காமெடி நடிகர் செந்தில் கதாநாயகராக நடிக்க சில வருடங்களுக்கு முன் பூஜை போடப்பட்ட திரைப்படம் "ஆதிவாசியும் அற்புதபேசியும்" பி.பி.சி பிக்சர்ஸ் சார்பில் பாபு என்பவர் கதை எழுதி தயாரிக்க, சுரேஷ் கிருஷ்ணாவின் உதவியாளர் மாலன் என்பவர் இப்படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
ஏதேதோ காரணங்களால் சில நாட்கள் படப்பிடிப்புடன் நின்றுபோன இப்படத்தின் கதையை இப்பொழுது கருணாஸிடம் சொல்லி இருக்கிறார் இயக்குநர் மாலன்.
கதையை கேட்டவுடன் உடனடியாக ஹீரோவாக நடிக்க சம்மதித்து, தானே புரடியூசராகவும் ஆக சம்மதித்துள்ளார்.
இதைக்கேட்டு சந்தோஷப்பட்ட மாலன், "ஆதிவாசியும் அற்புதபேசியும்" கதை விவாதத்திலும், களத்தேர்விலும் இறங்கி இருக்கிறார்.
விஷயம் கேள்விப்பட்ட பி.பி.சி பிக்சர்ஸ் பாபு, என் கதைக்கு யாருடா உரிமை கொண்டாடுவது என...?
மாலன் மீதும் கருணாஸ் மீதும் இயக்குநர் சங்கத்தில் புகார் கொடுக்க ரெடியாகி வருகிறாராம்! இந்த விஷயம் கருணாஸ்க்கு தெரியுமா...?
0 comments:
Post a Comment