி தள்ளி ரிலீஸ் ஆனதால் பணத்தை கொடுத்து எம்.ஜி., எனும் மினிமம் கியாரண்டி முறையில் படத்தை வாங்கிய முத்து, அதை ரிலீஸ் நேரத்தில் டிஸ்டிரிபியூஷன் முறையில் மாற்றி அக்ரிமெண்ட் செய்து கொண்டார் தயாரிப்பாளர் தங்கராஜூடன்.


அதனால் நஷ்டத்தை தயாரிப்பாளர் தங்கராஜ் தரவேண்டும் என்பது முறையே என்றாலும், அதற்காக தங்கராஜூக்கு இவரை அறிமுகம் செய்து வைத்த அப்பாவி தியேட்டர் கன்பார்மர் அபிரகாமை அடித்து உதைப்பது, வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்குவதும் எந்த விதத்தில் நியாயம்...? எனக்கேட்டு ஆபிரகாமும் அவரது நண்பர்களும் பாண்டி முத்து மீது சென்னை வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.


இது ஒருபக்கம் என்றால் மற்றொருபக்கம் தயாரிப்பாளரும், நடிகருமான தங்கராஜ், முத்து தன்னிடம் பணத்தை கேட்க வந்தபோது, அடுத்தபடத்தில் அட்ஜெஸ்ட் செய்வதாக நான் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காமல் அடியாட்களை அழைத்து வந்து எனது செல்போனை பிடிங்கி மிரட்டினார் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் பாண்டிமுத்து மீது பரபரப்பு புகார் கொடுத்திருக்கிறார். இதுசம்பந்தமாக போலீசிலும், புரடியூசர் கவுன்சிலிங்லும் பஞ்சாயத்து நடந்து வருகிறது.


பொதுவாக இதுமாதிரி ஒரு படத்தில் அடைந்த நஷ்டத்தை அடுத்த படத்தில் சம்பந்தப்பட்ட டிஸ்ட்ரி பியூட்டர்களுக்கு சரி செய்வது தமிழ்திரை தயாரிப்பாளர்களின் வழக்கம். நடிகர் ஜீவாவின் கால்ஷீட்டை கைவசம் வைத்திருக்கும் தயாரிப்பாளர் தங்கராஜூக்கு அதற்கான வாய்ப்பையே தராமல் வம்பு செய்யும் பாண்டிமுத்து, ஏற்கனவே சண்டை படத்தின் வினியோக உரிமையை, சில ஏரியாக்களுக்கு ஷக்தி சிதம்பரத்திடமிருந்து வாங்கி ரிலீஸ் செய்து துட்டு பார்த்தபின், செகண்ட் ரிலீஸீக்காக விழுப்புரம் பகுதியை, வினியோகஸ்தர் ஒருவருக்கு கொடுத்து ரூபாய் 2லட்சத்திற்காக அவர் வீடு புகுந்து அவரை தூக்கியதோடு, அவர் வீட்டு நகை, நட்டுக்களை எல்லாம் விற்று தன் பணத்தை எடுத்துக்கொண்டு போன குற்றச்சாட்டும் தற்போது பாண்டிமுத்து மீது கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

கருணாஸ்க்கு தெரியுமா...?

காமெடி நடிகர் செந்தில் கதாநாயகராக நடிக்க சில வருடங்களுக்கு முன் பூஜை போடப்பட்ட திரைப்படம் "ஆதிவாசியும் அற்புதபேசியும்" பி.பி.சி பிக்சர்ஸ் சார்பில் பாபு என்பவர் கதை எழுதி தயாரிக்க, சுரேஷ் கிருஷ்ணாவின் உதவியாளர் மாலன் என்பவர் இப்படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

ஏதேதோ காரணங்களால் சில நாட்கள் படப்பிடிப்புடன் நின்றுபோன இப்படத்தின் கதையை இப்பொழுது கருணாஸிடம் சொல்லி இருக்கிறார் இயக்குநர் மாலன்.

கதையை கேட்டவுடன் உடனடியாக ஹீரோவாக நடிக்க சம்மதித்து, தானே பு‌ரடியூசராகவும் ஆக சம்மதித்துள்ளார்.

இதைக்கேட்டு சந்தோஷப்பட்ட மாலன், "ஆதிவாசியும் அற்புதபேசியும்" கதை விவாதத்திலும், களத்தேர்விலும் இறங்கி இருக்கிறார்.

