தயாரிப்பாளரை பதம் பார்த்த விரல்வித்தை நடிகர்


விரல்வித்தை நடிகரை வைத்து படம் தயாரிக்க வேண்டுமென்றாலே ஒரு தனி தில் வேண்டும். அதிலும் தற்போது அவரை வைத்து ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரித்து வரும் அந்த படாதிபதிக்கு ரொம்பதான் தில்லு என்றுதான் சொல்ல வேண்டும். 

ஆனால், நடிகரிடம் சிக்கி அவர் படும் பாட்டை கேட்டால் கல்லும் கரைந்து போகும் என்கிறார்கள். அந்த அளவுக்கு டார்ச்சர் கொடுக்கிறாராம் நடிகர்.

ஒரு படத்துக்கான செட்டை ஆந்திராவில் போட்டு வைத்து விட்டு படப்பிடிப்புக்கு அழைத்தால், இப்போது இந்த படம் வேண்டாம் அந்த படத்தை படமாக்குவோம் என்கிறாராம். 

சரி அதையாவது செய்வோம் என்று படாதிபதி செட்டை அப்படியே போட்டு விட்டு நடிகர் காட்டும் திசையில் சென்றால், அங்கேயும் இரண்டொரு நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு, மூடு சரியில்லை பேக்கப் செய்யுங்கள் என்று சென்னைக்கு எஸ்கேப் ஆகி விடுகிறாராம்.

இப்படி நடிகர் செய்த அக்கப்போரினால், மேற்படி தயாரிப்பாளருக்கு 35 லட்சத்திற்கு மேல் செட் போட்ட வகையில் நஷ்டமாகி விட்டதாம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...