இராமநாராயணன் இயக்கத்தில் பவர்ஸ்டார் நடித்து வந்த படம் ஆர்யா சூர்யா. ஆனால் இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே பவர்ஸ்டாரை மோசடி வழக்கில் போலீஸ் கைது செய்தது.
அதனால் முமைத்கானுடன் இணைந்து அவர் ஆட வேண்டிய ஒரு குத்துப்பாட்டை தானே பாடி, முமைத்கானுடன் அதிரடி ஆட்டமும் போட்டார் டி.ராஜேந்தர்.
முன்னதாக, கோலிசோடா என்ற படத்தில் டி.ஆர் பாடியுள்ள குத்துப்பாட்டுக்கு பவர்ஸ்டாரே நடனமாடியுள்ளார். அடங்கொய்யாலே நீ பொய்யாலே -என்று தொடங்கும் அந்த பாடலில் ஆர்யாசூர்யா படத்தில் நடிப்பதற்கு முன்பே நடித்து முடித்து விட்டாராம் பவர்ஸ்டார்.
ஒருவேளை அப்படி அவர் அந்த படத்திலிருந்தும் பாதியிலேயே போயிருந்தால் அந்த குத்துப்பாட்டுக்கு ஆடும் வாய்ப்பும் டி.ஆருக்குத்தான் கிடைத்திருக்குமாம்.
இதுதவிர, இப்போது யாராவது இயக்குனர்கள் அயிட்டம் நடிகைகளைப்போல் அயிட்டம் நடிகர்கள் வேண்டும் என்று யோசித்தாலும் டி.ஆர்தான் அவர்கள் மைண்டில் வந்து நிற்கிறாராம்.
அதனால், இப்படியே போனால் இன்னும் சிலகாலத்தில் நம்பர்-ஒன் அயிட்டம் நடிகராக டி.ஆர் ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்ற நிலையும் உருவாகியிருக்கிறது.
1 comments:
டி.ஆர். டி.ஆர் தான்
Post a Comment