ஆர்யாவை அடித்து மிதித்த அனுஷ்கா


அருந்ததி புகழ் அனுஷ்கா சிறந்த பர்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்ட் என்பதால் அவர் மீது எப்போதுமே டைரக்டர்களுக்கு தனி மரியாதை உண்டு. 

அதை அவரும் காப்பாற்றிக்கொள்ளும் வகையில்தான் இதுவரை நடித்துக்கொண்டிருக்கிறார். 

அதிலும், முதன்முதலாக இரண்டு வேடங்களில் நடித்துள்ள இரண்டாம் உலகம் படத்தில் இன்னும் பலபடி மேலே சென்று சிறப்பாக நடித்துள்ளாராம் அனுஷ்கா.

அதனால் சென்னையில் அப்படத்தின் ஆடியோ விழா நடைபெற்றபோது அனுஷ்காவின் நடிப்பை கூடுதலாக புகழ்ந்து பேசிய செல்வராகவன், சமீபத்தில் ஆந்திராவில் அதன் ஆடியோவை வெளியிட்டபோது இன்னும் கூடுதலாக பேசி அனுஷ்காவை திக்குமுக்காட வைத்து விட்டாராம். 

குறிப்பாக, இந்த படத்தில் ஆர்யா ஹீரோவாக நடித்திருந்தாலும், கதைப்படி அனுஷ்காதான் ஹீரோ. அந்த அளவுக்கு இரண்டு மாறுபட்ட வேடங்களில் வித்தியாசமான பர்பாமென்ஸை கொடுத்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் அவரை எனது கதாநாயகியாகத்தான் நான் பார்த்தேன். ஆனால், அவரோ என்னை ஒரு அண்ணனாக கருதினார். 

என் மேல் அவருக்கு தனி அக்கறை. அப்போதெல்லாம் என் கண்களுக்கு அவர் எனது கூடப்பொறந்த தங்கை மாதிரிதான் தெரிந்தார். அந்த வகையில், இரண்டாம் உலகம் படம் எனக்கொரு நல்ல தங்கையையும் தந்திருக்கிறது என்கிறார் செல்வராகவன்.

இப்படி சொல்லும் செல்வராகவன், ஐதராபாத்தில் இரண்டாம் உலகம் படத்தின் தெலுங்கு பதிப்பு ட்ரெய்லரை வெளியிட்டபோது, ஆர்யாவை, அனுஷ்கா அடித்து மிதிப்பது போன்ற மாதிரி ஆக்சன் காட்சியை வெளியிட்டு புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறாராம். 

இயக்குனரை புறக்கணிக்கும் படக்குழு

நாட்டமை செய்த இயக்குனர் தற்போது சூப்பர் நடிகரின் சரித்திர படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ஷன் மேற்பார்வையும் பார்த்து வந்தார். 

அதன்பிறகு வேலைப்பளு காரணமாக அதிலிருந்து விலகிக் கொண்டார். அதன்பிறகு ஏய் இயக்குனரை அந்த பதவியில் அமர்த்தினர். 

இந்நிலையில், சமீபகாலமாக சரித்திர படம் குறித்து வெளிவரும் விளம்பரங்களில் நாட்டமை இயக்குனரின் பெயர் மிகச்சிறிய அளவில் போடப்படுகிறதாம். 

தன்னுடைய பெயரை ஏன் அவ்வளவு சிறியதாக போடுகிறார்கள் என்று இவருக்கே தெரியவில்லையாம். ஒருவேளை இந்தப் படத்தில் இருந்து தன்னை படக்குழுவினர்கள் புறக்கணிக்கிறார்களா? என்று புலம்பி வருகிறாராம். 

சவாலுக்கே சவால் விடும் ஆரம்பம் அஜீத்

விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜீத், ஆர்யா, நயன்தாரா, டாப்சி ஆகியோரது நடிப்பில் இந்த தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்து படைக்க வரும் படம் ‘ஆரம்பம்’. 

இந்தப்படத்தில் வியக்கத்தக்க பல விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. அஜீத்தின் அதிவேக பைக் ரைடிங், போட் சேஸிங், காருக்கு கார் டூப் இல்லாமல் தாவும் காட்சி என பல ஆச்சர்யப்பட வைக்கும் சாகசங்களை அஜீத் செய்துள்ளார். 

இந்நிலையில் இப்படம் பற்றிய மற்‌றுமொரு சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது. 


ஆரம்பம் படத்தில் அஜீத்தை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு நடிக்கும் காட்சியை விஷ்ணுவர்தன் படமாக்க எண்ணினார். 

இதுதொடர்பாக அஜீத்திடம் விஷ்ணுவர்தன் பேசும்போது, சார் நீங்கள் ஒரே ஒரு முறை மட்டும் தலைகீழாக தொங்கும்படி நடியுங்கள், நான் அதை வைத்து மேனேஜ் பண்ணி கொள்கிறேன் என்றார். 

ஆனால் அஜீத்தோ காட்சிகள் எல்லாம் ரியலாக இருக்க வேண்டும், ரசிகர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள், அவர்களை ஏமாற்ற வேண்டாம் அதனால் முழுகாட்சியை நானே நடிக்கிறேன் என்று சொல்ல கிட்டத்தட்ட மூன்று நாட்கள் அஜீத்தை தொங்கவிட்டு தண்ணீரை ஊற்றி ஊற்றி அந்தகாட்சியை படமாக்கி இருக்கிறார்கள். 

இப்படி படமாக்கும்போது ஒருகட்டத்தில் அஜீத்தின் கண்கள் வீங்கிவிட்டதாம். இருந்தும் அதை பொருட்படுத்தாது நடித்தாராம்.



மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள போட் சேஸிங் காட்சியில் அஜீத்தை நடிக்க வேண்டாம் என்று டைரக்டர் சொன்னார். 

இது ரொம்பவும் ஆபத்தானது என்று டைரக்டர் சொல்லியும் அஜீத் அதை கேட்காமல், இரண்டுநாட்கள் போட்டிங் பயிற்சி எடுத்து அந்த சவாலான காட்சியிலும் நடித்து அசத்தினார். 



ஆக இப்படி படத்தில் பல சவால்களுக்கும் சவால் விடும் வகையில் நடித்துள்ளார் தல அஜீத்.

சுட்டகதை - சினிமா விமர்சனம்



அழகான மலை கிராமம் கோரமலை. இங்கு வாழும் தொங்காபுரம் ஜமீன் ஆட்களும், குஞ்சானி இன மக்களும் எலியும் பூனையுமாக இருக்கிறார்கள். 

இங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் நாசர். இங்கு கான்ஸ்டபிள் வேலைக்கு பாலாஜியும், டிரைவர் வேலைக்கு வெங்கியும் வருகின்றனர்.

பாலாஜிக்கு சிறுவயதிலிருந்தே இவனையும் மீறி திருடுவது பழக்கமாக இருக்கிறது. இந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்காகவே போலீஸ் வேலைக்கு வருகிறார். 

வெங்கிக்கு வலதுபக்க காது கேட்காது. இருவரும் வேலைக்கு வந்ததும் நண்பர்களாகி விடுகிறார்கள். அந்த ஊரில் கொள்ளைக் கும்பலிடம் மாட்டிக் கொள்ளும் இவர்களை குஞ்சானி இனத்தைச் சேர்ந்த நாயகி லட்சுமி பிரியா அவளது தம்பி, அப்பா ஆகியோருடன் வந்து அவர்களைக் காப்பாற்றுகிறார். நாயகியைப் பார்த்தவுடன் அவள்மீது இருவரும் ஒருதலையாக காதல் வயப்படுகிறார்கள்.

மறுமுனையில் நாயகியின் அப்பா எம்.எஸ்.பாஸ்கர் காட்டுக்குள் மர்மமான முறையில் சுடப்பட்டு இறந்து விடுகிறார். அந்த கொலையை துப்பறியும் வேலையில் நாசர் குழு களமிறங்குகிறது. 

இதற்கிடையில் தன்னுடைய அப்பாவை கொன்றவனை தேடி கொலை செய்ய நாயகியும், அவளது தம்பியும் காட்டுக்குள் உலா வருகின்றனர்.

அப்போது, குடித்து விட்டு போதையில் வரும் பாலாஜி செய்வதறியாது துப்பாக்கியால் ஒருவரை கொலை செய்து விடுகிறார். முகம் சிதைந்த நிலையில், அவரது பாக்கெட்டில் இருக்கும் மாத்திரை பாட்டிலை வைத்து அவர் அந்த ஊரின் ஆராய்ச்சியாளர் ஜெயப்பிரகாஷ் என்பதை அறிகின்றனர். 

ஜெயபிரகாஷ் அதே ஊரில் காம உணர்ச்சியை அதிகப்படுத்தும் மாத்திரையை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ஆராய்ச்சியாளர். அந்த பிணத்தை யாருக்கும் தெரியாமல் புதைக்குழியில் புதைக்க திட்டமிடுகின்றனர்.

ஆனால், போகும் வழியில் ஜெயபிரகாஷை நேரில் சந்திக்கும் அவர்கள் அதிர்ச்சியடைகின்றனர். அவர்கள் கொலை செய்தது தொங்காபுரம் ஜமீன் என்பது ஜெயபிரகாஷ் மூலமாக இருவருக்கும் தெரிய வருகிறது. 

