தலைவா படத்திற்கு எழுந்த சிக்கல் ஒரு வழியாக தீர்ந்துள்ளது. இதனையடுத்து படம் வருகிற 20ம் தேதி தமிழகத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
நடிகர் விஜய், அமலா பால் நடித்த, "தலைவா படம் கடந்த, 9ம் தேதி வெளியாக வேண்டியது. ஆனால், தியேட்டர்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், "தலைவா பட வெளியீடு தள்ளிப்போனது.
பிரச்னையை தீர்க்க, முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு, நடிகர் விஜய், தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயின் மற்றும் இயக்குனர் விஜய் உள்ளிட்டோர், காத்திருந்தனர்.
உண்ணாவிரதம் இருக்க முடிவு
தமிழகத்தில் மட்டும், "தலைவா படம் வெளியாகாத நிலையில், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் படம் வெளியானதுடன், அதன் திருட்டு, "சிடியும் வெளியாகிவிட்டது.
தமிழகத்தில், "தலைவா படம் வெளியாகாததால் படத் தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது; தமிழகத்தில் படத்தை வெளியிட தியேட்டர் உரிமையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்;
அதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி, அனுமதி தரும் இடத்தில், ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க, "தலைவா பட குழுவினர், சென்னை போலீஸ் கமிஷனரிடம், நேற்று முன்தினம், கோரிக்கை மனு அளித்தனர்.
ஆனால், உண்ணாவிரதப் போராட்டம் நடத்த, ஐந்து நாட்களுக்கு முன்பே, போலீசாரிடம் அனுமதி கேட்டு கடிதம் தர வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளதால், உண்ணாவிரதம் இருக்க, போலீசார் அனுமதி தரவில்லை.
தயாரிப்பாளருக்கு நெஞ்சு வலி
"தலைவா பட பிரச்னையில், முதல்வர் சந்திப்பு தாமதம், உண்ணாவிரத அனுமதிக்கு சிக்கல், கடனாளி ஆகும் சூழ்நிலையால், நேற்று அப்படத் தயாரிப்பாளர், சந்திர பிரகாஷ் ஜெயினுக்கு, திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
மன உளைச்சல் மற்றும் நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட ஜெயின், சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
0 comments:
Post a Comment