ஒ‌ரே நாளில் 22கோடி ரூபாய் வசூல்

ஷாரூக்கான் நடிப்பில் வெளியாகி இருக்கும் ரா-ஒன் படம், முதல் நாளிலேயே 22 ‌கோடி ரூபாய் வசூலாகி சாதனை படைத்திருக்கிறது.

பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக்கான் நடிப்பில் அவரது மனைவி ‌கவுரி கான் தயாரிப்பில், அனுபவ் சின்ஹாவின் கதை இயக்கத்தில் உலகம் முழுவதும் ரிலீசாகி இருக்கும் படம் ரா-1.

மெகா பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீசாகியுள்ளது.

சுமார் 3000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீசாகியுள்ள ரா-1, முதல் நாளிலேயே ரூ.22 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

இந்தியில் ரூ.20கோடியும், தமிழ் மற்றும் தெலுங்கில் தலா ரூ.1 கோடியும் ஈட்டியுள்ளன.

இதற்கு முன்னர் சல்மான் கானின் பாடிகார்ட் படம், நாடு முழுவதும் 2,700 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு, ஒரே நாளில் ரூ. 21 கோடியை வசூலித்தது.

இது தான் இதுவரை இந்திப் படத்தின் சாதனையாக இருந்தது. அ‌தனை "ரா-ஒன்" படம் முறியடித்திருக்கிறது. மேலும் ஒரு வாரத்திற்குள் ரா-ஒன் படம் ரூ.100 கோடி வசூலை எட்டும் என்றும் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...