உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் பற்றி ஏராளமான வதந்திகள் தொடர்ந்து உலா வந்தவண்ணம் உள்ளது.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரசிகர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிட ரஜினி முடிவு செய்துள்ளார். ரஜினிகாந்த் சென்னையில் சிகிச்சை பெற்றபோது அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவின.
மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லும் முன் ரசிகர்களுக்காக ரஜினிகாந்த் வாய்ஸ் வெளியிடப்பட்டது. அதில் ரசிகர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்; நல்லபடியா திரும்பி வருவேன், என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் ரஜினி உடல்நிலை குறித்து அவரது மருமகனும், நடிகருமான தனுஷ் அளித்த பேட்டியில், ரஜினிகாந்த் தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ரஜினிகாந்த் சிங்கப்பூரில் நலமாக இருக்கிறார்.
அவருடைய உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கிறது. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவருக்கு மிக சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனால்தான் அவர் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற முடிந்தது. அவருடைய உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருடைய நோய்க்கான மூல காரணத்தை சிங்கப்பூர் டாக்டர்கள் கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்கிறார்கள். அதை குணப்படுத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை.
அவருடைய நுரையீரலில் இருந்த பிரச்சினை எப்போதோ குணப்படுத்தப்பட்டு விட்டது. இப்போது அவர் எல்லா உணவுகளையும் சாப்பிடுகிறார். டி.வி.யில் படம் பார்க்கிறார். எழுந்து நடக்கிறார். மூன்று நாட்களில் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்துவிடுகிற அளவுக்கு அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றது போல் இருக்கட்டும் என்று நாங்களாகத்தான் அவரை மேலும் சில நாட்கள் ஆஸ்பத்திரியில் உட்கார வைத்து இருக்கிறோம். இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் அவர் சென்னை திரும்பி விடுவார். இங்கே வந்ததும் அவர் ஒரு அறிக்கை விட இருக்கிறார், என்றார்.
0 comments:
Post a Comment