அருந்ததி புகழ் அனுஷ்கா சிறந்த பர்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்ட் என்பதால் அவர் மீது எப்போதுமே டைரக்டர்களுக்கு தனி மரியாதை உண்டு.
அதை அவரும் காப்பாற்றிக்கொள்ளும் வகையில்தான் இதுவரை நடித்துக்கொண்டிருக்கிறார்.
அதிலும், முதன்முதலாக இரண்டு வேடங்களில் நடித்துள்ள இரண்டாம் உலகம் படத்தில் இன்னும் பலபடி மேலே சென்று சிறப்பாக நடித்துள்ளாராம் அனுஷ்கா.
அதனால் சென்னையில் அப்படத்தின் ஆடியோ விழா நடைபெற்றபோது அனுஷ்காவின் நடிப்பை கூடுதலாக புகழ்ந்து பேசிய செல்வராகவன், சமீபத்தில் ஆந்திராவில் அதன் ஆடியோவை வெளியிட்டபோது இன்னும் கூடுதலாக பேசி அனுஷ்காவை திக்குமுக்காட வைத்து விட்டாராம்.
குறிப்பாக, இந்த படத்தில் ஆர்யா ஹீரோவாக நடித்திருந்தாலும், கதைப்படி அனுஷ்காதான் ஹீரோ. அந்த அளவுக்கு இரண்டு மாறுபட்ட வேடங்களில் வித்தியாசமான பர்பாமென்ஸை கொடுத்துள்ளார்.
மேலும், இந்த படத்தில் அவரை எனது கதாநாயகியாகத்தான் நான் பார்த்தேன். ஆனால், அவரோ என்னை ஒரு அண்ணனாக கருதினார்.
என் மேல் அவருக்கு தனி அக்கறை. அப்போதெல்லாம் என் கண்களுக்கு அவர் எனது கூடப்பொறந்த தங்கை மாதிரிதான் தெரிந்தார். அந்த வகையில், இரண்டாம் உலகம் படம் எனக்கொரு நல்ல தங்கையையும் தந்திருக்கிறது என்கிறார் செல்வராகவன்.
இப்படி சொல்லும் செல்வராகவன், ஐதராபாத்தில் இரண்டாம் உலகம் படத்தின் தெலுங்கு பதிப்பு ட்ரெய்லரை வெளியிட்டபோது, ஆர்யாவை, அனுஷ்கா அடித்து மிதிப்பது போன்ற மாதிரி ஆக்சன் காட்சியை வெளியிட்டு புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறாராம்.
0 comments:
Post a Comment