ஜமீன்தான் எம்.எஸ்.பாஸ்கரை சுட்டது என்பதும், அவரை கண்டுபிடித்து தருவோருக்கு சன்மானமாக 3 லட்சம் ரூபாய் கிடைக்கும் எனவும் நாசர் வாக்கி டாக்கியில் தகவல் தருகிறார். இதையறியும் பாலாஜியும், வெங்கியும் அந்த பிணத்தை போலீசில் கொண்டு போய் சேர்க்க முடிவெடுக்கின்றனர். 

ஆனால், தன்னுடைய ஆராய்ச்சிக்காக கிடைத்த ஒரேயொரு நபர் தொங்காபுரம் ஜமீன் என்பதால் அவரது பிணத்தை அவர்கள் எடுத்துக் கொண்டுபோக ஜெயபிரகாஷ் மறுப்பு தெரிவிக்கிறார். 

மறுமுனையில், இதையெல்லாம் கேட்டு அறிந்த நாயகி தன் அப்பாவை கொன்றவனுடைய பிணத்தை தன்னுடன் ஒப்படைக்குமாறு கேட்கிறாள்.

இந்த மூன்று பிரிவுக்கும் பிணத்தை யார் எடுத்துப் போவதில் பிரச்சினை ஏற்பட்டு சண்டை ஏற்படுகிறது. இறுதியில், அந்த பிணத்தை யார் கொண்டு சென்றனர் என்பதை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார்கள். 

கதையின் நாயகர்களாக பாலாஜியும் வெங்கியும். இருவரும் தங்களுடைய முகத்தில் காமெடியை கொண்டுவர ஓரளவுக்கு முயற்சி செய்திருக்கிறார்கள். வெங்கியின் உடல்வாகு, அவரது ஓட்டம் கொஞ்சம் காமெடியை வரவழைக்கிறது. மற்றபடி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நாயகி லட்சுமி பிரியா, அழகாக இருக்கிறார். மலை வாழ் பெண்ணாக அழகாக நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சியில் ஆக்ரோஷம் காட்டுகிறார்.

நாசர் சிரிப்பு போலீசாக நம்மை சிரிக்க வைக்கிறார். படம் ஆரம்பக் காட்சியில் எம்.எஸ்.பாஸ்கர் குயில் சுடுவது ரசிக்க வைக்கிறது. ஆராய்ச்சியாளர் கதாபாத்திரத்தில் வரும் ஜெயபிரகாஷ் அந்த கதாபாத்திரத்திற்கு கொஞ்சம்கூட ஒட்டவில்லை. லட்சுமி ராமகிருஷ்ணன் ஜமீனின் மனைவியாக வருகிறார். போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்படும் வில்லியாக மிரட்டுவார் என பார்த்தால் அடங்கி போய் ஏமாற்றிவிடுகிறார். 

கதைக்கு தேவையான கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் இயக்குனர் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். டுவிஸ்ட் டுவிஸ்ட் என்று சொல்லி படத்தில் எங்குமே டுவிஸ்ட் வைக்காதது பெரும் ஏமாற்றமே. 

படத்தின் தொடக்கத்தின் போது கார்ட்டூன் காட்சிகளை வடிவமைத்ததில் கடும் சிரத்தை எடுத்திருக்கிறார். ஒரு சில காட்சிகள் ரொம்ப நீளமாக நீண்டுகொண்டே போகிறது. அவற்றிற்கு கத்திரி போட்டிருக்கலாம்.

மெடில் புளூஸ் இசையில் ‘பார் சாங்’ தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ‘சுட்ட கதை’  பார்க்கலாம் ரகம்.

அஜீத்தை டென்சன் செய்த ஸ்டன்ட் கலைஞர்கள்


ஆரம்பம் படத்தையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் வீரம். இதன் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. 

வசன காட்சிகளை எடுத்து வந்த சிவா, திடீரென்று அங்கு செட் அமைத்து ஒரு சண்டை காட்சியை படமாக்கிக்கொண்டிருந்தாராம். 

அதில் தமிழ் சினிமாவைச்சேர்ந்த ஸ்டன்ட் கலைஞர்கள் அஜீத்துடன் நடித்துக்கொண்டிருந்தார்களாம்.

ஆனால் இந்த தகவல், ஆந்திரா ஸ்டன்ட் யூனியனைச்சேர்ந்தவர்களுக்கு தெரியவர, படப்பிடிப்பு தளத்துக்கு வந்து போர்க்கொடி பிடித்தார்களாம். 

காரணம், மற்ற மொழிகளைச்சேர்ந்தவர்கள் தங்களது ஊரில் படப்பிடிப்பு நடத்தினால் தங்கள் யூனியனில் இருக்கும் ஸ்டன்ட் கலைஞர்கள் 30 சதவிகிதத்தினருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் அவர்கள், படப்பிடிப்பை நடத்த விடாமல் தடுத்தார்களாம்.

இதனால் டென்சனான அஜீத், சண்டை காட்சியை படமாக்குவதை உடனடியாக நிறுத்தி விட்டாராம். 

இப்போதைக்கு இந்த பிரச்னையை தவிர்க்க வசன காட்சிகளை படமாக்குவோம் என்று மாற்று ஆலோசனை வழங்கினாராம். 

அதையடுத்து, அஜீத்-தமன்னா மட்டுமின்றி மற்ற நடிகர் நடிகைகளையும் ஆந்திராவுக்கு வரவைத்து வசன காட்சிகளை படமாக்கிக்கொண்டிருக்கிறாராம் சிறுத்தை சிவா.

ஆரம்பம் ஆச்சர்யப்பட வைக்கும் பத்து முத்து


ஆரம்பம் ரிலீஸ் பரபரப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள். இப்போதே மனசுக்குள் பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கிறது அவர்களுக்கு. 

அல்டிமேட் ஸ்டாரின் வருகைக்காக தியேட்டர்களில் தோரணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் தல ரசிகர்கள். 

மக்கள் தியேட்டர் ரிசர்வேஷனுக்காக கவுண்டர் முன்னாலும், கம்ப்யூட்டர் முன்னாலும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக இதோ ஆரம்பத்தின் பத்து முத்தான தகவல்கள்.

1. ஆரம்பம், அஜீத்திற்காக எழுதப்பட்ட கதை அல்ல. விஷ்ணுவர்த்தன் பொதுவாக எழுதிய ஆக்ஷன் ஸ்கிரிப்ட். அஜீத்தின் இமேஜுக்காக எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே உருவாகி இருக்கிறது.

2. படத்துக்கு 200 தலைப்புகள் எழுதி வைத்திருந்தார் விஷ்ணுவர்த்தன். அத்தனையும் அஜீத்தின் இமேஜுக்கு ஏற்ற மாதிரியான பில்டப் தலைப்புகள். அதைப் படித்து பார்த்த அஜீத். இந்த பில்டப் கொடுத்து ரசிகர்களை ஏமாற்ற வேண்டாம். 

கதைக்கு  ஏற்ற மாதிரி ஒரு தலைப்பு கொண்டு வாங்க என்றார். அதன் பிறகு உருவான தலைப்புதான் ஆரம்பம். அதற்கு அஜீத் ஓகே சொல்ல தலைப்பை டிசைன் செய்தார் நீல் ராய். பில்லா டைட்டில் டிசைன் செய்தவர். தலைப்பில் இருக்கும் பவர் பட்டனை வடிவமைத்தவர் நீல்ராய். தலைப்பு தாமதமானதால் ரசிகர்கள் எழுதிய அனுப்பிய தலைப்பே ஆயிரத்துக்கும் கூடுதலாம்.

3. ஒவ்வொரு பைட்டுக்கும் தனி தனி ஸ்டண்ட் மாஸ்டர்கள் பணிபுரிந்திருக்கிறார்கள். அதேபோல ஒவ்வொரு பாட்டுக்கு தனித்தனி டான்ஸ் மாஸ்டர்கள் பணிபுரிந்திருக்கறார்கள். தினேஷ் மாஸ்டருக்கு மட்டும் இரண்டு பாடல்.

4. படத்தின் பைக் சேஸ் இல்லை. ஆனால் அஜீத் வேகமாக பைக் ஓட்டும் சீன் இருக்கிறது. பவர்புல்லான போட் சேசிங் இருக்கிறது. இது துபாயில் படமாக்கப்பட்டது. அஜீத்துடன் இதில் நடித்திருப்பவர் இந்தி நடிகை அக்ஷரா கவுடா.

5. ஆக்ஷன் ஏரியா அஜீத்துக்கு, ரொமான்ஸ் ஏரியா ஆர்யாவுக்கு என்று பிரித்து கொடுத்திருக்கிறார்கள். இரண்டும் சந்திக்கும் இடத்திலிருந்து பொறி பறக்க ஆரம்பிக்கும். நயன்தாரா கிளமார் குயினாகவும் வருகிறார். நடிப்பிலும் தனி முத்திரை பதிக்கிறார்.

6. அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும், ஒரு வி.ஐ-.பி கொலை தொடர்பாக வரும் ஒரு இமெயிலை வைத்து ஒரு சர்தேச நெட்வொர்க்கை பிடிக்கும் ஹாலிவுட் பாணியிலான கதை. "இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவான கதை. அந்த சம்பவம் எல்லோருக்கும் தெரிந்த சம்பவம்தான் என்கிறார் டைக்டர் விஷ்ணுவர்த்தன்.

