முகமூடியின் தோல்விக்கு பிறகு மிஷ்கின் சினிமா நண்பர்கள் தொடர்பை முற்றிலுமாக துண்டித்து விட்டு தனிமையில் வாழ்கிறார். தனது செல்போன், இண்டர்நெட் உட்பட அத்தனை தொடர்புகளையும் துண்டித்து விட்டார்.
அவரின் உதவியாளர்களில் ஒருவர் மட்டுமே அவருடன் தொடர்புகொள்ள முடியும். ஒரு படம் எடுத்து ஜெயித்துக் காட்டிய பிறகுதான் தன் முகத்தையே வெளியில் காட்டுவது என்ற முடிவில் இருக்கிறாராம்.
தனது ஓநாயும், ஆட்டுக்குட்டியும் படம் பற்றி சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர். "நான் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறேன்.
இதன் பிறகு என்னை தேட வேண்டாம், படம் ஹிட்டாகும்போது இதே மாதிரி நான் உங்களை அழைத்துப் பேசுவேன்" அதுவரை நான் தனியாக வேட்டையாடும் ஒநாய்தான் என்றாராம்.
0 comments:
Post a Comment