ஆரம்பம் ஆச்சர்யப்பட வைக்கும் பத்து முத்து


ஆரம்பம் ரிலீஸ் பரபரப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள். இப்போதே மனசுக்குள் பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கிறது அவர்களுக்கு. 

அல்டிமேட் ஸ்டாரின் வருகைக்காக தியேட்டர்களில் தோரணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் தல ரசிகர்கள். 

மக்கள் தியேட்டர் ரிசர்வேஷனுக்காக கவுண்டர் முன்னாலும், கம்ப்யூட்டர் முன்னாலும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக இதோ ஆரம்பத்தின் பத்து முத்தான தகவல்கள்.

1. ஆரம்பம், அஜீத்திற்காக எழுதப்பட்ட கதை அல்ல. விஷ்ணுவர்த்தன் பொதுவாக எழுதிய ஆக்ஷன் ஸ்கிரிப்ட். அஜீத்தின் இமேஜுக்காக எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே உருவாகி இருக்கிறது.

2. படத்துக்கு 200 தலைப்புகள் எழுதி வைத்திருந்தார் விஷ்ணுவர்த்தன். அத்தனையும் அஜீத்தின் இமேஜுக்கு ஏற்ற மாதிரியான பில்டப் தலைப்புகள். அதைப் படித்து பார்த்த அஜீத். இந்த பில்டப் கொடுத்து ரசிகர்களை ஏமாற்ற வேண்டாம். 

கதைக்கு  ஏற்ற மாதிரி ஒரு தலைப்பு கொண்டு வாங்க என்றார். அதன் பிறகு உருவான தலைப்புதான் ஆரம்பம். அதற்கு அஜீத் ஓகே சொல்ல தலைப்பை டிசைன் செய்தார் நீல் ராய். பில்லா டைட்டில் டிசைன் செய்தவர். தலைப்பில் இருக்கும் பவர் பட்டனை வடிவமைத்தவர் நீல்ராய். தலைப்பு தாமதமானதால் ரசிகர்கள் எழுதிய அனுப்பிய தலைப்பே ஆயிரத்துக்கும் கூடுதலாம்.

3. ஒவ்வொரு பைட்டுக்கும் தனி தனி ஸ்டண்ட் மாஸ்டர்கள் பணிபுரிந்திருக்கிறார்கள். அதேபோல ஒவ்வொரு பாட்டுக்கு தனித்தனி டான்ஸ் மாஸ்டர்கள் பணிபுரிந்திருக்கறார்கள். தினேஷ் மாஸ்டருக்கு மட்டும் இரண்டு பாடல்.

4. படத்தின் பைக் சேஸ் இல்லை. ஆனால் அஜீத் வேகமாக பைக் ஓட்டும் சீன் இருக்கிறது. பவர்புல்லான போட் சேசிங் இருக்கிறது. இது துபாயில் படமாக்கப்பட்டது. அஜீத்துடன் இதில் நடித்திருப்பவர் இந்தி நடிகை அக்ஷரா கவுடா.

5. ஆக்ஷன் ஏரியா அஜீத்துக்கு, ரொமான்ஸ் ஏரியா ஆர்யாவுக்கு என்று பிரித்து கொடுத்திருக்கிறார்கள். இரண்டும் சந்திக்கும் இடத்திலிருந்து பொறி பறக்க ஆரம்பிக்கும். நயன்தாரா கிளமார் குயினாகவும் வருகிறார். நடிப்பிலும் தனி முத்திரை பதிக்கிறார்.

6. அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும், ஒரு வி.ஐ-.பி கொலை தொடர்பாக வரும் ஒரு இமெயிலை வைத்து ஒரு சர்தேச நெட்வொர்க்கை பிடிக்கும் ஹாலிவுட் பாணியிலான கதை. "இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவான கதை. அந்த சம்பவம் எல்லோருக்கும் தெரிந்த சம்பவம்தான் என்கிறார் டைக்டர் விஷ்ணுவர்த்தன்.

7. மங்காத்தாவில் வரும் அதே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில்தான் வருகிறார் அஜீத். படம் முழுக்க மேக்-அப் போடாமல் நடித்திருக்கிறார். ஒரே கேரக்டரில் நெகட்டிவாகவும் நடித்திருக்கிறார். பாசிட்டிவாகவும் நடித்திருக்கிறார்.

8. அஜீத்துக்கு ஆரம்பத்தில் கோட்-சூட் காஸ்டியூம் கிடையாது. படம் முழுக்க சாதாரண இளைஞர்கள் அணியும் உடைதான். பெரும்பாலும் வி நெக் மற்றம் காலர்டு டீ சர்ட் அணிந்து வருகிறார். அதிலும் கம்பீரமாக இருப்பார். கோட்-சூட் காஸ்ட்டியூமை வேண்டுமென்றே அவாய்ட் பண்ணினார் அஜீத்.

9. ஏற்கெனவே காலில் எலும்பு முறிவுடன் உள்ள அஜீத் இந்தப் படத்திலும் ஒரு பெரிய விபத்தில் சிக்கி உயிர் தப்பினார். மும்பையில் நடந்த படப்பிடிப்பில் அஜீத்தை காரின் முன்னால் பேலட்டில் கட்டி வைத்திருப்பார்கள். ஆர்யா காரை ஓட்டுவது மாதிரி சீன். ஆர்யா காரை 70 கிலோ மீட்டர் வேகத்தில்  ஓட்ட காலை தூக்கியபடி நடித்த அஜீத்தின் கால்கள் தரையை உரச அஜீத் வலியால் துடிக்க ஆர்யா சடன் பிரேக் போட்டதால் தலயின் கால்கள் அன்று தப்பியது.

10. ஆரம்பத்தின் வரவை தமிழ் ரசிகர்கள் வரவேற்க ஆவலாக இருக்கிறார்கள். ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கி விட்டார்கள். மீடியாக்கள் போட்டி போட்டு செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இது எதையுமே தலையில் ஏற்றிக் கொள்ளாமல் கூலாக இருக்கிறார் அஜீத். அதுதான் தல ஸ்டைல்!!

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...