கோடிக்கு ஆசைப்பட்டு ரூ.50 லட்சத்தை இழந்த பிரபல நடிகர்


பாலிவுட்டின் பிரபல நடிகர் அக்ஷ்ய் கன்னா. பார்டர், தால், தில் சாக்தா ஹாய், ஹல்சல், ரேஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் மும்பையில் வசித்து வருகிறார். 

மும்பை அந்தேரியில் ‘இன்டேஜ் இமேஜஸ்’ என்று நிறுவனத்தை சக்கரவர்த்தி என்பவர் தன் மனைவி சோனாவுடன் நடத்தி வருகிறார். 

இவர் 2010–ம் ஆண்டு ரூ.50 லட்சம் கட்டினால் 45 நாட்களில் அது இரட்டிப்பாக ரூ.1 கோடியாக தரப்படும் என்ற கவர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்டார். இதை நம்பி ஏராளமானபேர் பணம் கட்டினர். பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் கன்னாவும் ரூ.1 கோடி கிடைக்கும் ஆசையில் 50 லட்சம் ரூபாய் பணம் கட்டினார். 

ஆனால் அவர்கள் சொன்னபடி 45 நாட்கள் கழித்து இன்டேஜ் இமேஜஸ் நிறுவனத்துக்கு, அக்ஷ்ய் போன் செய்துள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை இந்தா தருகிறேன், அந்தா தருகிறேன் என்று இழுத்தடித்துள்ளனர். 

ஒருகட்டத்தில் அவர்கள் மோசடி பேர்வழி என்பதை உணர்ந்த அக்ஷ்ய், மும்பை மலபார் ஹில்ஸ் பகுதியில் உள்ள போலீசில் புகார் செய்தார். போலீசாரும் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். 

மோசடி செய்பவர்கள் பற்றி என்னதான் தினம் தினம் செய்திகள் வந்தாலும், அவர்கள் அறிவிக்கும் கவர்ச்சிகரமான சலுகைகளை நம்பி, பணம் கட்டி ஏமாறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் நடிகர்கள் என்ன சாதாரண பொதுமக்கள் என்ன...? ஆசை யாரைவிட்டது

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...