7. மங்காத்தாவில் வரும் அதே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில்தான் வருகிறார் அஜீத். படம் முழுக்க மேக்-அப் போடாமல் நடித்திருக்கிறார். ஒரே கேரக்டரில் நெகட்டிவாகவும் நடித்திருக்கிறார். பாசிட்டிவாகவும் நடித்திருக்கிறார்.

8. அஜீத்துக்கு ஆரம்பத்தில் கோட்-சூட் காஸ்டியூம் கிடையாது. படம் முழுக்க சாதாரண இளைஞர்கள் அணியும் உடைதான். பெரும்பாலும் வி நெக் மற்றம் காலர்டு டீ சர்ட் அணிந்து வருகிறார். அதிலும் கம்பீரமாக இருப்பார். கோட்-சூட் காஸ்ட்டியூமை வேண்டுமென்றே அவாய்ட் பண்ணினார் அஜீத்.

9. ஏற்கெனவே காலில் எலும்பு முறிவுடன் உள்ள அஜீத் இந்தப் படத்திலும் ஒரு பெரிய விபத்தில் சிக்கி உயிர் தப்பினார். மும்பையில் நடந்த படப்பிடிப்பில் அஜீத்தை காரின் முன்னால் பேலட்டில் கட்டி வைத்திருப்பார்கள். ஆர்யா காரை ஓட்டுவது மாதிரி சீன். ஆர்யா காரை 70 கிலோ மீட்டர் வேகத்தில்  ஓட்ட காலை தூக்கியபடி நடித்த அஜீத்தின் கால்கள் தரையை உரச அஜீத் வலியால் துடிக்க ஆர்யா சடன் பிரேக் போட்டதால் தலயின் கால்கள் அன்று தப்பியது.

10. ஆரம்பத்தின் வரவை தமிழ் ரசிகர்கள் வரவேற்க ஆவலாக இருக்கிறார்கள். ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கி விட்டார்கள். மீடியாக்கள் போட்டி போட்டு செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இது எதையுமே தலையில் ஏற்றிக் கொள்ளாமல் கூலாக இருக்கிறார் அஜீத். அதுதான் தல ஸ்டைல்!!

ரகளபுரம் - சினிமா விமர்சனம்

மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர் கருணாஸ். காவல்துறையில் ஏட்டாக வேலைபார்த்த இவரது தந்தை பணியில் இருக்கும்போதே இறந்ததால், கருணை அடிப்படையில் அந்த வேலை கருணாசுக்கு கிடைக்கிறது.
போலீஸ் வேலைக்குச் செல்ல பயப்படும் கருணாஸ், தன் தாய் தங்கைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேலைக்குச் செல்கிறார். பணியில் சேர்ந்த முதல் நாளே, இவர் ஒரு பயந்த சுபாவம் உடையவர் என்பது ஸ்டேசனில் வேலை செய்யும் அனைவருக்கும் தெரிந்துவிடுகிறது.

இதனால் அனைவரும் கருணாசை அலட்சியம் செய்கிறார்கள். ஆனால், இவர் பயத்தினால் செய்யும் அனைத்து செயல்களும் இவருக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. 

ஒரு கட்டத்தில் பெரிய கொலைக் கும்பலை இவர் பயத்தினால் பிடித்து விடுகிறார். இதனால் போலீஸ் கமிஷனரான என்.எஸ். பாஸ்கர் இவர் திறமையை பாராட்டி ஏட்டாக இருந்த இவரை இன்ஸ்பெக்டராக ஆக்கி விடுகிறார்.

கருணாசோ, ஏட்டு சம்பளத்தை விட இன்ஸ்பெக்டரானால் சம்பளம் அதிகம் கிடைக்கும் என்பதால் அதை ஏற்றுக்கொள்கிறார். இந்த சமயத்தில் ஒரு பெண்ணை பார்க்கிறார் கருணாஸ். அந்த பெண் பிடித்துப்போக அம்மாவுடன் பெண் கேட்க செல்கிறார். இதற்கிடையே ரவுடியை பிடிக்கும்போது ஏற்பட்ட காயத்தினால் மருத்துமனைக்கு செல்கிறார்.

அங்கு இவரின் ரத்தம் பரிசோதனைக்காக எடுக்கப்படுகிறது. அதே வேளையில் குடித்து விட்டு வண்டி ஓட்டியதாக குற்றம் சுமத்தப்பட்ட டெல்லி கணேசும் ரத்த பரிசோதனைக்கு வருகிறார். தான் குடித்துவிட்டு வண்டி ஓட்டியது தெரியக்கூடாது என்பதற்காக டெல்லி கணேஷ், ரத்தத்தை மாற்றி விடுகிறார்.

ரத்தத்தை பரிசோதிக்கும் டாக்டர், கருணாசுக்கு கேன்சர் என்ற குண்டை தூக்கிப் போடுகிறார். தன் குடும்பத்தை காப்பாற்ற இன்ஸ்பெக்டர் பொறுப்பை ஏற்றோம். தற்போது இப்படி ஆகிவிட்டதே என்று நொறுங்கும் கருணாசுக்கு, போலீஸ் வேலையில் இருக்கும்போதே இறந்துபோனால் ரூ.10 லட்சம் கிடைக்கும் என்ற செய்தி தெரிகிறது.

இதனால் நாம் செத்தாலும் பரவாயில்லை, தனது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் கிடைக்க வேண்டும் என்று பயங்கர ரவுடிக் கும்பல் மற்றும் தீவிரவாதிகளை பிடிக்கும் வேலையில் இறங்குகிறார். ஆனால் இவற்றில் அவர் இறந்து போகாமல் அவருக்கு நல்ல பெயரையே வாங்கிக் கொடுக்கிறது.

ஒரு கட்டத்தில் இவரை வேண்டாம் என்று கூறிய நாயகி, இன்ஸ்பெக்டராக இருந்து செய்யும் சாதனையால் கருணாசை விரும்புகிறார். கருணாசோ தனக்கு கேன்சர் இருப்பதால் காதலை ஏற்கமுடியாமல் தவிக்கிறார். 

அதேசமயம் காதலி தன்னை வெறுக்கும் வகையில் பல செயல்களை செய்கிறார். அதிர்ஷ்டவசமாக இதுவும் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கிறது.

இந்த ரகளைகளுக்கு மத்தியில் காதலியை கரம் பிடித்தாரா?, அவர் குடும்பத்தை கரையேற்றினாரா? என்பதே மீதிக்கதை.

பயந்தாங்கொள்ளி போலீஸ் கேரக்டரில் கருணாஸ் இயல்பாக நடித்துள்ளார். குறிப்பாக தனது காதலியை வெறுக்கச் செய்வதற்காக இவர் எடுக்கும் முயற்சிகள், அது பலன் அளிக்காததால் உருவான டென்ஷன் போன்ற காட்சிகளில் இவரது நடிப்பு ரசிக்கும் படி இருக்கிறது. நடிப்பு மட்டுமல்லாமல், பாடல்களுக்கும் சிறப்பாக நடனம் ஆடியுள்ளார்.

கதாநாயகி அங்கனாராய்க்கு காட்சிகள் குறைவுதான். இருந்தாலும் கொடுத்த கதாபாத்திரத்தை அருமையாக செய்திருக்கிறார்.

என்.எஸ். பாஸ்கர், பழைய நடிகர் மேஜர் சுந்தர்ராஜனை போல் முதலில் ஆங்கிலத்தில் பேசி அதையே தமிழில் பேசும் காட்சிகள் படத்திற்கு மேலும் சிறப்பு.

திடீர் திடீர் என வரும் மயில்சாமி, கோவை சரளா, சிங்கம்புலி, மனோபாலா காட்சிகளுக்கு மெருகேற்றுகிறார்கள்.

ஸ்ரீகாந்த் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஸ்ரீகாந்த் இசையில் ‘ஒபாமாவும்...’ என்ற பாடலை கருணாஸ் சொந்தக்குரலில் பாடியுள்ளார். மொத்தத்தில் ரகளபுரம் 'செமரகளை'.

சீரியசாக திட்டம் தீட்டும் தாடிவாலா

தாடிக்கார டைரக்டரின் புதல்வரை வைத்து படம் பண்ணி வெளியே வர வேண்டுமென்றால் அவர்கள் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். 

அப்படி புண்ணியம் செய்யாத யார் அவரை வைத்து படம் தயாரித்தாலும் அவர்கள் காலிதான். இந்த உண்மை தெரிந்ததால்தானோ என்னவோ புத்திசாலித்தனமாக மேற்படி நடிகரை வைத்து தான் இயக்கும் படத்திற்கு அவரையே தயாரிப்பாளராக்கியிருக்கிறார் மெரினா இயக்குனர். 


ஆனால், எப்போதோ ஆரம்பிக்க வேண்டிய படம் இன்னமும் ஒரு அடிகூட நகராமல் நிற்கிறது. அதுகுறித்து மெரினா டைரக்டர் கேட்டபோது, ரெண்டு வருசமா ஒரே தயாரிப்பாளரோட ரெண்டு படத்துல நடிச்சிக்கட்டு வர்றேன். 