விஷயம் கேள்விப்பட்ட பி.பி.சி பிக்சர்ஸ் பாபு, என் கதைக்கு யாருடா உரிமை கொண்டாடுவது என...?

மாலன் மீதும் கருணாஸ் மீதும் இயக்குநர் சங்கத்தில் புகார் கொடுக்க ரெடியாகி வருகிறாராம்! இந்த விஷயம் கருணாஸ்க்கு தெரியுமா...?

அஜீத்தின் மங்காத்தாவில் விஜய்...?

கோலிவுட்டின் இப்போதைய லேட்டஸ்ட் பரபரப்பு விஜய், அஜீத் பற்றிய செய்தி தான். அஜீத் நடிப்பில் உருவாகி வரும் அவரது 50வது படமான மங்காத்தாவில், கெஸ்ட் ரோலில் நமது இளைய தளபதி விஜய்யும் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக எல்லா தொழிலும் போட்டி இருக்கிறது, அதுபோல சினிமாவிலும் போட்டி உண்டு. அதில் அஜீத்துக்கும், விஜய்க்கும் சொல்லவே தேவையில்லை.

முன்பெல்லாம் இவர்களது படத்தில் அஜீத்தை தாக்கி விஜய் பஞ்ச் டயலாக் பேசுவது போன்றும், விஜய்யை தாக்கி அஜீத் பஞ்ச் டயலாக் பேசுவதும் தொடர்கதையாக இருந்தது. இது இவர்களது ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்தது.

இருவரது ரசிகர்களும் எப்போதும் முறைத்து கொண்டுதான் இருப்பார். ஆனால் நிஜத்தில் விஜய்யும், அஜீத்தும் நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க மாட்டார்களா...? என இவர்களது ரசிகர்களுக்கு எப்போதும் ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. இப்போது அந்த ஏக்கம் பூர்த்தியாகி இருக்கிறது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 50வது படமான மங்காத்தா படத்தில், படத்தின் நாயகி த்ரிஷா தவிர அர்ஜூன், லட்சுமிராய், அஞ்சலி, வைபவ், பிரேம்ஜிஅமரன் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

இந்நிலையில் மங்காத்தாவில் ஒரு காட்சியில், கெஸ்ட் ரோலில் நமது இளைய தளபதி விஜய்யும் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் மற்ற நடிகர்கள் படங்களில் கெஸ்ட்ரோலில் வந்துபோய் உள்ளார்.

ஆனால் அதெல்லாம் பெரிய விஷயமல்ல. அஜீத் படத்தில், விஜய் கெஸ்ட்ரோலில் நடித்திருப்பதாக கூறுவது தான் பெரிய விஷயம். இந்தசெய்தி குறித்த உறுதியான தகவல் இல்லை. ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருப்பின், நிச்சயமாக இருவரது ரசிகர்களுக்கும் இது கொண்டாட்டமான செய்தி தான்.

தற்போது மங்காத்தா படத்தின் இறுதிகட்ட சூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் படத்தின் சூட்டிங் முடிந்து இறுதிகட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. ஜூலை இரண்டாவது வாரத்தில் மங்காத்தா படம் திரைக்கு வருகிறது.

ஒஸ்தியான பப்ளிசிட்டிக்காக சிம்பு ‌கொடுக்கும் பரிசு

ஒரு சினிமா எடுப்பதைவிட, அந்த சினிமாவை பப்ளிசிட்டி செய்வதில்தான் படத்தின் வெற்றியும், தோல்வியும் அடங்கியிருக்கிறது என்பதை சமீபத்திய படங்களின் சில வெற்றிகள் நிரூபித்திருக்கின்றன.

அந்த வகையில் சிம்பு, தான் அடுது்து நடிக்கும் ஒஸ்தி படத்தின் பப்ளிசிட்டிக்காக கல்வியில் ஜெயித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கவுள்ளார்.

படத்திற்கு ப்பளிசிட்டிக்கு, பப்ளிசிட்டியும் ஆச்சு; மற்றவர்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும் என கருதிய படக்குழு, சமீபத்தில் நடந்த பிளஸ்டூ மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளை அறிவித்துள்ளது.

மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்றுள்ள மாணவ - மாணவிகள் அனைவருக்கும் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் (பாலாஜி ரியல் மீடியா) அறிவித்துள்ளார்.

