வருகிற டிசம்பர் 12ந் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள். அன்று கோச்சடையான் ரிலீசாகவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனால் ரஜினி ரசிகர்களும், பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர்.
சில காரணங்களினால் கோச்சடையான் பொங்கல் அன்று ரிலீசாகும் என்று தெரிகிறது. டிசம்பர் 12ந் தேதி கோச்சடையான் ஆடியோ ரிலீசை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
ரஜினி பிறந்த நாளில் கோச்சடையான் வராவிட்டாலும் அந்த இடத்துக்கு பரட்டை வருகிறார்.
ரஜினி கமல் இணைந்து நடித்த 16 வயதினிலே டிஜிட்டலாக மாற்றப்பட்டு அகன்ற திரையில் திரையிடப்படுகிறது.
36 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி பரட்டை என்ற வில்லன் கேரக்டரில் நடித்த படம். "இது எப்படி இருக்கு?" என்கிற அவரது பேமசான பன்ஞ் டயலாக் இடம் பெற்ற படம்.
இதனை கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார். டிசம்பர் 12 அன்று தமிழ் நாட்டில் 350 தியேட்டர்களிலும், பெங்களூரில் 55 தியேட்டர்களிலும், மும்பையில் 10 தியேட்டர்களிலும் திரையிடப்படுகிறது.
0 comments:
Post a Comment