அவரே படத்தை எப்ப முடிச்சுக்கொடுப்பீங்கன்னு எங்கிட்ட கேட்கல. அப்படியிருக்க உங்களுககு என்ன அவசரம்? என்கிறாராம்.



இந்த சேதி நடிகரின் தந்தைகுலத்தின் காதுக்கு சென்றபோது ஷாக்காகி விட்டாராம். இதுவரை நடிச்ச படமெல்லாம் அடுத்தவங்க காசுல தயாரிச்ச படம். 

ஆனா இப்ப மகன் நடிக்கப்போறது நம்ம சொந்த காசுல தயாரிக்கிற படமாச்சே. கொஞ்சம் அசந்தா, சொந்த காசுல சூனியம் வச்சிக்கிட்ட கதையா போயிடுமோ என்று தாடியை சொறிந்து கொண்டு நிற்கும் நடிகர், ப்ளான் பண்ணி, எண்ணி 60, 70 நாள்ல படத்தை முடிச்சிடணும். 

தினமும் ஸ்பாட்டுக்கு மகனோட பி.ஏ மாதிரி கூடவே போனாதான் வேலை நடக்கும். இல்ல மத்த தயாரிப்பாளருங்களுக்கு ஏற்பட்ட கதிதான் நமக்கும் என்று சீரியசாக திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறாராம் தாடிவாலா.

கோடிக்கு ஆசைப்பட்டு ரூ.50 லட்சத்தை இழந்த பிரபல நடிகர்


பாலிவுட்டின் பிரபல நடிகர் அக்ஷ்ய் கன்னா. பார்டர், தால், தில் சாக்தா ஹாய், ஹல்சல், ரேஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் மும்பையில் வசித்து வருகிறார். 

மும்பை அந்தேரியில் ‘இன்டேஜ் இமேஜஸ்’ என்று நிறுவனத்தை சக்கரவர்த்தி என்பவர் தன் மனைவி சோனாவுடன் நடத்தி வருகிறார். 

இவர் 2010–ம் ஆண்டு ரூ.50 லட்சம் கட்டினால் 45 நாட்களில் அது இரட்டிப்பாக ரூ.1 கோடியாக தரப்படும் என்ற கவர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்டார். இதை நம்பி ஏராளமானபேர் பணம் கட்டினர். பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் கன்னாவும் ரூ.1 கோடி கிடைக்கும் ஆசையில் 50 லட்சம் ரூபாய் பணம் கட்டினார். 

ஆனால் அவர்கள் சொன்னபடி 45 நாட்கள் கழித்து இன்டேஜ் இமேஜஸ் நிறுவனத்துக்கு, அக்ஷ்ய் போன் செய்துள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை இந்தா தருகிறேன், அந்தா தருகிறேன் என்று இழுத்தடித்துள்ளனர். 

ஒருகட்டத்தில் அவர்கள் மோசடி பேர்வழி என்பதை உணர்ந்த அக்ஷ்ய், மும்பை மலபார் ஹில்ஸ் பகுதியில் உள்ள போலீசில் புகார் செய்தார். போலீசாரும் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். 

மோசடி செய்பவர்கள் பற்றி என்னதான் தினம் தினம் செய்திகள் வந்தாலும், அவர்கள் அறிவிக்கும் கவர்ச்சிகரமான சலுகைகளை நம்பி, பணம் கட்டி ஏமாறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் நடிகர்கள் என்ன சாதாரண பொதுமக்கள் என்ன...? ஆசை யாரைவிட்டது

நய்யாண்டி - சினிமா விமர்சனம்

‘களவாணி’, ‘வாகைசூட வா’ திரைப்படங்களின் வாயிலாக அடுத்தடுத்து வெற்றி வாகை சூடிய இயக்குநர் சற்குணத்தின் மூன்றாவது படைப்பு தான் ‘நய்யாண்டி’, எனும் எதிர்பார்ப்பை விட, இந்தப்படத்தில் ஒரு டூயட் பாடலுக்கான லீட் காட்சியில், எனது தொப்புளுக்கு பதில் வேறு ஒரு டூப்ளிக்கேட் தொப்புளை இயக்குநர் சற்குணம் காண்பித்து விட்டார்... என கமிஷ்னர் ஆபிஸ் வரை நாயகி நஸ்ரியா நஸீம் போர்கொடி தூக்கி நாடகம் நடத்தியதும், அதன்பின் அப்படி ஒரு தொப்புள் காட்சியே படத்தில் இல்லை... என அம்மணி படத்தை பார்க்காமலே பார்த்ததாக சொல்லி புகாரை வாபஸ் வாங்கியதும் ‘நய்யாண்டி’ படம் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாய் கூட்டிவிட்டது.


இனி ‘நய்யாண்டி’ கதையை ஒரு சில வரிகளில் பார்ப்போம்... கதைப்படி, கும்பகோணம் அருகே குத்துவிளக்கும், காண்டாமணி உள்ளிட்ட பித்தளை பொருட்களை பெரியளவில்‌ செய்து விற்பனை செய்யும் பிரமிட் நடராஜன் - மீரா கிருஷ்ணன் தம்பதியின் மூன்றாவது வாரிசு சின்னவண்டு எனும் தனுஷ். நாற்பது சொச்சம், 35 மிச்சம் வயதுடைய இரண்டு அண்ணன்களுக்கும் திருமணமாகாத நிலையில், சின்னவண்டு-தனுஷ், பல்டாக்டர்-வனரோஜா எனும் நஸ்ரியா நஸீமை காதலித்து இக்கட்டான ஒரு சூழலில் அவசரகதியில் தாலியும் கட்டுகிறார். இத்தனையும் நடப்பது கும்பகோணம் ஏரியாவில் அல்ல... சின்னவண்டு தனுஷின் சின்ன வயசு, சைஸ்... மாமா பரோட்டா சூரி ஊரில்! 



அந்த ஊரில் தான் சின்ன வண்டு, சின்னவயசு முதல் வளர்கிறார் வாழ்கிறார். அந்த ஊருக்கு பாட்டி வீட்டிற்கு வந்த நாயகி வனரோஜா நஸ்ரியா மீது சின்ன வண்டு தனுஷூக்கு காதல்! 

ஒரு கட்டத்தில் சின்ன வண்டின் நற்குணங்களைக் கண்டு தனுஷ் மீது நஸ்ரியாவுக்கும் காதல்! அந்த காதல் பூத்து காய்த்து கசிந்துருக ஆரம்பிக்கும் வேளையில் தன் பிறந்தநாளுக்காக தனது சொந்த ஊருக்கு போகும் நஸ்ரியாவுக்கு தடபுடலாக கல்யாண ஏற்பாடுகள் நடக்கின்றன. 

அந்த தருணத்தில் அங்கு வரும் தனுஷ், அடாவடி மாப்பிள்ளையின் அடியாட்களை அடித்து போட்டுவிட்டு நஸ்ரியாவுக்கு அவசரத் தாலி கட்டுகிறார். அப்புறம்? அப்புறமென்ன? 



நஸ்ரியாவை அழைத்து கொண்டு அந்த ஊரை விட்டு ஓடி வரும் தனுஷ், ஒரு இடத்தில் தன் மாமா சூரியை வரவழைத்து அவர் கையில் நஸ்ரியாவை ஒப்படைத்து தன் கும்பகோணம் குத்துவிளக்கு பேக்டரியில் அநாதை என சொல்லி அடைக்கலம் ஏற்படுத்த சொல்லிவிட்டு, சில நாட்கள் கழித்து அங்கு வருகிறார். 

அங்கு திருமணம் ஆகாமல் தவிக்கும் தனுஷின் அண்ணன்கள் இருவரும் நஸ்ரியாவுக்காக நான்- நீ என போட்டி போட்டு அடித்து கொள்கின்றனர். மற்றொரு பக்கம் நஸ்ரியாவுக்கு நிட்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை வில்லனின் ஆட்கள் நஸ்ரியாவைத்தேடி கும்பகோணம் வருகின்றனர். 

தனுஷ், அண்ணன்களிடமிருந்தும், வில்லனிடமிருந்தும் நஸ்ரியாவை காபந்து செய்து, தன் அவசரத்தாலி மேட்டரை வீட்டிற்கு தெரியப்படுத்தினாரா? அல்லது அண்ணன்களாலும், வில்லனாலும் அல்லல்களுக்கு ஆட்பட்டாரா? என்பது ‘நய்யாண்டி’ படத்தின் காமெடி கலந்த வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!



சின்னவண்டு - தனுஷ் வழக்கம் போலவே பெரிய அளவில் ரொம்பவும் அடித்து கிணற்றை தாண்டுவது, மரத்திற்கு மரம் தாவுவது என தன் பாத்திரமறிந்து ‘பளிச்’ சென்று நடித்திருக்கிறார். 



பல் டாக்டர் வனரோஜாவாக வரும் நஸ்ரியா நஸீம் ஒரே ஒரு காட்சியில் மட்டும் பல் டாக்டராக வந்து, அப்பா அனுப்பி வைத்த செட்-அப் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அப்பா நரேனிடம் செல்ல கோபம் காண்பிப்பதோடு சரி... அதன்பிறகு இழுத்து போர்த்திக் கொண்டும், கவர்ச்சி காண்பித்தபடி தனுஷையும், நம்மை இன்பவதை செய்கிறார் பேஷ், பேஷ்!



