இப்போதெல்லாம் ரசிகர்கள் ரொம்ப தெளிவானவர்களாக இருக்கிறார்கள். உலக அளவிலான சினிமாக்களை, இசையை கேட்பதால் அவர்களது ரசனையும் உலகதரத்திற்கு உயர்ந்து நிற்கிறது.
ஆனால், அப்படி அவர்கள் உலக அளவிலான படைப்புகளை பார்ப்பது இங்குள்ள காப்பி கலைஞர்களுக்கு பெரிய தலைவலியாகி வருகிறது.
குறிப்பாக, கம்போசிங் என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு செல்லும் சில இசையமைப்பாளர்கள், அவர்கள் செல்லும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பிரபலமான ஆல்பங்களில் இருந்து நல்லதை சுட்டுக்கொண்டு வருகிறார்கள்.
ஆனால் அதை வெளியிடும்போது எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே என்று மோப்பம் பிடித்து விடும் ரசிகர்கள், சம்பந்தப்பட்ட பாடல்கள் எந்த இசையமைப்பாளர் மூலம், எந்த ஆல்பத்தில் இடம்பெற்றது என்பதை புடடு புட்டு வைத்து விடுகிறார்கள்.
அப்படி, மின்னலே படம் மூலம் என்ட்ரி கொடுத்த அந்த இசையமைப்பாளரை, நம்முடைய இளையதலைமுறை ரசிகர்கள் திட்டோ திட்டென்று திட்டி வருகிறார்கள்.
அதிலும் சிலர் பேஸ்புக்கில், அவர் எந்தெந்த படத்திற்கு எந்தெந்த ஆல்பத்தில் இருந்து பாடல்கள் சுட்டார் என்பதை பட்டியலிட்டு காட்டுகிறார்களாம். இதனால் செம டென்சனில் இருக்கிறார் மேற்படி இசைமைப்பாளர்.
இதற்கெல்லாம் விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தாலோ அல்லது மறுப்பு சொல்லிக்கொண்டிருந்தாலோ நமக்குத்தான் நஷ்டம் என்பதால் கண்டும் காணாததும் போல் இருந்து வருகிறார்.
மேலும், இனி, அப்பட்டமாக காப்பியடிப்பதை குறைத்து விட்டு, தனது சொந்த கற்பனை மூலம் அடக்கிவாசிக்கவும் முடிவெடுத்திருக்கிறாராம் மேற்படி இசைக்கலைஞர்.
0 comments:
Post a Comment