சிக்கலில் தனுஷின் வேங்கை

டைரக்டர் ஹரி இயக்கத்தில், தனுஷ், தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள "வேங்கை" படத்தின் தலைப்பை பயன்படுத்த இடைக்கால தடைவிதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

"உத்தமபுத்திரன்" படத்தை தனுஷ் நடித்திருக்கும் படம் "வேங்கை". இப்படத்தை டைரக்டர் ஹரி இயக்கியுள்ளார். படத்தில் தனுஷூக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.

இவர்கள் தவிர ராஜ்கிரண், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் சூட்டிங் ‌எல்லாம் முடிந்து ரிலீசுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் "வேங்கை" படத்தின் தலை‌ப்பை உபயோகிக்க கூடாது என்று டைரக்டர் கலைச் செல்வம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அதில் எங்களது நிறுவனத்தின் சார்பில், "வேங்கை" என்ற படத்தை தயாரிக்கிறோம். இதுதொடர்பாக இப்படத்தின் தலைப்பு ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ளோம்.

அப்படி இருக்கையில், இப்போது தனுஷ், தமன்னா நடிப்பில் "வேங்கை" என்ற படம் உருவாகியுள்ளது. எனவே இந்தபடத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமது மனுவில் கூறியிருந்தார்.

இந்தவழக்கை விசாரித்த நீதிபதி, "வேங்கை" படத்தின் தலைப்பை உபயோகப்படுத்த தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பான வழக்கை ஜூலை 1ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...