மாநில அளவில் ப்ளஸ் டூவில் முதலிடம் பெற்ற ரேகா மலர்விழிக்கு ரூ 1 லட்சம் ரொக்கம் வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற நித்யா (ஸ்ரீவில்லிபுத்தூர்), ரம்யா (கோபிச்செட்டிப் பாளையம்), சங்கீதா (சேலம்), மின்னலாதேவி (செய்யார்), ஹரினி (பொன்னேரி) ஆகியோருக்கு தலா ரூ 20 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.

ஜூன் 15ம்தேதி நடக்கும் விழாவில் இந்த ரொக்கப் பரிசுகளை நடிகர் சிம்பு வழங்கவுள்ளார்.

காவலன் படத்தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல்!

வீடு புகுந்து மிரட்டிய தயாரிப்பாளர் ஷக்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, "காவலன் பட தயாரிப்பாளர் ரோமேஷ்பாபு, சென்னை மாநகர் போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தார்.

சென்னை, தி.நகரைச் சேர்ந்தவர் ரோமேஷ் பாபு; சமீபத்தில், நடிகர் விஜய் நடித்து வெளிவந்த, "காவலன் படத்தின் தயாரிப்பாளர். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் ஒன்றை அளித்தார்.


அப்போது அவருடைய வக்கீல் ரவிராஜ பாண்டியன் கூறியதாவது:

"காவலன் படத்தை பெரும் பொருட்செலவில் ரோமேஷ் பாபு தயாரித்தார். அப்போது, வினியோகஸ்தர் என்ற பெயரில் தயாரிப்பாளரும், இயக்குனருமான ஷக்தி சிதம்பரம், எங்களை அணுகினார். அதன் பின், காவலன் படத்திற்கு தானே தயாரிப்பாளர் என்று கூறி பலரிடம் ஒப்பந்தம் போட்டுள்ள தகவல் எங்களுக்கு கிடைத்தது.

இது தொடர்பாக, கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. வழக்கு முடிவில், காவலன் படத்திற்கு தயாரிப்பாளர் ரோமேஷ் பாபு மட்டுமே என்றும், இதில், ஷக்தி சிதம்பரம் தலையிடக் கூடாது என்றும், ஷக்தி சிதம்பரத்திடம் ஒப்பந்தம் போட்டு பணம் கொடுத்தவர்கள், தனிப்பட்ட முறையில் அவரிடம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கோர்ட் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, படத்திற்கான சிக்கல் விலகி, வெளிவந்தது.

படத்திற்கான "சாட்டிலைட் உரிமத்தை ரோமேஷ்குமார், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு 5.5 கோடி ரூபாய்க்கு கொடுத்தார். அதில், 2.75 கோடி ரூபாயை அந்த நிறுவனம் கொடுத்துவிட்டது.

மீதமுள்ள 2.75 கோடி ரூபாய்க்கு கடந்த நான்கு மாதங்களாக சாக்கு போக்கு சொல்லி வருகிறது. இந்நிலையில், கடந்த 5ம் தேதி, ஷக்தி சிதம்பரம் மற்றும் இரண்டு பேர், ரோமேஷ் குமாரின் வீட்டிற்கு வந்தனர்.

வீட்டில் இருந்த வயதான பெற்றோரிடம், " உன் மகன், அந்த "டிவி நிறுவனத்திற்கு செல்லக் கூடாது. "டிவி நிறுவனத்தினரை பார்த்தால் உன் மகன் போட்டோவில் தான் இருப்பான். என் பலம் என்ன? எனக்கு பின்னாடி யார் இருக்கிறார்கள் என்று உன் மகனுக்கு தெரியவில்லை.

என் மீதோ, "டிவி நிறுவனம் மீதோ புகார் கொடுத்தால், உன் மகன் இல்லாமல் போய்விடுவான். அவனுக்கு மூன்று நாள் கெடு, என்று மிரட்டிச் சென்றுள்ளனர். தொடர்ந்து, ரோமேஷ்க்கு போன் செய்து, " இன்னும் இரண்டு நாட்களில் பணம் எனக்கு வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு ஊரைவிட்டு ஓடிவிடு.

இல்லையென்றால் அவ்வளவுதான் என்று மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக, நாங்கள் கமிஷனரிடம் புகார் அளித்தோம். கமிஷனர், இந்த புகாரை சென்னை மத்திய குற்றப் பிரிவு விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளார். இவ்வாறு ரவிராஜ பாண்டியன் கூறினார்.

விஷாலுக்கு விருது வாங்கி தரும் படம் அவன் இவன்

"பிதாமகன்" படம் விக்ரமிற்கு எப்படி தேசிய விருது பெற்று தந்ததோ, அதுபோல "அவன் இவன்" படமும், விஷாலுக்கு நிச்சயம் விருது பெற்று தரும் என்று கூறுகிறார் டைரக்டர் பாலா.

