கேரளாவில் இருந்து வந்த, லட்சுமி மேனன், தற்போது, பிளஸ் 1 படிப்பை தொடர்வது போல், மற்றொரு கேரள நடிகையான, நஸ்ரியா, தற்போது பி.காம்., படிப்பை தொடர்ந்து வருகிறார்.
அவர் கூறுகையில், "நான் குழந்தை நட்சத்திரமாகவே, சினிமாவில் நடிக்கத் துவங்கினேன். நடித்துக் கொண்டே படித்து வந்தேன்.
பிளஸ் 2 படித்த போது, ஒரு மலையாள படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. இப்போது, பல படங்களில் நடித்து, ரொம்ப பிசியாகி விட்டேன்.
ஆனாலும், நடிப்பை போலவே, படிப்பிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. அதனால் தான், தற்போது கேரளாவில் உள்ள கல்லூரியில் பி.காம்., படித்து வருகிறேன்.
முடிந்தவரை, படிப்பு பாதிக்காத வகையில், படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கிறேன் என்கிறார்.
இதனால், படப்பிடிப்பின்போது, புத்தகமும், கையுமாகத் தான், வலம் வருகிறார், நஸ்ரியா.
0 comments:
Post a Comment