அரசியல் பஞ்ச், ஆடிப்போன தளபதி

சமீபத்திய நடிகர்களுக்கு நாலு படம் ஓடிவிட்டாலே அடுத்து நேரடியாக கோட்டையை பிடிச்சுட வேண்டியதுதான் என்கிற துணிச்சல் வந்து விடுகிறது. 
அதன்காரணமாக, அதுவரை அடக்கி வாசித்து வந்தவர்கள், பின்னர், ஆளுங்கட்சிக்கு எதிரான பஞ்ச் டயலாக்குகளை ஆவேசமாக எடுத்து விடுகிறார்கள். 

ஆனால் இப்படி தொடர்ந்து அவர்கள் அட்டாக் கொடுப்பதால்,அரசியல்வாதிகளின் அதிருப்திக்கும் ஆளாகிறார்கள்.

இப்படி சமீபத்தில் தான் நடித்த மூன்றெழுத்து படத்தின் மூலம் அரசியல் கட்சியின் எதிர்ப்பினை சம்பாதித்த தளபதி நடிகர், தனது புதிய படத்தில் அரசியல் என்ற வார்த்தைகூட இருக்கக்கூடாது என்று ஆரம்பத்தில் இருந்தே கேட்டுக்கொண்டு வருகிறாராம். 

ஆனால், சமீபத்தில் நடிகரை சந்தித்த மேற்படி பட டைரக்டர், ஒரேயொரு இடத்தில் மறைமுகமாக ஒரு அரசியல் பஞ்ச் வைத்தால் என்ன என்று வார்த்தைவிட, ஆடிப்போனாராம் தளபதி. 

அப்படியெல்லாம் எதையாவது செய்து படத்தை தியேட்டருக்கு வர விடாமல் செய்துவிடாதீர்கள் என்று கொதித்து விட்டாராம்.

ஆனபோதும், தனக்கான ரசிகர்கள் வசனங்களைக் கேட்டு ஆர்ப்பரிப்பார்கள். அவர்களின் கரகோஷத்தில் அரங்கமே அதிரும். 

ஆனால், இந்த படத்தில் அப்படி எதுவும் இல்லாததால் ரசிகர்கள் ஏமாந்து போவார்களே என்று பெரும் கவலையில் இருக்கிறாராம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...