"சேது", "பிதாமகன்", "நான் கடவுள்" உள்ளிட்ட படங்களை இயக்கிய டைரக்டர் பாலா, அடுத்து ஆர்யா, விஷாலை வைத்து அவன் இவன் என்ற படத்தை இயக்கியுள்ளார். பாலாவின் வழக்கமான படத்தை போன்று இல்லாமல், இந்தபடத்தை சிறிது கமர்ஷியலாக எடுத்திருக்கிறார்.

இந்நிலையில் "அவன் இவன்" குறித்து பாலா பேசியதாவது, பொதுவாக என்னுடைய படங்கள் உணர்வுபூர்வமாக இருக்கும், ஆனால் "அவன் இவன்" படம் சற்று வேடிக்கை நிறைந்ததாகவும், அதேசமயம் உணர்வுபூர்வமாகவும் இருக்கும்.

ஒரு கிராமத்தில் இரண்டு திருடுர்கள் செய்யும் அட்டகாசமும், அவர்களது குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களும் தான் படத்தின் கதை. இந்தபடத்தில் விஷால் மிகவும் வித்யாசமான கேரக்டரில் நடித்து இருக்கிறார். அவன் இவனுக்கு பல ரிஸ்க் எடுத்திருக்கிறார்.

படத்தில் ஒரு காட்சியில் மிகவும் உயரமான இடத்தில் இருந்து குதிப்பது போன்று அமைக்கப்பட்டது. அதில் டூப் போடாமல் அவரே நடித்திருந்தார். மேலும் சூட்டிங்கில பல காட்சிகளில் அவருக்கு அடிபட்டது.

அதையும் தாண்டி அவர் சிறப்பாக நடித்தார். குறிப்பாக படம்முழுக்க மாறு கண்ணுடன் நடித்திருப்பது மிகுந்த சிரமமான காரியம். ஆனால் அதையும் அவர் சிறப்பாக நடித்து கொடுத்தார். நிச்சயம் இந்தபடம் அவருக்கு விருது பெற்று தரும் படமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

பொதுவாக பாலா தான், தன்னுடைய படங்களை எடுக்க இழுத்தடிப்பார். ஆனால் இந்ததடவை பாலா படத்தை சீக்கிரமாக முடித்துவிட்டார்.

ஆனால் ரிலீஸ் செய்வதில் ஏற்பட்ட பல பிரச்சனைகளால் இப்படம் தொடர்ந்து தள்ளிக்கொண்டே போனது. இப்போது இறுதியாக இம்மாதம் ஜூன் 17ம் தேதி அவன் இவன் திரைக்கு வர இருக்கிறது.

18 வயசுக்காக சிம்பு பாடிய பாட்டு

தனது தந்தை டி.ராஜேந்தர் போலவே நடிப்பு, கதை, டைரக்ஷன், பாடல்வரி அமைத்தல், பாட்டு பாடுதல், நடனம் என்று பல துறைகளில் அசத்தி வருபவர் சிம்பு அலைஸ் எஸ்.டி.ஆர்., குறிப்பாக பாட்டு பாடுவதில் வல்லவர்.

மெலோடியஸ் சாங்ஸ் முதல் குத்துப்பாட்டு வரை தன்னுடைய ரம்மியமான குரலில் பாடி அசத்தியிருக்கிறார். இப்போது "18 வயசு" படத்தில், ஒரு பாட்டு ஒன்று பாடி அசத்தியிருக்கிறார்.

"ரேனிகுண்டா" படத்தை இயக்கிய அதே டீம், மீண்டும் "18 வயசு" என்ற படத்தை இயக்கியுள்ளது. இதில் ஹீரோவாக "ரேனிகுண்டா" ஜானி நடிக்கிறார், பன்னீர்செல்வம் இயக்குகிறார்.

புதுமுகம் சார்லஸ் என்பவர் இசையமைத்து இருக்கிறார். அடர்ந்த காட்டு பகுதியில் "18 வயசு" ப‌டத்தை இயக்கி உள்ளனர். "ரேனிகுண்டா" படத்தை காட்டிலும், "18 வயசு" படம் ஆக்ஷன் நிறைந்த திரில்லர் படமாக உருவாகி இருக்கின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர்தான் இப்படத்தின் ஆடியோ ரிலீசானது, வ‌ிரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. ஏற்கனவே சிம்பு, "ரேனிகுண்டா" படத்திலும் ஒரு பாட்டு பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதது.

