பொங்கலுக்கு முன்பே பிரியாணி விருந்து

கார்த்தி, ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள பிரியாணியை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். 

தயாரிப்பாளர் ஸ்டூடியோ ஸ்கிரீன் ஞானவேல் ராஜாவுக்கும், டைரக்டர் வெங்கட்பிரபுவுக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. 

இதற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட ஆல்இன்ஆல் அழகுராஜா ரிலீசாகி தியேட்டரைவிட்டு ரிட்டனும் ஆகிவிட்டது.


அழகுராஜா சரியாக போகாததில் ஹீரோ கார்த்திக்கிற்கும், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கும் வருத்தம். அதனால் சூட்டோடு சூடாக பிரியாணியை கொண்டு வந்து ஒரு ஹிட் கொடுத்து விட வேண்டும் என்று கார்த்திக் விரும்புகிறார். 

இதனால் வெங்கட் பிரபுக்கும், தயாரிப்பாளருக்கும் இருந்த கருத்து வேறுபாட்டை முடிவுக்கு கொண்டு வந்தவர் படத்தை முடிக்க துரிதப்படுத்தி உள்ளார்.பொங்கலுக்கு பிரியாணி விருந்து வைக்கலாம் என்று நினைத்திருந்தார்கள். 

ஆனால் பொங்கலுக்கு கோச்சடையான், வீரம், ஜில்லா போன்றவை களத்தில் இறங்குவதால் அதோடு போட்டியிட வேண்டாம் தனித்து வரலாம் என்று முடிவு செய்தனர். 

அதன்படி பிரியாணியை டிசம்பர் 20ந் தேதி ரிலீஸ் பண்ண ஏற்பாடு செய்து வருகிறார்கள். படத்தின் சேட்டிலைட் ரைட்ஸ் 10 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...