தனுஷின் மாமா சூரி, அண்ணன்கள் ஸ்ரீமன், சத்யன், அம்மா மீரா கிருஷ்ணன், அப்பா பிரமிட் நடராஜன், வில்லன் வம்சி கிருஷ்ணா, இமான் அண்ணாச்சி, சதீஷ், அஸ்வின், நஸ்ரியாவின் அப்பா நரேன், பாட்டி சச்சு என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே தங்கள் பங்கை சரியாக செய்திருக்கிறது! 

அதிலும் நஸ்ரியாவை பார்க்கும் போதெல்லாம் வயிறை எக்கிக்கொண்டு ஸ்ரீமன்னும், வாலிப வயோதிகராக சத்யனும் அடிக்கும் லூட்டிகள் தான் செம காமெடி!



எம்.ஜிப்ரானின் இசை ஒரு புது தினுசு! வேல்ராஜின் ஒளிப்பதிவு அள்ளுது மனசு! ஏ.சற்குணத்தின் எழுத்து-இயக்கத்தில் அவரது முந்தைய படங்கள் அளவுக்கு ‘நய்யாண்டி’ இல்லாவிட்டாலும், ‘நய்யாண்டி’ பண்ணும் அளவிற்கு இல்லை என்பது ஆறுதல்!



ஆகமொத்தத்தில் ‘நய்யாண்டி’ - தனுஷ் ரசிகர்களுக்கு நல் மேளம் தான் - தாளம் தான்! இயக்குநர் சற்குணத்தின் நற்பட விரும்பிகளுக்கு...?!

தயாரிப்பாளரை பதம் பார்த்த விரல்வித்தை நடிகர்


விரல்வித்தை நடிகரை வைத்து படம் தயாரிக்க வேண்டுமென்றாலே ஒரு தனி தில் வேண்டும். அதிலும் தற்போது அவரை வைத்து ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரித்து வரும் அந்த படாதிபதிக்கு ரொம்பதான் தில்லு என்றுதான் சொல்ல வேண்டும். 

ஆனால், நடிகரிடம் சிக்கி அவர் படும் பாட்டை கேட்டால் கல்லும் கரைந்து போகும் என்கிறார்கள். அந்த அளவுக்கு டார்ச்சர் கொடுக்கிறாராம் நடிகர்.

ஒரு படத்துக்கான செட்டை ஆந்திராவில் போட்டு வைத்து விட்டு படப்பிடிப்புக்கு அழைத்தால், இப்போது இந்த படம் வேண்டாம் அந்த படத்தை படமாக்குவோம் என்கிறாராம். 

சரி அதையாவது செய்வோம் என்று படாதிபதி செட்டை அப்படியே போட்டு விட்டு நடிகர் காட்டும் திசையில் சென்றால், அங்கேயும் இரண்டொரு நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு, மூடு சரியில்லை பேக்கப் செய்யுங்கள் என்று சென்னைக்கு எஸ்கேப் ஆகி விடுகிறாராம்.

இப்படி நடிகர் செய்த அக்கப்போரினால், மேற்படி தயாரிப்பாளருக்கு 35 லட்சத்திற்கு மேல் செட் போட்ட வகையில் நஷ்டமாகி விட்டதாம்.

ஆரம்பம் படத்துக்கு திடீர் சிக்கல் - தீபாவளிக்கு ரிலீசாகுமா?




அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்துள்ள படம் ஆரம்பம். விஷ்ணுவர்த்தன் டைரக்ட் செய்துள்ளார். ஏ.எம்.ரத்தினம் தயாரித்துள்ளார். வருகிற 31ந் தேதி படம் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆரம்பம் படத்திற்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னை செனாய் நகரைச் சேர்ந்த பி.ராஜேஸ்வரி என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் படத்துக்கு எதிரான மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் 2005ம் ஆண்டு கேடி என்ற படத்தை தயாரித்தார் (ஏ.எம்.ரத்தினம் மகன் ஜோதி கிருஷ்ணா டைரக்ட் செய்தது. இதில்தான் தமன்னானவும், இலியானாவும் அறிமுகமானார்கள்) அந்த படம் தயாரிக்க என் மகனிடம் ஒரு கோடியே 50 லட்சம் கடன் வாங்கினார். 

அதை விரைவில் திருப்பித் தந்துவிடுவதாக அவர் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் அந்தப் படம் வெளிவர நாங்கள் தடையில்லா கடிதம் கொடுத்தோம். ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதிப்படி இதுவரை பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.

இப்போது அவர் ஆரம்பம் என்ற படத்தை தயாரித்து வெளியிடுவதாக அறிந்தோம். என் மகனிடம் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் சேர்த்து 4 கோடியே 60 லட்சம் தந்த பிறகே படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும். என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனுவுக்கு இரண்டு வாரத்துக்குள் பதில் அளிக்க ஏ.எம்.ரத்தினத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மனுமீதான விசாரணை வருகிற 25ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்தி, மலையாளத்தில் ரீமேக் ஆகிறது சூதுகவ்வும்


விஜய்சேதுபதி, சஞ்சனா ஷெட்டி நடிப்பில் புதுமுகம் நலன் குமாரசாமி இயக்கிய சூதுகவ்வும் பெரிய ஹிட்டானது. இந்தப் படத்தை இந்தியிலும், மலையாளத்திலும் ரீமேக் செய்கிறார்கள். 

இதன் ரீமேக் உரிமையை நடிகர் மற்றும் தயாரிப்பாளரான அருண்பாண்டியன், ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் வாங்கி இருந்தனர். 

இப்போது அவர்களிடம் இருந்து இந்திப்பட இயக்குனர் ரோஹித் ஷெட்டி வாங்கி தனது நிறுவனத்தின் சார்பில் தயாரித்து அவரே இயக்குகிறார். 

ரோஹித் ஷெட்டி சமீபத்தில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் இந்திப் படத்தை இயக்கியவர். 

இந்தி சூதுகவ்வுமில் விஜய்சேதுபதி கேரக்டரில் இம்ரான் கானும், சஞ்சிதா ஷெட்டி கேரக்டரில் ஷரத்தா கபூரும் நடிக்கிறார்கள். 

இதற்கான ஒப்பந்தம் மும்பையில் கையெழுத்தானது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. 

அதேபோல சூதுகவ்வும் மலையாளத்திலும் ரீமேக் ஆகிறது. அருண்பாண்டியன் மற்றும் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார்கள். திலீப், நஸ்ரியா நடிக்கலாம் என்று தெரிகிறது. இயக்குனரும் இன்னும் முடிவாகவில்லை. 

தீபாளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக ஆரம்பம் ரிலீஸ்


அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி ஆகியோர் நடித்து விஷ்ணுவர்த்தன் டைரக்ட் செய்துள்ள படம் ஆரம்பம். இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதோடு தீபாவளிக்கு விஷாலின் பாண்டியநாடு, கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா, ஆகிய படங்களும் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டது. 

ஆல் இன் ஆல் அழகுராஜாவின் தியேட்டர் புக்கிங் முடிந்து விட்டது. இந்த நிலையில் அஜீத்தின் ஆரம்பம் தீபாளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக அதாவது வருகிற 31ந் தேதி ரிலீசாவதாக அறிவித்திருக்கிறார்கள்.

"ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க" என்று வழக்கம்போல காரணம் சொன்னாலும், தீபாவளி சனிக்கிழமை வருவதால் வியாழன், வெள்ளி கலெக்ஷனை விட வேண்டாம் என்று கருதியே முன்னதாகவே படத்தை ரிலீஸ் செய்கிறார்கள். 

தீபாவளிக்கு ரிலீஸ் செய்தால் ஆரம்பம் படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் மற்ற படத்திற்கு செல்ல வாய்ப்பு இருப்பதும் இதற்கு இன்னொரு முக்கிய காரணம்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

ஹாலிவுட் படங்களை அப்பட்டமாய் காப்பியடித்துவிட்டு அப்படி ஒரு ஹாலிவுட் படம் வந்ததா.?! நான் பார்க்‌கவே இல்லையே... என உலகறிந்த உண்மையின் மேல், முழு போஸ்டர் ஒட்டி மூடிக்கொண்டுத் திரியும் நம்மூர் இயக்குநர்களுக்கு மத்தியில், நம்மூர் மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் காதல் கதையை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் ‘ரெளத்திரம்’ கோகுல்! 

அவருக்கு அதற்காக ஒரு ‘ஹேட்ஸ் ஆப்’ சொல்லியே ஆக வேண்டும்! வித்தியாசம் என்றால் விஜய்சேதுபதியா? விஜய்சேதுபதி என்றால் வித்தியாசமா.?! என தனது அடுத்தடுத்த படங்களின் மூலம் தொடர்ந்து கேட்க வைத்து வரும் விஜய்சேதுபதி, இந்தப்படத்திலும் அதுமாதிரி ஒரு பெரும் முயற்சிக்காக, இயக்குநர் கோகுலின் பக்கபலமாக நின்று பக்கா படமாக ‘‘இதற்குத்தா‌னே ஆசைப்பட்டாய் பாலகுமாரா...’’ படத்தை கொண்டு வந்திருப்பதற்காக விஜய்க்கும் ஒரு டஜன் ‘ஹேட்ஸ் ஆப்’ சொல்லலாம்! இனி கதைக்கு வருவோம்!


