நடிகர்களை பற்றி புட்டு புட்டு வைக்கும் த்ரிஷா

அஜித், விஜய், விக்ரம் என்று தன்னுடன் நடித்த நடிகர்களின் குணாதிசயங்களை புட்டு புட்டு வைக்கிறார் நடிகை த்ரிஷா. தமிழில் கிட்டத்தட்ட முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டவர் த்ரிஷா.

தற்போது தமிழில் அந்தளவிற்கு வாய்ப்பு இல்லாவிட்டாலும், இப்போதும் தனக்கு மவுசு குறையவில்லை என்று கூறிவரும் த்ரிஷா, கடைசியாக அஜித்துடன் மங்காத்தா படத்தில் நடித்தார்.

த்ரிஷா ரொம்பவே சிம்பிளான கேரக்டரில் வந்து போனாலும், அதில் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் என்று பெருமையாக கூறி வருகிறார்.

இந்நிலையில் அஜித்துடன் கிரீடம், மங்காத்தா போன்ற படங்களில் நடிச்சிருக்கீங்க, அஜித்தை பற்றி என்ன நினைக்கிறீங்க என்று கேட்ட‌போது அஜித் சார், ஸ்ட்ரெய்ட் பார்வர்ட். எதையும் முகத்துக்கு நின்று தைரியமாக ‌பேசக்கூடியவர் என்கிறார்.

சரி விஜய்யுடன் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என்று நான்கு படங்கள் நடித்துள்ளீர்கள். அவரை பற்றி சொல்லுங்கள் ‌என்றால் சட்டென்று விஜய் ரொம்ப ஸ்டைலான நடிகர் என்கிறார்.

அஜித் ஸ்ட்ரெய்ட் பார்வர்ட், விஜய் ஸ்டைல் அப்போ சீயான் விக்ரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்றால், அவர் திறமைகளின் மொத்த உருவம் என்று பளிச்சென்று கூறுகிறார் த்ரிஷா.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...