12 வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு பாட்டெழுதிய வைரமுத்து

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் அனைத்து படங்களிலும் வைரமுத்து இருப்பார். சில படங்களில் வேறு சில கவிஞர்கள் இடம்பெற்றாலும், அதிகபட்ச பாடல்களை வைரமுத்துதான் எழுதி வருகிறார். 

ஆனால், விஜய் நடிக்கும் படங்களுக்கு அதிகமாக ரகுமான் இசையமைக்காததால், விஜய் படங்களில் வைரமுத்துவின் பாடல்கள் இடம்பெறுவதும் குறைவாக உள்ளது. 


அதனால் சுமார் 12 வருடங்களுக்கு முன்பு விஜய் நடித்த யூத் படத்துக்கு பாடல் எழுதிய வைரமுத்துவிற்கு, அதன்பிறகு விஜய் படங்களுக்கு பாட்டு எழுதும் சந்தர்ப்பமே அமையவில்லை. 

ஆனால் தற்போது நேசன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜில்லா படத்தில் மீண்டும் பாடல் எழுதியிருக்கிறார். 

டி.இமான் இசையில் வைரமுத்து எழுதியுள்ள கண்டாங்கி கண்டாங்கி என்ற பாடலை சமீபத்தில்தான் ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து பாடினார் விஜய்.பாடலை பாடி முடித்தவர், பாடலின் இசையும், வரிகளும் அருமையாக உள்ளது. எனது லேட்டஸ்ட் ஹிட் பாடல்களான கூகுள் கூகுள், வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடல்கள் வரிசையில் இந்த பாடலும் பெரிய அளவில் ஹிட்டாகும் என்று தெரிவித்துள்ள விஜய், இப்பாடலைத்தான் தற்போது அடிக்கடி முணுமுணுத்துக்கொண்டிருக்கிறாராம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...