ஒரு குறைந்த வருவாய் பிரிவினருக்கான அரசு குடியிருப்பில் எதிர் எதிர் வீட்டில் குடியிருப்பவர்கள் சுமார் மூஞ்சி குமார் - விஜய் சேதுபதியும், குமுதா எனும் ‘அட்டக்கத்தி’ நந்திதாவும். சின்னவயது முதலே தெரியும் என்பதால் சுமார் மூஞ்சி குமாருக்கு, குமுதா மீது லவ் என்றால் லவ் அப்படி ஒரு ஒன்சைடு லவ்! 

ஆனாலும் சுமார் மூஞ்சி விஜய்சேதுபதியின் குடியாத, விடியாத தருணங்களால், குமாரை பார்த்தாலே குமுதாவிற்கு குமட்டிக் கொண்டு வருகிறது. 

அதனால் தன் அப்பா பட்டிமன்றம் ராஜாவிடம் சொல்லி, அண்ணாச்சி பசுபதியிடம் பஞ்சாயத்திற்கு சுமார் மூஞ்சி குமாரை அனுப்பி வைக்கிறார் குமுதா. அங்கு தன் கலாட்டா காதலை ப்ளாஷ் பேக்காக சொல்லி செம மாத்து வாங்கும் விஜய் சேதுபதி, அந்த துக்கத்தை மறக்க ஆப் தேடி நட்ட நடுராத்திரியில் நண்பருடன் அலைகிறார். 



இது ஒரு பக்கமென்றால் இன்னொரு பக்கம் மார்கெட்டிங் இளைஞர் பாலா எனும் அஸ்வினுக்கும், தனியார் நிறுவன ஹெச்.ஆர்., ரேணு எனும் ‘சுப்புரமணியபுரம்’ சுவாதிக்கும் காதல். அடிக்கடி செல்ல சண்டை போட்டுக் கொள்ளும் இருவரையும் சேரவிடாமல் தடுப்பது பாலா எனும் அஸ்வினின் குடிப்பழக்கம்! 

மார்கெட்டிங் ஹெட்டின் டார்ச்சர், காதலியின் டார்ச்சர் இந்த இரண்டாலுமே அடிக்கடி குடிக்கும் பாலா, ஒருநாள் குடிபோதையில் ஒரு கர்ப்பிணியின் மீது தன் வண்டியை ஏற்றிவிட, அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு அவரது கணவரின் வருகைக்காக அஸ்வினும், அவரது காதலி சுவாதியும் காத்திருக்கின்றனர். 

அந்த கர்ப்பிணியின் கணவரும் ஒரு டாஸ்மாக்கில் மது அருந்தி கொண்டு இருக்கும்போது, அதே டாஸ்மாக்கில் சற்றுமுன் நடந்த ஒரு கொலைக்காக போலீஸ் விசாரணைக்கு போக, கர்ப்பிணி பிழைக்க வேண்டுமென்றால், ஒரு அரிய வகை இரத்தம் தேவை. அந்த வகை இரத்தம் சுமார் மூஞ்சி குமாருக்கு மட்டுமே அந்தப்பகுதியில் அப்போதைக்கு இருக்கிறது! 



அப்புறம்.? அப்புறமென்ன? இரத்த வங்கி வழிகாட்டுதல் படி அந்த அரிய வகை இரத்தமுள்ள சுமார் மூஞ்சி குமார் - விஜய் சேதுபதியைத் தேடி அஸ்வினும், நண்பர்களும் அலைகின்றனர். விஜய்சேதுபதியோ, நண்பருடன் ஆப் சரக்கைத் ‌தேடி அலைகிறார். 

சுமார் மூஞ்சி குமார்-விஜய்சேதுபதியின் கையில் ஆப் கிடைப்பதற்கு முன், அஸ்வின்பாலா, அவரைத் தேடிப்பிடித்து மருத்துவமனையில் சேர்த்து அடிபட்ட கர்ப்பிணிக்கு இரத்தம் வாங்கி கொடுத்தாரா? , கர்ப்பிணி உயிர் பிழைத்தாரா? 

இந்த நல்ல காரியத்தால் காதலி குமுதா, சுமார் மூஞ்சி குமாருக்கு கிடைத்தாளா? டாஸ்மாக் கொலையை செய்தது யார்? எதற்காக செய்தார்கள்? கர்ப்பிணியின் கணவர் மீண்டாரா? அஸ்வின்-சுவாதி ஜோடி இணைந்ததா இல்லையா? என்பது உள்ளிட்ட இன்னும் பல சீரியஸ் கேள்விகளுக்கு காமெடியாக பதில் சொல்கிறது ‘‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’’ திரைப்படம்!



விஜய் சேதுபதி, அஸ்வின், சுவாதி, நந்திதா, பசுபதி, பரோட்டா சூரி, வி.எஸ்.ராகவன், எம்.எஸ்.பாஸ்கர், பட்டிமன்றம் ராஜா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே ‘பளிச்’ சென நடித்து பாலகுமாராவை தூக்கி நிறுத்துகிறது. 

அதிலும் விஜய் சேதுபதி இப்படி எல்லாம் நடிக்க எப்படி ஒப்புக் கொள்கிறார்? எனும் ஆச்சர்யத்தை தருகிறது அவரது பாத்திர படைப்பு! பரோட்டா சூரி, எம்.எஸ்.பாஸ்கர் மட்டுமல்ல... இயக்குநர் கோகுல் உள்ளிட்ட எல்லோருமே காமெடியாக படத்தில் நிறைய மெ‌ஸேஜ் சொல்லி இருக்கிறார்கள்!



மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு, சித்தார்த் விபினின் இசை, லியேர் ஜான்பாலின் படத்தொகுப்பு, கோகுல், கார்க்கியின் வசனங்கள், மதன்‌கார்க்கியின் பாடல்கள் எல்லாமே பாலகுமாரா படத்திற்கு பெரும்பலம்! குடி, குடி என குடியை காட்டி, குடிக்காதே எனும் மெஸேஜையும், இரத்த தானம் செய்யுங்கள் எனும் அட்வைஸையும் காமெடியாக, அதேநேரத்தில் கருத்தாழத்துடன் சொல்லியிருக்கும் விதத்தில் இப்படத்தை எழுதி இயக்கிய கோகுல் வெற்றி பெற்றிருக்கிறார்!

ஆகமொத்தத்தில், ‘‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’’ - ‘‘ஏகப்பட்ட விருதுகளுக்கு ஆசைப்பட்டிருக்கிறது!’’

அனுஷ்காவுக்கு விரைவில் டும் டும் டும்

தெலுங்கில் அறிமுகமாகி தமிழுக்கு வந்தவர், அனுஷ்கா. இரண்டு மொழிகளிலுமே, கிளாமர், கேரக்டர் ரோல்களில் நடித்து, தான் ஒரு சிறந்த நடிகை என, பெயரெடுத்து விட்டார். 

இப்போது நடித்து வரும், ருத்ரம்மா தேவி, இரண்டாம் உலகம் ஆகிய படங்களில், அவருக்கு செமத்தியான கேரக்டர்கள் தான். அதிலும், ருத்ரம்மா தேவி படத்தில், அதிரடியான சண்டை காட்சிகளில் துாள் கிளப்பி வருகிறார். 

ஆனால், சமீபகாலமாக, புதிய படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார், அனுஷ்கா. கமல்ஹாசன் ஜோடியாக, உத்தம வில்லன் படத்தில் நடிக்க, அனுஷ்காவை அணுகியதாகவும், அதற்கு அவர் மறுத்து விட்டதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. 

அனுஷ்காவுக்கு, 31 வயதாகி விட்டது. இதனால், விரைவில் திருமணம் செய்ய, அவரின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனராம். இதற்காகவே, புது படங்களில் நடிப்பதை, அவர் தவிர்ப்பதாக கூறப்படுகிறது.

ஆர்யாவுடன் ஜோடி சேர மறுத்த நயன்தாரா


பாஸ் என்ற பாஸ்கரன், ராஜா ராணி என ஆர்யா-நயன்தாரா இருவரும் கூட்டணி அமைத்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றுள்ளன. 

அதோடு அவர்களது கெமிஸ்ட்ரியும் பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆனது. அதனால் அவர்களைப்பற்றிய கிசுகிசுக்களுக்கும் பஞ்சமில்லாத நிலை ஏற்பட்டது.

இந்தநிலையில், ராஜாராணி படத்தை இயக்கிய அட்லீ, மீண்டும் தான் இயக்கும் புதிய படத்தில் ஆர்யா-நயன்தாராவை ஜோடி சேர்க்க ஆசைப்பட்டாராம். 

ஆனால், அதற்கு ஆர்யா டபுள் ஓ.கே சொன்னபோதும், நயன்தாரா ஒத்துக்கொள்ளவில்லையாம். காரணம் கேட்டதற்கு, உங்கள் டைரக்ஷனில் நடிப்பதுபற்றி பிரச்னை இல்லை. 

