அஜீத்தின் 50வது படமான மங்காத்தாவை இயக்கிய பிறகுதான் வெங்கட்பிரபுவுக்கு முன்னணி இயக்குனர் என்ற ஒரு அங்கீகாரம் கிடைத்தது.
அதனால் அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்து மேலும் சில முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டார்.
ஆனால், அது செட்டாகவில்லை. அதனால் கார்த்தியை வைத்து பிரியாணி படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் தனது பிறந்த நாளின்போது அஜீத்தை வெங்கட்பிரபு சந்தித்ததாகவும், அப்போது தனது அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டதாகவும் செய்திக்ள பரவியுள்ளன.
இதுகுறித்து வெங்கட் பிரபுவைக்கேட்டால், அவரை சந்தித்தது உண்மை. ஆனால் படம் குறித்து எதுவும் பேசிக்கொள்ளவில்லை என்கிறார்.
மேலும், அஜீத்- விஜய் இரண்டு பேரையும் சேர்த்து ஒரு படம் பண்ண வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம்.
அதை நான் அவர்களிடம் சொன்னபோது இரண்டு பேருமே வில்லன் வேடத்தில்தான் நடிப்பேன் என்று சொன்னார்கள்.
ஆனால், அவர்கள் ரெண்டு பேரையும் சரிசமமான ஒரு கதையில் நடிக்க வைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாக உள்ளது.
அதனால் அப்படியொரு நல்ல ஸ்கிரிப்ட் அமையும்போது கண்டிப்பா அவர்களிடம் ஓ.கே வாங்கி அதற்கான முயற்சியில் இறங்குவேன் என்கிறார் வெங்கட்பிரபு.
0 comments:
Post a Comment