இந்தி, தெலுங்கில் உருவான ராமையா வஸ்தாவையா என்ற இரண்டு படங்களிலும் நடித்திருப்பவர் ஸ்ருதிஹாசன். இதில் இந்தி பதிப்பை பிரபுதேவா இயக்கி வெளியாகி விட்டது. ஆனால், தெலுங்கில் இயக்கிய படம்தான் இன்னும் திரைக்கு வரவில்லை. இப்படத்தில் சமந்தா, ஸ்ருதிஹாசன் இருவரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ‘இப்படத்தில் சமந்தா தான் நாயகி, ஸ்ருதிஹாசனுக்கு வில்லிவேடம்’ என்று ஆந்திராவில் சூடான செய்தி பரவி விட்டதாம். இதனால் பலத்த அதிர்ச்சி அடைந்த ஸ்ருதி, அதை மறுத்துள்ளார். ‘இப்படத்தில் சமந்தாவை போல் நானும் ஒரு கதாநாயகி தான். அதிலும், வழக்கம் போல் பாடல் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படாமல், ஒரு சஸ்பென்ஸ் ரோலில் என்னை நடிக்க வைத்துள்ளார் இயக்குனர்’ என்கிறார் ஸ்ருதி ஹாசன்.
0 comments:
Post a Comment