ஆயிரம் அறிவு - ரா-100 வந்தாலும் வேலாயுதம் வெற்றிபெறும்

வடநாட்டிலிருந்து ரா-1 என்ன ரா-100 வந்தாலும் சரி, எத்தனை அறிவு வந்தாலும் சரி, விஜய்யின் வேலாயுதம் படம் தனித்து நின்று வெற்றி பெறும் என்று படத்தின் டைரக்டர் ஜெயம் ராஜா கூறியுள்ளார்.

ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில், விஜய், ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா, சரண்யா மோகன், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலரது நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி, தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படம் "வேலாயுதம்". இப்படம் பற்றி ஜெயம் ராஜாவின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது.

அப்போது பேசிய ராஜா, வேலாயுதம் படத்தை பற்றி நிறையவே பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக படத்தில் இரண்டு நாயகிகள். ஒருவர் ஜெனிலியா, பத்திரிக்கையாளராக வருகிறார். கூடவே விஜய்யும் லவ் பண்ணுகிறார்.

படத்தில் விஜய்க்கு சமமான கேரக்டர் ஜெனிலியாவின் கேரக்டர். அதேபோல் மற்றொரு நாயகியான ஹன்சிகா கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். இவர்கள் இரண்டு பேரை தவிர மூன்றாவது ஹீரோயினாக, விஜய்யின் தங்கையாக சரண்யா மோகன் நடித்துள்ளார்.

வேலாயுதம் படக்குழுவிலேயே நான் பார்த்து, வியந்த நபர் சரண்யா மோகன் தான். படத்தின் காட்சியை பற்றி லேசாக சொன்னாலே போதும், அதை உடனே கேட்டு அற்புதமாக நடித்து கொடுத்துவிடுவார்.

அப்படியொரு ஈடுபாடு நடிப்பில் அவருக்கு என்று பேசிய ராஜாவிடம், சரி... "காவலன்" படத்தை தவிர விஜய்யின் சமீபத்திய படங்கள் அனைத்தும் தோல்வியாகி உள்ளன, இந்தபடம் எப்படி என்று நிருபர் ஒருவர் கேட்க...

உடனே ராஜா, விஜய் மார்க் போடுகிற ஸ்டேஜையெல்லாம் கடந்துவிட்டார். இன்றைக்கு அவர் பெரிய மாஸ் ஹீரோ. படம் வெளியாகிற நாளில் தியேட்டருக்கு திரண்டு வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

நீங்கள் சொல்வது போல தோல்வி என்பதையெல்லாம் தாண்டிய மாஸ் ஹீரோ அவர். விஜய் நடித்த படங்களிலேயே பெஸ்ட் படமாக வேலாயுதம் இருக்கும்.

வடநாட்டில் இருந்து ரா-1 என்ன ரா-100 இருந்தாலும் சரி, எத்தனை அறிவு வந்தாலும் சரி, அதை எல்லாத்தையும் கடந்து நிச்சயம் இந்தபடம் வெற்றிபடமாக இருக்கும். அந்த நம்பிக்கை எனக்கு நிறை‌யவே இருக்கிறது என்றார்.

எப்பவும் தன் அப்பா மோகன் அல்லது தம்பி ஜெயம் ரவியுடன் பிரஸ்மீட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ராஜா, இம்முறை தனது மகள் வர்ணிகா, மனைவி ப்ருந்தா உட்பட குடும்ப சகிகதமாக கலந்து கொண்டார்.

அதுமட்டுமின்றி எப்பவும் தன்னுடைய படங்களை பற்றி மட்டுமே பேசும் ராஜா, இம்முறை தீபாவளிக்கு வர இருக்கும் மற்ற படங்களையும் சவாலுக்கு அழைப்பது போல பேசியது பத்திரிக்கையாளர்கள் உட்பட அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...