மணிரத்னம் அடுத்து இயக்கபோகும் படத்தில் எனது 2வது மகள் நடிக்கவில்லை என்று நடிகை ராதா கூறியுள்ளார்.
ராவணன் படத்தை தொடர்ந்து, பொன்னியின் செல்வன் படத்தை கையில் எடுத்த டைரக்டர் மணிரத்னம், பல்வேறு பிரச்சனைகளால் எடுத்த எடுப்பிலேயே அதனை கைவிட்டார். தற்போது மீனவர் பிரச்சனையை மையமாக வைத்து ஒரு கதையை உருவாக்கி வருகிறார்.
இதில் படத்தின் நாயகனாக மாஜி கதாநாயகன் கார்த்திக்கின் மகன் கவுதம் நடிக்க போவதாகவும், கவுதமிற்கு ஜோடியாக மாஜி நாயகி ராதாவின் 2வது மகள் துளசி நடிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை ராதா மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், என்னுடைய 2வது மகள் துளசி மணிரத்னம் படத்தில் நடிப்பதாக வந்த செய்தியில் உண்மையில்லை.
அப்படி இருந்தால் நாங்கள் அதை மறைக்க மாட்டோம். மேலும் மணிரத்னம் படத்தில் நடிக்க யாருக்குத்தான் கசக்கும்.
எனக்கும் கூட, மணிரத்னம் படத்தில் எனது மகள் நடிக்க ஆசையாகத்தான் உள்ளது. ஆனால் அப்படி எதுவும் இதுவரை வரவில்லை. வந்தால் நிச்சயம் சொல்கிறேன் என்றார்.
0 comments:
Post a Comment