பிரபல உதவி இயக்குனரின் கதை திருட்டு


சமீபகாலமாக ஒருவரது கதையை இன்னொருவர் திருடி படமெடுப்பது என்பது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. இதில் பெரும்பாலும் வாய்ப்புக்காக அலையும் உதவி இயக்குனர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். 

காரணம், தங்கள் கதைகளில் நடிப்பதற்காக நடிகர்களை அணுகி கதை சொல்கிறார்கள். ஆனால், அப்படி கதையை கேட்கும் சில நடிகர்கள் அந்த கதை தன்னை அதிகமாக பாதித்து விட்டால், பின்னர் அதே கதையில் சில திருத்தங்களை செய்து வேறு கதை போன்று உருவாக்கி தாங்களே இயக்குனராக களமிறங்கி விடுகிறார்கள்.

அப்படி ஏற்கனவே சில நடிகர்கள் இறங்கியிருக்கும் நிலையில், தற்போது ஒரு ஆக்சன் நடிகரும் ஒரு உதவி இயக்குனர் தன்னிடம் சொன்ன கதைக்கருவைக்கொண்டே ஒரு கதையை தயார் பண்ணி, ஒரு படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். 

அதற்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு தான் நடித்த படத்தின் தலைப்பை வைத்து அதன் இரண்டாம் பாகம் என்று அறிவித்து படப்பிடிப்பையும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், மேற்படி நான்கெழுத்து ஆக்சன் நடிகர் இயக்கி நடித்து வரும் கதை தன்னுடையது என்பதை அவர் கொடுத்த பேட்டிகளை வைத்து ஓரளவு புரிந்து கொண்ட உதவி இயக்குனர், அது ஒரு குழந்தையை மையப்படுத்திய கதை என்பதால் கண்டிப்பாக நான் அவரிடம சொன்னதுதான் என்று கொடி பிடிக்கத் தொடங்கியிருக்கிறார். 

இதற்கு உதவி இயக்குனர்களும் அவருக்கு பின் நிற்க தயாராகி வருகிறார்களாம். அதனால் மேற்படி படம் திரைக்கு வரும் நேரத்தில் போராட்டம் வெடிக்கும் என்று தெரிகிறது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...