காதலித்து ஏமாற்றியதாக சீமான் மீது பரபரப்பு புகார்

திருமணம் செய்வதாக கூறி நெருங்கி பழகி விட்டு, இப்போது திருமணத்துக்கு மறுப்பதாக டைரக்டரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் செய்துள்ளார்.

பிரண்ட்ஸ், கலகலப்பு, ராமச்சந்திரா, சூரி, எஸ்.மேடம், வாழ்த்துக்கள், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை விஜயலட்சுமி. ஏராளமான கன்னட படங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார். டைரக்டர் சீமான் இயக்கத்தில் உருவான வாழ்த்துக்கள் படத்தில் நடித்தபோது டைரக்டர் - நடிகை என்ற முறையில் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். 4 பக்க புகார் மனுவில் சீமானுக்கும், தனக்கும் இருந்த உறவு பற்றி விரிவாக எழுதியிருக்கும் விஜயலட்சுமி, அதில் நானும், டைரக்டர் சீமானும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம்.

திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். இதுபற்றி விசாரணை நடத்த சென்னை வளசரவாக்கம் போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால் இந்த புகாரை டைரக்டர் சீமான் மறுத்துள்ளார். சீமான் சார்பில் அவரது வக்கீல் சந்திரசேகரன் கூறுகையில், நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்தது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை.

விஜயலட்சுமி, அவரது அக்காள் விவாகரத்து வழக்கு தொடர்பாக உதவி கேட்டு, சீமானை ஒருமுறை சந்தித்து பேசினார். அது தொடர்பாக உதவி செய்யும்படி, சீமான் என்னிடம் கூறினார். அந்த ஒருமுறை மட்டுமே விஜயலட்சுமி சீமானை சந்தித்து பேசினார். அதன்பிறகு, அவர் சீமானை பார்க்கவே இல்லை.

சீமான் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். அவரது பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். இதை கெடுக்கவும், அரசியலில் சீமானுக்கு உள்ள புகழை அழிக்கவும், திட்டமிட்டு சதி செய்து, இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

யாரோ விஜயலட்சுமியை தூண்டி விட்டுள்ளனர். புகார் கொடுத்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதை சட்டப்பூர்வமாக சந்திப்போம், என்றார்.

ரசிகர்களுக்காக அறிக்கை வெளியிட ரஜினி முடிவு

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் பற்றி ஏராளமான வதந்திகள் தொடர்ந்து உலா வந்தவண்ணம் உள்ளது.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரசிகர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிட ரஜினி முடிவு செய்துள்ளார். ரஜினிகாந்த் சென்னையில் சிகிச்சை பெற்றபோது அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவின.

மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லும் முன் ரசிகர்களுக்காக ரஜினிகாந்த் வாய்ஸ் வெளியிடப்பட்டது. அதில் ரசிகர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்; நல்லபடியா திரும்பி வருவேன், என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ரஜினி உடல்நிலை குறித்து அவரது மருமகனும், நடிகருமான ‌தனுஷ் அளித்த பேட்டியில், ரஜினிகாந்த் தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ரஜினிகாந்த் சிங்கப்பூரில் நலமாக இருக்கிறார்.

அவருடைய உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கிறது. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவருக்கு மிக சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனால்தான் அவர் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற முடிந்தது. அவருடைய உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருடைய நோய்க்கான மூல காரணத்தை சிங்கப்பூர் டாக்டர்கள் கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்கிறார்கள். அதை குணப்படுத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை.

அவருடைய நுரையீரலில் இருந்த பிரச்சினை எப்போதோ குணப்படுத்தப்பட்டு விட்டது. இப்போது அவர் எல்லா உணவுகளையும் சாப்பிடுகிறார். டி.வி.யில் படம் பார்க்கிறார். எழுந்து நடக்கிறார். மூன்று நாட்களில் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்துவிடுகிற அளவுக்கு அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றது போல் இருக்கட்டும் என்று நாங்களாகத்தான் அவரை மேலும் சில நாட்கள் ஆஸ்பத்திரியில் உட்கார வைத்து இருக்கிறோம். இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் அவர் சென்னை திரும்பி விடுவார். இங்கே வந்ததும் அவர் ஒரு அறிக்கை விட இருக்கிறார், என்றார்.
Related Posts Plugin for WordPress, Blogger...