விஜய், அஜீத் படங்களுக்கு மத்தியில் தில்லாக களமிறங்கும் வடிவேலு


இரண்டரை ஆண்டுகளுக்குப்பிறகு வடிவேலு நாயகனாக நடித்து வரும் படம் ஜெகஜாலபுஜபல தெனாலிராமன். 

அவர் இரண்டு வேடங்களில் நடித்து வரும் இப்படம் ஆரம்பத்தில் சில பிரச்னைகளில் தடுமாறினாலும், அதன்பிறகு நடந்த சில சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப்பிறகு சீராக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

சென்னை ஏவிஎம்மில் பிரமாண்ட தர்பார் செட் போட்டு படமாக்கியவர்கள் இப்போது குற்றாலத்தில் முகாமிட்டுள்ளனர். அங்கு அருவியில் குளிப்பது போன்ற சில கிளுகிளுப்பான காட்சிகள் படமாகி வருகிறதாம். 

ஆக, ஆரம்பத்தில் சூடாக இருந்த வடிவேலு இப்போது குளுகுளுவென்று குளிர்ச்சியாக காணப்படுகிறாராம்.

அவர் ஒத்துழைப்பு பிரமாதமாக இருப்பதால் விரைவில் படப்பிடிப்பு முடிந்து விடும் என்கிறார்கள். அதனால் வருகிற பொங்கல் தினத்தில் தெனாலிராமனை ரசிகர்களுக்கு விருந்து படைக்கவும் தயாராகி விட்டார்களாம். 

சமீபத்தில் கூட நாகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வடிவேலும், படத்தை பொங்கலுக்கு வெளியிட போவதாக அறிவித்தார். இதே நாளில் அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா, கார்த்தியின் பிரியாணி ஆகிய படங்கள் வெளியாகயிருப்பது தெரிந்தும் தில்லாக களமிறங்குகிறாராம் வைகைப்புயல்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...