ஆனால், ஆர்யா ஹீரோவாக இருப்பதால் மீண்டும் மீண்டும் கிசுகிசுக்கள் பரவிக்கொண்டேயிருக்கும். இதனால் மற்ற நடிகர்கள் என்னுடன் நடிக்க தயங்கும் நிலை உருவாகும். 

அதனால், உடனடியாக அவருடன் நடிக்காமல் சிறிது இடைவெளி விட்டு நடிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறேன் என்றாராம்.

ஆனால் இந்த செய்தி எப்படியோ நஸ்ரியாவின் காதுகளுக்குச்செல்ல, உடனே அட்லீக்கு போன் போட்டு நான் ஆர்யாவுடன் நடிக்க வேண்டும் என்பதற்காகவே கால்சீட் டைரியை ப்ரீ பண்ணியே வைத்திருக்கிறேன் என்றாராம். விளைவு, கதையே சொல்லாமல் ஆர்யா-நஸ்ரியாவை மீண்டும் ஜோடி சேர்க்க ஒப்பந்தம் செய்து விட்டாராம் அட்லீ.

ஸ்ருதிக்கு ஷாக் கொடுத்த செய்தி


இந்தி, தெலுங்கில் உருவான ராமையா வஸ்தாவையா என்ற இரண்டு படங்களிலும் நடித்திருப்பவர் ஸ்ருதிஹாசன். இதில் இந்தி பதிப்பை பிரபுதேவா இயக்கி வெளியாகி  விட்டது. ஆனால், தெலுங்கில் இயக்கிய படம்தான் இன்னும் திரைக்கு வரவில்லை. இப்படத்தில் சமந்தா, ஸ்ருதிஹாசன் இருவரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ‘இப்படத்தில் சமந்தா தான் நாயகி, ஸ்ருதிஹாசனுக்கு வில்லிவேடம்’ என்று ஆந்திராவில் சூடான செய்தி பரவி விட்டதாம். இதனால் பலத்த அதிர்ச்சி அடைந்த ஸ்ருதி, அதை மறுத்துள்ளார். ‘இப்படத்தில் சமந்தாவை போல் நானும் ஒரு கதாநாயகி தான். அதிலும், வழக்கம் போல் பாடல் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படாமல், ஒரு சஸ்பென்ஸ் ரோலில்  என்னை நடிக்க வைத்துள்ளார் இயக்குனர்’ என்கிறார் ஸ்ருதி ஹாசன்.

வெளியானது கோச்சடையான் படத்தின் சிங்கிள் பாட்டு


ரஜினி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ‘‘கோ‌ச்சடையான்’’ படத்தில் இருந்து சிங்கிள் பாட்டு இன்று வெளியிடப்பட்டது. 

‘‘எந்திரன்’’ படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி நடிப்பில் மூன்று ஆண்டு ‌இடைவெளிக்கு பிறகு வெளிவர இருக்கும் படம் ‘‘கோச்சடையான்’’. முதன்முறையாக ரஜினி, அனிமேஷன் படத்தில் நடித்துள்ளார். 

ரஜினி ஜோடியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ஷோபனா, இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், நாசர், ருக்மணி, ஆதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அவதார், டின் டின் போன்ற ஹாலிவுட் பட பாணியில், மோஷன் கேப்சரிங் தொழில்நுட்படத்தில் இப்படம் தயாராகியுள்ளது. 

தற்போது படத்திற்கான கிராபிக்ஸ், சவுண்ட் மிக்ஸிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. ரஜினியின் பிறந்தநாளன்று படத்தை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று, ‘கோச்சடையான்’ படத்தில் இருந்து ஒரே ஒரு பாட்டை மட்டும் இணையதளம் மூலமாக வெளியிட்டுள்ளனர். 

‘‘எங்கே போகுதோ வானம் அங்கே நாமும் போகிறோம்...’’ என ஆரம்பிக்கும் இப்பா‌டலை ரஜினியின் ஆஸ்தான பின்னணி பாடகர்களில் ஒருவரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். 

கவிஞர் வைரமுத்து இப்பாடலை எழுதியுள்ளார். இணையதளத்தில் வெளியிடப்பட்ட இப்பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் ‘கோச்சடையான்’ படத்தின் முழுப்பாடலும் வெளியாக இருக்கிறது. அநேகமாக தீபாவளியை‌யொட்டி பாடல்கள் வெளியாகும் என தெரிகிறது.

ஊர் ஊராக சென்று ரசிகர்களை சந்திக்கிறார் ஆர்யா


ராஜா ராணி படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் தலைகால் புரியாமல் இருக்கிறார் ஆர்யா. எல்லா செண்டர்களிலும் நல்ல ரிப்போர்ட் வர ரசிகர்களை சந்திக்க டூர் கிளம்பி விட்டார். 

நேற்று (அக்டோபர் 5) ஈரோடு, திருப்பூர், கோவையில் ரசிகர்களை சந்திக்கிறார். இன்று அக்டோபர் 6) கொச்சியில் கேரள ரசிகர்களை சந்திக்கிறார். அவருடன் இயக்குனர் அட்லியும் சென்றுள்ளார். 

சென்னை சிட்டி தவிர மற்ற இடங்களில் படத்தின் கலெக்ஷன் டல் அடிப்பதால்தான் இந்த டூர் பிளான் என்றும் சொல்கிறார்கள்.

ஹீரோவை காதலித்த ஹீரோயின்

 நண்பர்கள் படத்தில் நடித்த கேடி நடிகை தன்னுடன் நடித்த ஹீரோ ஒருவரை விழுந்து விழுந்து தீவிரமாக காதலித்தாராம். பல மாதங்களாக அவருடன் நட்பு பாராட்டிய நடிகை அவருடன் சேர்ந்து டேட்டிங் கூட சென்றாராம். 

ஆனால், இந்த காதல் கடைசியில் கைகூடாமல் போய்விட்டதாம். அந்த காதல் தோல்வியடைந்ததால் அவர் மிகுந்த மனவேதனையில் உள்ளாராம் நடிகை. 

இந்நிலையில், வெளிநாட்டச் சேர்ந்த ஒருவரையும் நடிகை காதலிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், நடிகையோ காதலில் தோல்வியடைந்த நான் யாரையும் காதலிக்கவில்லை என கூறி வருகிறாராம். 

சாண்டல் ‌காமெடியரின் மாஸ்டர் பிளான்

சாண்டல் காமெடி நடிகர் அடுத்தும் சொந்தமாக ஒரு படம் எடுக்க போகிறாராம். 

கலைத்தாகத்துல அவர் படம் எடுக்கப்போறார்னு நினைச்சுக்காதீங்க. அவர் கணக்கு வழக்குகளை பார்க்குற ஆடிட்டர் கொடுத்த ஐடியாவம் இது. 

ஒரே வரவாத்தான் இருக்கு செலவையே காணோம். அதனால சொந்தமா ஒரு படம் எடுத்தா எக்கச்சக்க செலவு கணக்குகளை எழுதி டாக்ஸ் டார்சர்லேருந்து தப்பிச்சிரலாமுன்னு சொல்லியிருக்காராம். 

அதனால இந்த முறை லட்டு மாதிரி துட்டு குறைவான படம் எடுக்காமல் பெரிய ஸ்டார், பெரிய பட்ஜெட்னு இறங்கப்போறாராம். ஹிட்டானா துட்டு, ஃப்ளாப் ஆனா வரியிலிருந்து விடுதலைங்றதுதான் இப்போதைய பிளானாம். 

விஜய், அஜீத் படங்களுக்கு மத்தியில் தில்லாக களமிறங்கும் வடிவேலு


இரண்டரை ஆண்டுகளுக்குப்பிறகு வடிவேலு நாயகனாக நடித்து வரும் படம் ஜெகஜாலபுஜபல தெனாலிராமன். 

அவர் இரண்டு வேடங்களில் நடித்து வரும் இப்படம் ஆரம்பத்தில் சில பிரச்னைகளில் தடுமாறினாலும், அதன்பிறகு நடந்த சில சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப்பிறகு சீராக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

சென்னை ஏவிஎம்மில் பிரமாண்ட தர்பார் செட் போட்டு படமாக்கியவர்கள் இப்போது குற்றாலத்தில் முகாமிட்டுள்ளனர். அங்கு அருவியில் குளிப்பது போன்ற சில கிளுகிளுப்பான காட்சிகள் படமாகி வருகிறதாம். 

ஆக, ஆரம்பத்தில் சூடாக இருந்த வடிவேலு இப்போது குளுகுளுவென்று குளிர்ச்சியாக காணப்படுகிறாராம்.

அவர் ஒத்துழைப்பு பிரமாதமாக இருப்பதால் விரைவில் படப்பிடிப்பு முடிந்து விடும் என்கிறார்கள். அதனால் வருகிற பொங்கல் தினத்தில் தெனாலிராமனை ரசிகர்களுக்கு விருந்து படைக்கவும் தயாராகி விட்டார்களாம். 

சமீபத்தில் கூட நாகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வடிவேலும், படத்தை பொங்கலுக்கு வெளியிட போவதாக அறிவித்தார். இதே நாளில் அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா, கார்த்தியின் பிரியாணி ஆகிய படங்கள் வெளியாகயிருப்பது தெரிந்தும் தில்லாக களமிறங்குகிறாராம் வைகைப்புயல்.

