சமந்தாவின் அடுத்த இன்னிங்ஸ்


தற்போது தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாக இருக்கிறார் சமந்தா. அதோடு, தெலுங்கில் ஓரளவு கிளாமராகவும் நடிப்பவர், தமிழில் இன்னமும் கோடு தாண்டாமல் நடித்து வருகிறார். 

இந்த நிலையில், சின்னத்திரையில் நல்ல கதைகள் கிடைத்தால்கூட நடிப்பேன் என்று கூறியுள்ளார். மார்க்கெட் கெட்டியாக இருக்கும் நேரத்தில் இதுமாதிரியெல்லாம் யாராவது யோசிப்பார்களா? என்று சிலர் சமந்தாவிடம் கேட்டார்களாம்.

அதற்கு, தென்னிந்தியாவில்தான் சினிமாவில் நடிப்பவர்கள் சின்னத்திரையில் முகம் காட்டினாலே மட்டமாக நினைக்கிறார்கள். 

ஆனால், பாலிவுட்டில் அப்படியில்லை, அமீர்கான், சல்மான்கான் போன்ற முன்னணி ஹீரோக்களே டி.வியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள். 

டிவியில் முகம் காட்டுவதால் சினிமாவில் அவர்களுக்கு யாரும் சான்ஸ் தர தயங்குவதில்லை. 

அதனால் எனக்கு நல்ல கதைகள் கிடைத்தால் டி.வியில் நடிப்பேன். அப்படி நடித்து எதிர்வரும் காலங்களில் தென்னிந்திய நடிகர்-நடிகைகளும் சினிமா-சின்னத்திரை என இரண்டு துறைகளிலும் அங்கம் வகிக்கும் நிலைமையை ஏற்படுத்துவேன் என்கிறார் சமந்தா.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...