தமிழில் பரத் ஜோடியாக, யுவன் யுவதி என்ற படத்தில் நடித்தவர், ரீமா கல்லிங்கல். அதன் பின், தன் தாய்மொழியான மலையாளத்தில் பிசியாகி விட்ட ரீமா, பிரபல மலையாளப் பட இயக்குனர், அபு ஆஷிக்கை காதலித்து, சமீபத்தில் திருமணம் செய்தார்.
இதையடுத்து, இத்துடன், சினிமாவுக்கு முழுக்கு போடப் போகிறார் என, பேச்சு அடிபட்டது. இதைக்கேட்டதும், டென்ஷனாகி விட்டார், ரீமா. இப்போது தான், நாலு காசு சம்பாதிக்க துவங்கியிருக்கோம்.
அதற்குள், புரளியை கிளப்பி, பிழைப்பை கெடுத்து விடுவார்கள் போலிருக்கிறதே என, கோபத்தில், கத்த துவங்கி விட்டாராம்.இதையடுத்து, தொடர்ந்து நடிக்கப் போவதாக, பகிரங்க பேட்டி கொடுத்துள்ளார்.
திருமணத்துக்கு பின், பெரும்பாலும் நடிகைகளுக்கு, தொடந்து நடிப்பதற்கு, கணவரின் அனுமதி கிடைப்பதில்லை.
ஆனாலும், என் கணவரும் ஒரு டைரக்டர் என்பதால், மீண்டும் நடிக்க நான் விருப்பம் தெரிவித்தபோது, அதற்கு எந்த மறுப்பும் சொல்லாமல், பச்சை கொடி காட்டி விட்டார். அதனால், வழக்கம் போல் நடிக்க தயாராகி விட்டேன் என்கிறார்.
0 comments:
Post a Comment