அஜீத் நடிக்கும் வீரம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது.
இன்னும் ஒரு சில நாட்களில் படப்பிடிப்பு முடிந்து விடும். "வீரம் நிச்சயம் பொங்கலுக்கு ரசிகர்களை மகிழ்ச்சியூட்டும்" என்று படத்தின் தயாரிப்பாளர்கள் வெங்கட்ராமரெட்டி, மற்றும் பாரதி ரெட்டி அறிவித்துள்ளனர்.
நவம்பர் 20 முதல் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் தொடங்குகிறது.
படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். சந்தானம், பாலா, விதார்த், முனிஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
பொங்கலுக்கு சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் வருவதால், பொங்கலுக்கு வருவதாக சொன்ன சில படங்கள் தள்ளிப்போகலாம் என்ற செய்தி பரவியதால் பொங்கலுக்கு வீரம் உறுதி என்பதை படத்தின் தயாரிப்பாளர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.
0 comments:
Post a Comment