டைரக்டர் வெங்கட்பிரபுவின் மங்காத்தா படம் புதிய சர்ச்சையில் சி்க்கியிருக்கிறது. நேரடி தமிழ்ப்படம் என்ற பெயரில் வெளியானாலும் அந்த படம் ஏதோஒரு மொழியின் தழுவல் என்று சர்ச்சையை கிளப்புவதற்கென்றே சினிமாவில் சிலர் இருக்கிறார்கள்.
அப்படியொரு சர்ச்சையில்தான் இப்போது மங்காத்தா சிக்கியிருக்கிறது. சரோஜா படம் ரீலிஸ் ஆனபோது அந்த படம் பேபல் என்ற படத்தின் தழுவல் என்று கூறப்பட்டது.
அதனை மறுக்காத வெங்கட்பிரபு, பேபல் படத்தின் ஸ்கிரீன்ப்ளேயின் பாதிப்பிலேயே சரோஜா திரைக்கதையை அமைத்தேன் என்று கூறினார்.
இப்போது அவரது இயக்கத்தில் உருவாகி வரும் மங்காத்தா படமும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. இந்தியில் மேட்ச் பிக்சிங்கை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இம்ரான் ஹஸ்மி நடித்த ஜான்னெட் படத்தின் தழுவலாகத்தான் மங்காத்தா உருவாகியிருக்கிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் அதனை அடியோடு மறுத்திருக்கிறார் மங்காத்தா தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி. இரண்டு படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியிருக்கும் அவர், படம் வெளிவந்தால் ரசிகர்களுக்கே இது தெரிந்துவிடும் என்றும் கூறியிருக்கிறார்.
0 comments:
Post a Comment