விஜயசேதுபதியின் நன்றிக்கடன்

சினிமாவில் தலைகாட்டுவதற்கு முன்பு கூத்துப்பட்டறையில் கணக்காளராக வேலை பார்த்து வந்தவர்தான் விஜயசேதுபதி. அப்போது நண்பர் ஒருவர் எடுத்த குறும் படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடிக்க ஆள் இல்லாமல், விஜயசேதுபதியை நடிக்கச்சொன்னாராம். 

ஆனால் அந்த குறும் படத்தில் நடித்து முடித்தபோது, பலரும் பாராட்டினார்களாம். அங்கிருந்துதான் விஜயசேதுபதியின் நடிப்பு பயணம் ஸ்டார்ட் ஆகியிருக்கிறது.


அதன்பிறகு விஜய், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நடித்து வந்திருக்கிறார். 

அப்போதுதான் தனது தென்மேற்கு பருவக்காற்று படத்துக்கு புதுமுக நடிகர் தேடி வந்த சீனுராமசாமி, ஏற்கனவே சினிமாவில் முகம் காட்டியவராக இருந்தால் வேலை வாங்குவது எளிது என்று விஜயசேதுபதிக்கு சான்ஸ் கொடுத்திருக்கிறார். 

அப்படி ஹீரோவானவர்தான் விஜயசேதுபதி. ஆனால், இப்போது இளவட்ட நடிகர்களின் முன்னணியில் இருக்கிறார். அவர் தொட்டதெல்லாம் ஹிட் என்கிற நிலையாகி விட்டது.



இந்த நேரத்தில் நீர்ப்பறவை படத்தின் தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்காக, அப்படத்தில் நடித்த விஷ்ணுவைக்கொண்டே இடம் பொருள் ஏவல் என்றொரு படத்தை தற்போது இயக்கி வருகிறார் சீனுராமசாமி. 

இந்த படத்தில் விஜயசேதுபதி ஒரு கேரக்டரில் நடித்தால் தனது படத்துக்கு பலமாக இருக்குமே என்று அவரிடம் தயங்கியபடியே கேட்டாராம் சீனு.



அடுத்த நிமிசமே, நீங்கள் என்னிடம் தயங்கி கேட்க வேண்டுமா. நடி என்று சொன்னால் நடித்து விட்டுப்போகிறேன் என்று உடனே சம்மதம் சொன்னாராம் விஜயசேதுபதி. 

ஹீரோவாக நடிக்கவே கைநிறைய படங்கள் இருந்தபோதும், தனக்கு ஹீரோ என்கிற அங்கீகாரத்தை முதலில் கொடுத்த சீனுராமசாமிக்காக இப்படி நன்றிக்கடன் செய்கிறாராம் விஜயசேதுபதி.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...