6 மெழுகுவர்த்திகள் - சினிமா விமர்சனம்


‘12பி’ படத்திற்குப்பின் எத்தனையோ படங்களில் நடித்திருந்தும் எதிர்பார்த்த இடத்தை இன்னமும் பிடிக்காமல் இருக்கும் கதாநாயகர் ஷாமுக்கு முன்னணி இளம் ஹீரோக்கள் வரிசையில் இடம்பிடிக்க ஏதுவாக வெளிவந்திருக்கும் படம். ‘முகவரி’ படத்திற்குப்பின் எத்தனையோ படங்களை இயக்கி இருந்தும் தனக்கென சரியான ஓர் இடத்‌தை பிடித்து வைத்துக்கொள்ளாத இயக்குநர் வி.இசட்.துரைக்கு சரியான ஒரு இடத்தை பெற்றுத்தர வெளிவந்துள்ள திரைப்படம்... என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை, எதிர்பார்க்கப்பட்டதற்கும் மேலாக பூர்த்தி செய்யும்படியாக பிரமாண்டமாகவும், பிரமாதமாகவும் வந்திருக்கிறது ‘6 மெழுகுவர்த்திகள்’ திரைப்படம் என்றால் மிகையல்ல!

இந்திய அளவில் ‘நெட்வொர்க்’ அமைத்து குழந்தை கடத்தும் கும்பலை பற்றிய கதைதான் ‘6 மெழுகுவர்த்திகள்’ மொத்த படமும்! குழந்தைகள் எதற்காகவெல்லாம் கடத்தப்படுகின்றன... எங்கெல்லாம் விற்கப்படுகின்றன... எப்படியெல்லாம் சித்ரவதை செய்யப்படுகின்றன என்னும் விஷயங்களை இதுவரை இந்திய மொழிப்படங்களில் இவ்வளவு விலாவாரியாக யாரும் சொல்லியிருப்பார்களா? தெரியவில்லை! அந்த ஒரு விஷயத்திற்காகவே இயக்குநர் வி.இசட்.துரைக்கு இந்திய அளவில் சிறந்த இயக்குநர் என்னும் தேசிய விருதினை கொடுக்கலாம்!

‘6 மெழுகுவர்த்திகள்’ கதைப்படி, தங்கள் ஒற்றை ஆண் குழந்தையின் 6வது பிறந்த தினத்தின்போது கேக் எல்லாம் வெட்டிமுடித்தும் முடிக்காமலும் ஹாயாக ‌குழந்‌தையுடன் மெரீனா பீச்சுக்கு போகிறது ஷாம்-பூனம் கவுரின் அழகிய சிறு குடும்பம்! அங்கு சின்னதாக ஒரு கவன பிசகலில் இருவரும் குழந்தையை தொலைத்துவிட்டு தேட, எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை! 

இவர்களின் கதறலை பார்த்துவிட்டு ஓடிவரும் சுற்றமும் நட்பும் கூறும் ஆலோசனையின்படி போலீசுக்கு போகின்றனர். முதலில் போக்கு காட்டும் போலீசும் பிறகு சமூக விரோதிகளை சட்டத்திற்கு தெரியாமல் அடையாளம் காட்டி அவர்கள் கேட்பதை கொடுத்து குழந்தையை மீட்டுக்கொள்ளும்படி ‘எஸ்’ ஆகிறது! அப்புறம்? அப்புறமென்ன? குழந்‌தையைத் தேடி ஷாம், ஆந்திரா நகரி, வாரங்கல், போபால், மும்பை, கோவா, கொல்கத்தா என அவர்கள் கைகாட்டும் இடங்களுக்கு எல்லாம் போய் பல இடங்களில் எந்த எதிர்ப்பும் காட்டாமலும் சில இடங்களில் ஆக்ஷனிலும் இறங்கி, 50 லட்சம் காசையும் கொடுத்து, குழந்தையை மீட்டாரா, இல்‌லை மீட்டெடுக்க முடியாது மாண்டாரா?! என்பது திக்திக்திக் க்ளைமாக்ஸ்!

ஷாம், ராம் என்னும் அப்பா கேரக்டரில் நடிக்கவில்‌லை. வாழ்ந்திருக்கிறார். அவரும் பூனம் கவுரும் குழந்தையை தொலைத்துவிட்டு தேடும் காட்சிகளில் ஏதோ படம் பார்க்கும் நாம், நமது குழந்தை செல்வத்தை தொலைத்துவிட்டு தேடுவது போன்றதொரு பிரமை, பயம், திகில் நம்முள் புகுந்துகொண்டு நம்மையும் ராம் என்னும்‌ ஷாமாகவே மாற்றி குழந்தையை தேடவைக்கும் கதை ஓட்டமும் காட்சி பதிவுகளும் 6 மெழுகுவர்த்திகள் திரைப்படத்தின் பெரிய ப்ளஸ்! ஷாம் தைரியமாக இருங்கள். இந்தப் படத்துக்காக உங்களுக்கு விருதுகளும் விழாக்களும் ஏராளம் காத்திருக்கிறது!

நாயகி பூனம் கவுர் லிஸியாக வாழ முற்பட்டிருக்கிறார். மற்றபடி ஷாம்-பூனம் ஜோடியின் நண்பர் குடும்பம் தவிர யாரென்றே தெரியாமல் போலீசுக்கு போகச்சொல்லி உதவ வரும் நபரில் தொடங்கி, போலீஸ் இன்ஸ், கான்ஸ்டபிள், கார் டிரைவர், போபால் மலையாளி வில்லன்‌, கொத்தா பொட்டுவைத்த தாதா வரை எல்லோரும் மறைமுகமாகவோ நேர்முகமாகவோ குழந்தை கடத்தலில் சம்பந்தப்பட்ட கொடூரமானவர்கள். க்ளைமாக்ஸில் ஹீரோவுக்கு உதவும் அந்த ‘பாயை’ தவிர மற்ற அனைவரும் மிக மோசமானவர்கள். ஒவ்வொரு படத்திலும் தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்களை காட்டும் நம் சினிமாக்காரர்களுக்கு சவுக்கடி தரும் விதமாக அந்த இஸ்லாமிய பெரியவரை நல்லவராக காட்டி குழந்தை கடத்துபவர்களும் தீவிரவாதிகள்தான்... என தங்கள் மதத்தினருக்கு ஆறுதலை தர முயன்றிருக்கிறார்கள் இயக்குநர்  வி.இசட்.துரை, நாயகர் ஷாம், தயாரிப்பாளர் மீடியா இன்ஃபினிட்டிவ் நிஜாம் உள்ளிட்டவர்கள்! இவர்களின் முயற்சிக்கு ஸ்ரீகாந்த் தேவாவின் மிரட்டல் இசையும், கிருஷ்ணசாமியின் பிரமாண்ட ஒளிப்பதிவும் பக்க(கா)பலமாக இருந்து 6 மெழுகுவர்த்திகளை ஒளிரவைத்திருக்கின்றன.!

ஆக மொத்தத்தில் ‘6 மெழுகுவர்த்திகள்’ உருகவில்‌லையே! நம்மை உருக்கிவிடுகின்றது!

சினிமா விழாவில் புறக்கணிக்கப்பட்ட தலயும், தளபதியும்

நடைபெற்று வரும் சினிமா விழாவுக்கு தமிழ் சினிமாவின் சில முக்கிய கலைஞர்கள் அழைக்கப்படவில்லை. இருப்பினும் அழைக்கவே மாட்டார்கள் என்று நினைத்த அந்த தளபதி நடிகரையும் அழைத்திருந்தனர். 

ஆனால், விஐபிக்கள் அமரும் வரிசையில், அவருக்கு கடைசியில்தான் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. 

அதைப்பார்த்த சில நடிகர்கள் அவரை முன்னாடி வரிசைக்கு வருமாறு அழைத்தபோது அதை அவர் மறுத்து விட்டாராம். 

சினிமா விழாவை பொறுத்தவரை கவனிக்கப்படாதவராக இருந்த தளபதி நடிகருக்கு இன்னொரு வருத்தமான நிகழ்வும் அங்கு நடந்தது.

அதாவது, நூற்றாண்டு கண்ட சினிமாவில் பெரும்பாலான முக்கிய கலைஞர்கள் சம்பந்தப்பட்ட க்ளிப்பிங்ஸ் திரையிடப்பட்டது. 

ஆனால் தற்போது கூடுதலான இளவட்ட ரசிகர்களை பெற்றிருக்கும் தளபதி சம்பந்தப்பட்ட ஒரு புகைப்படம்கூட அதில் இடம்பெறவில்லை. 

அதனால் மேடையில் பேச அழைக்கும்போதுகூட சோர்வான முகத்துடனேயே பேசிவிட்டு இறங்கிச்சென்றார் நடிகர். இதேபோன்றுதான் த‌ல நடிகருக்கும் நான்காவது வரிசையில்தான் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

மேலும், வெளிமாநிலத்தைச்சேர்ந்த சினிமா கலைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தரப்படவில்லை. என்றாலும் அதை யாரும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் பார்வையாளர்கள் போன்று விழாவுக்கு வந்து விட்டு வெளியேறினர்.
Related Posts Plugin for WordPress, Blogger...