ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளிவந்துள்ள கிரிஷ்-3 படம் வசூலில் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. முதல்நாளில் மட்டும் ரூ.25.50 கோடி வசூலாகியுள்ளது.
'கோயிமில்கையா', 'கிரிஷ்' படங்களின் வெற்றியை தொடர்ந்து ஹிருத்திக் ரோஷனின் நடிப்பில் வெளியாகியுள்ள மற்றுமொரு பிரமாண்ட படம் தான் ''கிரிஷ்-3''.
ஹிருத்திக்கின் தந்தையும், பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான ராகேஷ் ரோஷன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
ஹிருத்திக் ரோஷன் உடன் பிரியங்கா சோப்ரா, விவேக் ஓபராய், கங்கனா ரணாவத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் சுமார் ரூ.250 கோடி செலவில் மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட படமாகும். படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் பல கோடி ரூபாய் செலவழித்து இருந்தனர்.
தீபாவளி விருந்தாக கிரிஷ்-3 படம் நவம்பர்-1ம் தேதி ரிலீஸானது. படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் கிரிஷ்-3 முதல்நாளில் மட்டும் ரூ.25.50 கோடி வசூல் செய்துள்ளது என ஹிருத்திக் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இப்படம் திரையிடப்பட்ட அனைத்து ஏரியாக்களிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக இருப்பதால் வசூலில், கிரிஷ்-3 ஒரு புதிய மைல்கல்லை எட்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment