எங்கள் ஆசான் படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகாமல் தள்ளி தள்ளி ரிலீஸ் ஆனதால் பணத்தை கொடுத்து எம்.ஜி., எனும் மினிமம் கியாரண்டி முறையில் படத்தை வாங்கிய முத்து, அதை ரிலீஸ் நேரத்தில் டிஸ்டிரிபியூஷன் முறையில் மாற்றி அக்ரிமெண்ட் செய்து கொண்டார் தயாரிப்பாளர் தங்கராஜூடன்.
அதனால் நஷ்டத்தை தயாரிப்பாளர் தங்கராஜ் தரவேண்டும் என்பது முறையே என்றாலும், அதற்காக தங்கராஜூக்கு இவரை அறிமுகம் செய்து வைத்த அப்பாவி தியேட்டர் கன்பார்மர் அபிரகாமை அடித்து உதைப்பது, வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்குவதும் எந்த விதத்தில் நியாயம்...? எனக்கேட்டு ஆபிரகாமும் அவரது நண்பர்களும் பாண்டி முத்து மீது சென்னை வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
இது ஒருபக்கம் என்றால் மற்றொருபக்கம் தயாரிப்பாளரும், நடிகருமான தங்கராஜ், முத்து தன்னிடம் பணத்தை கேட்க வந்தபோது, அடுத்தபடத்தில் அட்ஜெஸ்ட் செய்வதாக நான் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காமல் அடியாட்களை அழைத்து வந்து எனது செல்போனை பிடிங்கி மிரட்டினார் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் பாண்டிமுத்து மீது பரபரப்பு புகார் கொடுத்திருக்கிறார். இதுசம்பந்தமாக போலீசிலும், புரடியூசர் கவுன்சிலிங்லும் பஞ்சாயத்து நடந்து வருகிறது.
பொதுவாக இதுமாதிரி ஒரு படத்தில் அடைந்த நஷ்டத்தை அடுத்த படத்தில் சம்பந்தப்பட்ட டிஸ்ட்ரி பியூட்டர்களுக்கு சரி செய்வது தமிழ்திரை தயாரிப்பாளர்களின் வழக்கம். நடிகர் ஜீவாவின் கால்ஷீட்டை கைவசம் வைத்திருக்கும் தயாரிப்பாளர் தங்கராஜூக்கு அதற்கான வாய்ப்பையே தராமல் வம்பு செய்யும் பாண்டிமுத்து, ஏற்கனவே சண்டை படத்தின் வினியோக உரிமையை, சில ஏரியாக்களுக்கு ஷக்தி சிதம்பரத்திடமிருந்து வாங்கி ரிலீஸ் செய்து துட்டு பார்த்தபின், செகண்ட் ரிலீஸீக்காக விழுப்புரம் பகுதியை, வினியோகஸ்தர் ஒருவருக்கு கொடுத்து ரூபாய் 2லட்சத்திற்காக அவர் வீடு புகுந்து அவரை தூக்கியதோடு, அவர் வீட்டு நகை, நட்டுக்களை எல்லாம் விற்று தன் பணத்தை எடுத்துக்கொண்டு போன குற்றச்சாட்டும் தற்போது பாண்டிமுத்து மீது கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
0 comments:
Post a Comment