மங்காத்தா விளையாட்டுக்குப்பிறகு மேல்தட்டு ஹீரோக்கள் சிலரிடம் கால்சீட் கேட்ட அப்பட டைரக்டரை நம்பி யாரும் கதைகூட கேட்கவில்லை.
அதனால் வேறு வழியில்லாமல் சகுனி நடிகரிடம் கதை சொல்லி ஓ.கே பண்ணினார். ஆனால், படப்பிடிப்பு தொடங்கியபோது அவர்களுக்குள் ஏகப்பட்ட பிரச்னை.
கதையை சொன்னபடி படமாக்கவில்லை என்று கொடி பிடித்த ஹீரோ, பின்னர் ஒரு நாளைக்கு ஒரு சீன் கூட எடுக்கமாட்டேன் என்கிறார். பட்ஜெட்டை பன்மடங்காகி விட்டார் என்று தொடர்ந்து டைரக்டருடன் மோதலில் ஈடுபட்டார்.
இதனால் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் சில மாதங்கள் படப்பிடிப்புகூட கிடப்பில் கிடந்தது. அந்த நேரம் பார்த்து சிவா மனசுல சக்தி டைரக்டரை சந்தித்த சகுனி நடிகர், அவர் சொன்ன கதை பிடித்து போனதும் உடனடியாக அவருக்கு கால்சீட் கொடுத்து நடித்தார்.
இதனால் பிரியாணி ஆறிப்போனால் அப்புறம் பிசுபிசுத்து விடும் என்று நடிகரை தன் பக்கம் இழுத்துப்பார்த்தார் மங்காத்தா.
ஆனால், அவர் அசையவில்லை. விளைவு பிரியாணியை ஆறப்போட்டு விட்டு, இப்போது அழகுராஜாவை வெளியிடுகிறார்.
இதனால் பிரியாணி மீது வைத்திருந்த நம்பிக்கை போன நிலையில், மீண்டும் மங்காத்தா நடிகரிடம் கால்சீட் கேட்டார் பிரியாணி இயக்குனர். அவரோ, அடுத்தடுத்து வெவ்வேறு படங்களில் கமிட்டாகியிருப்பதால், இயக்குனருக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை.
அதனால், அடுத்தபடியாக தனது சென்னை-28, சரோஜா கூட்டணி நடிகர்களை வைத்து ஒரு காமெடி படத்தை எடுக்கும் முயற்சியில் இருக்கிறாராம் பிரியாணி பார்ட்டி.
0 comments:
Post a Comment