நயன்தாரா மீது கொண்ட காதலால், முதல்மனைவி ரமலத்தையே விவாகரத்து செய்துவிட்டு வந்த பிரபுதேவா, விரைவில் அவரை திருமணம் செய்ய இருக்கிறார். இந்நிலையில், இருவருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு, காதல் முறிந்துவிட்டதாகவும், இதனால் திருமணமே நின்று விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிம்புவுடனான காதல் முறிவுக்கு பின்னர் தனிமையில் இருந்த நயன்தாராவுக்கு, "வில்லு" படத்தில் நடித்தபோது டைரக்டர் பிரபுதேவாவுடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நட்பாக பழக ஆரம்பித்த இருவரும் பின்னர் காதலிக்க தொடங்கினர்.
ஆனால் இவர்களது காதலுக்கு பிரபுதேவாவின் முதல் மனைவி ரமலத் எதிர்ப்பு தெரிவித்தார். இருந்தும் தங்களது கள்ளக்காதலில் உறுதியாக இருந்தனர் நயன்-பிரபுதேவா ஜோடி. தனது கணவரை நயன்தாராவிடமிருந்து மீட்டு தாருங்கள் என்று போராட்டம் எல்லாம் நடத்தி, கடைசியாக கோர்ட் படியேறினார் ரமலத்.
இறுதியில் ரமலத்தையே சமாதனம் செய்து விவாகரத்துக்கு சம்மதிக்க வைத்த பிரபுதேவா, ரமலத்திற்கு பலகோடி மதிப்பிலான சொத்துக்களையும் எழுதி கொடுத்தார்.
இதனையடுத்து நயன்-பிரபுதேவா காதலுக்கான சிக்கல் தீர்ந்தது. இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து, திருமண ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இதனிடையே தன்மீது கொண்ட காதலுக்காக முதல் மனைவி ரமலத்தையே விவாகரத்து செய்துவிட்டு வந்த பிரபுதேவாவுக்காக இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா.

மும்பையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் வேளையில், இவர்கள் காதலில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் திருமணத்தை ரத்து செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுபற்றி விசாரித்த போது, முதல் மனைவியை பிரிந்தாலும் தனது குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளாராம் பிரபுதேவா. நயன்தாராவுடனான காதலுக்கு முன்னரும் சரி, இப்போதும் சரி குழந்தைகளுடன் அதிக நேரம் செலவளிப்பது, அவர்களுடன் ஷாப்பிங்க போவது என்று ரொம்ப ப்ரியமாக இருக்கிறார் பிரபுதேவா.

சென்னை வரும்போதெல்லாம் குழந்தைகளை சந்திக்கிறாராம். ஆனால் இது நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை. குழந்தைகளை சந்திக்க நயன்தாரா தடை போட்டதாக தெரிகிறது. இருந்தும் நயன்தாராவுக்கு தெரியாமல் குழந்தைகளை சந்தித்து வருகிறார் பிரபுதேவா.
சமீபத்தில் கேரளா சென்ற பிரபுதேவா, நயன்தாராவிடம் வெளியூர் சூட்டிங்குக்கு போவதாக பொய் சொல்லிவிட்டு சென்னை வந்தாராம். இங்கு குழந்தைகளுடன் தங்கி இருந்துள்ளார். இந்த விஷயம் நயன்தாரா காதுக்கு எட்ட ஆத்திரமானார். பிரபுதேவாவுக்காக சினிமா, குடும்பம் என எல்லாத்தையும் விட்டு வந்த எனக்கு, அவர் துரோகம் செய்துவிட்டார் என்று ஆத்திரப்பட்டுள்ளார்.

மேலும் குழந்தைகளை விட்டு தன்னால் பிரிய முடியாது என்று பிரபுதேவாவும் உறுதியாக கூறிவிட்டாராம். இதையடுத்து பிரபுதேவா - நயன்தாரா காதல் முறிந்து, திருமணம் நின்றுபோனதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment