சவாலுக்கே சவால் விடும் ஆரம்பம் அஜீத்

விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜீத், ஆர்யா, நயன்தாரா, டாப்சி ஆகியோரது நடிப்பில் இந்த தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்து படைக்க வரும் படம் ‘ஆரம்பம்’. 

இந்தப்படத்தில் வியக்கத்தக்க பல விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. அஜீத்தின் அதிவேக பைக் ரைடிங், போட் சேஸிங், காருக்கு கார் டூப் இல்லாமல் தாவும் காட்சி என பல ஆச்சர்யப்பட வைக்கும் சாகசங்களை அஜீத் செய்துள்ளார். 

இந்நிலையில் இப்படம் பற்றிய மற்‌றுமொரு சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது. 


ஆரம்பம் படத்தில் அஜீத்தை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு நடிக்கும் காட்சியை விஷ்ணுவர்தன் படமாக்க எண்ணினார். 

இதுதொடர்பாக அஜீத்திடம் விஷ்ணுவர்தன் பேசும்போது, சார் நீங்கள் ஒரே ஒரு முறை மட்டும் தலைகீழாக தொங்கும்படி நடியுங்கள், நான் அதை வைத்து மேனேஜ் பண்ணி கொள்கிறேன் என்றார். 

ஆனால் அஜீத்தோ காட்சிகள் எல்லாம் ரியலாக இருக்க வேண்டும், ரசிகர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள், அவர்களை ஏமாற்ற வேண்டாம் அதனால் முழுகாட்சியை நானே நடிக்கிறேன் என்று சொல்ல கிட்டத்தட்ட மூன்று நாட்கள் அஜீத்தை தொங்கவிட்டு தண்ணீரை ஊற்றி ஊற்றி அந்தகாட்சியை படமாக்கி இருக்கிறார்கள். 

இப்படி படமாக்கும்போது ஒருகட்டத்தில் அஜீத்தின் கண்கள் வீங்கிவிட்டதாம். இருந்தும் அதை பொருட்படுத்தாது நடித்தாராம்.மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள போட் சேஸிங் காட்சியில் அஜீத்தை நடிக்க வேண்டாம் என்று டைரக்டர் சொன்னார். 

இது ரொம்பவும் ஆபத்தானது என்று டைரக்டர் சொல்லியும் அஜீத் அதை கேட்காமல், இரண்டுநாட்கள் போட்டிங் பயிற்சி எடுத்து அந்த சவாலான காட்சியிலும் நடித்து அசத்தினார். ஆக இப்படி படத்தில் பல சவால்களுக்கும் சவால் விடும் வகையில் நடித்துள்ளார் தல அஜீத்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...