அஜீத்தை டென்சன் செய்த ஸ்டன்ட் கலைஞர்கள்


ஆரம்பம் படத்தையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் வீரம். இதன் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. 

வசன காட்சிகளை எடுத்து வந்த சிவா, திடீரென்று அங்கு செட் அமைத்து ஒரு சண்டை காட்சியை படமாக்கிக்கொண்டிருந்தாராம். 

அதில் தமிழ் சினிமாவைச்சேர்ந்த ஸ்டன்ட் கலைஞர்கள் அஜீத்துடன் நடித்துக்கொண்டிருந்தார்களாம்.

ஆனால் இந்த தகவல், ஆந்திரா ஸ்டன்ட் யூனியனைச்சேர்ந்தவர்களுக்கு தெரியவர, படப்பிடிப்பு தளத்துக்கு வந்து போர்க்கொடி பிடித்தார்களாம். 

காரணம், மற்ற மொழிகளைச்சேர்ந்தவர்கள் தங்களது ஊரில் படப்பிடிப்பு நடத்தினால் தங்கள் யூனியனில் இருக்கும் ஸ்டன்ட் கலைஞர்கள் 30 சதவிகிதத்தினருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் அவர்கள், படப்பிடிப்பை நடத்த விடாமல் தடுத்தார்களாம்.

இதனால் டென்சனான அஜீத், சண்டை காட்சியை படமாக்குவதை உடனடியாக நிறுத்தி விட்டாராம். 

இப்போதைக்கு இந்த பிரச்னையை தவிர்க்க வசன காட்சிகளை படமாக்குவோம் என்று மாற்று ஆலோசனை வழங்கினாராம். 

அதையடுத்து, அஜீத்-தமன்னா மட்டுமின்றி மற்ற நடிகர் நடிகைகளையும் ஆந்திராவுக்கு வரவைத்து வசன காட்சிகளை படமாக்கிக்கொண்டிருக்கிறாராம் சிறுத்தை சிவா.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...