அமலா பால்க்கு அக்காவான சமீரா

லிங்குசாமியின் "வேட்டை" படத்தில் அமலா பாலின் அக்காவாக நடிக்கிறார் சமீரா ரெட்டி. பையா படத்திற்கு பிறகு டைரக்டர் லிங்குசாமி இயக்கி, தயாரிக்கும் படம் வேட்டை.

இந்தபடத்தில் ஆர்யா, மாதவன், அமலா பால், சமீரா ரெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் மாதவன், ஆர்யாவின் அண்ணனாக நடிக்கி்றார்.

அதேபோல் அமலா பாலின் அக்காவாக சமீரா நடிக்கிறார். படம் குறித்து லிங்குசாமி கூறும்போது, இது ஒரு குடும்பத்தில் நடக்கும் கதை.

இதில் காதல், பாசம் என்று எல்லாம் கலந்த கலவையாக வேட்டை படம் இருக்கும். நிச்சயம் இந்தபடம் ரசிகர்களின் மனதை வேட்டையாடும்.

தீபாவளிக்கு படத்தை திரையிட வேண்டி படப்பிடிப்பு வேகமாக ந‌டந்து வருகிறது. திரைக்கு வந்தபின்னர் ஒவ்வொரு குடும்பமும் கொண்டாடும் விதமாக வேட்டை படம் அமையும் என்கிறார் லிங்கு.

முன்னதாக இப்படத்தை க்ளவு நைன் மூவிஸ் சார்பில் துரை தயாநிதி தயாரிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென இப்படத்திலிருந்து துரை தயாநிதி விலகிக்கொள்ள, தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் சார்பில் லிங்குசாமியே தயாரிக்கிறார்.

லிங்குசாமியுடன் சேர்ந்து சுபாஷ் சந்திரபோஸ் என்பவரும் சேர்ந்து தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...