பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தோனி படத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியும் கவுரவ வேடத்தில் நடிக்கப்போகவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வில்லனாக அவதரித்து, தயாரிப்பாளராக உருவெடுத்து, இப்போது இயக்குநராக மாறியிருக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் பெயரை வைத்து "தோனி" என்ற படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இயக்கி வருகிறார்.
குழந்தைகளின் மனநிலையை மையப்படுத்தி, குழந்தைகளை பெற்றோர் கட்டாயப்படுத்தக் கூடாது எனும் மையக்கருத்தை இந்த சமூகத்துக்கு சொல்லும் விதமாக இப்படம் உருவாக்கி வருகிறார்.
படத்தில் பிரகாஷ்ராஜ் உடன், ஆகாஷ், தலைவாசல் விஜய், நாசர் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கிறார். கே.பி.குகன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தோனியின் பெயரை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனியும் கவுரவ வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக தோனியிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். ஒருவேளை தோனி ஒப்புக்கொண்டால் அவர் நடிக்கும் முதல் படம் தோனியாகத்தான் இருக்கும்.
0 comments:
Post a Comment