பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா

தெலுங்குப் படமொன்றில் சீதாதேவியாக நடிப்பதால், தன் காதலன் மற்றும் வருங்கால கணவரான பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்துள்ளார் நடிகை நயன்தாரா. சிம்புவுடனான காதல் முறிவுக்கு பிறகு, ஆறுதலாக இருந்த பிரபுதேவாவை காதலித்து வருகிறார் நயன்தாரா.

இவருடனான காதலுக்காகவே தன் காதல் மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. விவாகரத்து வழக்கில் இன்னமும் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில், தீர்ப்பு வந்ததும் திருமணம் செய்ய பிரபுதேவா - நயன்தாரா ஜோடி தயாராக இருக்கிறது.

இதற்கிடையில் திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போடும் திட்டத்தில் இருக்கும் நயன்தாரா, தமிழில் புதுப்படங்கள் எதிலும் கமிட் ஆகவில்லை. தெலுங்கில் கமிட் ஆன ஸ்ரீராமராஜ்யம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படம்தான் நயன்தாராவுக்கு கடைசி படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து பிரபுதேவாவுடன் தாலி கட்டாமல் வாழ்ந்து வரும் நயன்தாரா ஸ்ரீராம ராஜ்யம் படத்தில் சீதா தேவியாக நடிக்கக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியதும், பின்னர் அந்த எதிர்ப்பு அடங்கியதும் தனிக்கதை.

இப்போது சூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. சமீபத்தில் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.

படத்தில் சீதையாக நடிப்பதால் சுத்தமாக இருக்க வேண்டும் என விரும்பிய நயன்தாரா சூட்டிங் முடியும் வரை அசைவ உணவுகளை தவிர்த்து விரதம் இருந்துள்ளார்.

அதேபோல பிரபுதேவாவை சந்தித்தால் விரதத்துக்கு பங்கம் வந்துவிடும் என்பதால் அவரைக் கூட பார்க்காமல் தனிமையில் இருந்தாராம் நயன்.

சீதை வேடத்துடன் ஒன்றிப் போக வேண்டும் என்பதாலேயே இத்தனை சுய கட்டுப்பாடுகளையும் போட்டுக் கொண்டாராம் நயன்தாரா. இந்த தகவலை மெய்சிலிர்க்க சொல்லி பெருமைப்படுகிறது ஸ்ரீராமராஜ்யம் படக்குழு.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...