ஆகஸ்ட் 9 ல் விஜய்யின் தலைவா ரிலீஸ்


விஜய் ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி, ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த தலைவா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது. 

துப்பாக்கி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய், டைரக்டர் விஜய் இயக்கத்தில் நடித்துள்ள படம் தலைவா. முதன்முறையாக விஜய்யுடன் அமலாபால் ஜோடி சேர்ந்துள்ளார். 

இவருடன் இன்னொரு நடிகையாக இந்தி நடிகை ராகிணியும் இணைந்துள்ளார். இவர்களுடன் சந்தானம், ராஜிவ் பிள்ளை, அபிமன்யூ சிங், சுரேஷ், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்ரீ மிஸ்ரி புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார்.

ஆக்ஷ்ன் மற்றும் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடந்து வந்தன. 

சமீபத்தில் விஜய் பிறந்தநாளின் போது தலைவா படத்தின் ஆடியோவும், டிரைலரும் வெளியிடப்பட்டது. பாட்டும் சரி, டிரைலரும் சரி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. 

இந்நிலையில் தலைவா படம் வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி ரிலீஸ் ஆவதாக ஐயங்கரன் இண்டர்‌நேஷனல் பிலிம் நிறுவனம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் தலைவா படத்தை வேந்தர் மூவிஸ் வெளியிடுகிறது. தமிழகம் தவிர்த்து வெளிநாடுகளில் ஐயங்கரன் நிறுவனம் வெளியிடுகிறது. 

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...