அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்துள்ள படம் ஆரம்பம். விஷ்ணுவர்த்தன் டைரக்ட் செய்துள்ளார். ஏ.எம்.ரத்தினம் தயாரித்துள்ளார். வருகிற 31ந் தேதி படம் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆரம்பம் படத்திற்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை செனாய் நகரைச் சேர்ந்த பி.ராஜேஸ்வரி என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் படத்துக்கு எதிரான மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் 2005ம் ஆண்டு கேடி என்ற படத்தை தயாரித்தார் (ஏ.எம்.ரத்தினம் மகன் ஜோதி கிருஷ்ணா டைரக்ட் செய்தது. இதில்தான் தமன்னானவும், இலியானாவும் அறிமுகமானார்கள்) அந்த படம் தயாரிக்க என் மகனிடம் ஒரு கோடியே 50 லட்சம் கடன் வாங்கினார்.
அதை விரைவில் திருப்பித் தந்துவிடுவதாக அவர் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் அந்தப் படம் வெளிவர நாங்கள் தடையில்லா கடிதம் கொடுத்தோம். ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதிப்படி இதுவரை பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.
இப்போது அவர் ஆரம்பம் என்ற படத்தை தயாரித்து வெளியிடுவதாக அறிந்தோம். என் மகனிடம் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் சேர்த்து 4 கோடியே 60 லட்சம் தந்த பிறகே படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும். என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவுக்கு இரண்டு வாரத்துக்குள் பதில் அளிக்க ஏ.எம்.ரத்தினத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மனுமீதான விசாரணை வருகிற 25ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment