ஷாருக் கான் - தீபிகா படுகோனே நடித்து, சமீபத்தில் வெளியான, "சென்னை எக்ஸ்பிரஸ் படம், பெரும் வெற்றி பெற்றுள்ளதுடன், நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலையும் குவித்துள்ளது.
இதனால், சந்தோஷத்தில் இருக்கும் ஷாருக் கான், தன் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக, புது சலுகையை அறிவித்துள்ளார்.
இதன்படி, "சென்னை எக்ஸ்பிரஸ் படத்துக்காக, இரண்டு டிக்கெட் வாங்கினால், ஒரு டிக்கெட் இலவசமாக கொடுக்கப்படும் என, அவர் அறிவித்துள்ளாராம்.
வட மாநிலங்களுக்கு தான், இந்த சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஷாருக் கூறுகையில், "ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு, இந்த திட்டத்தை அறிவித்தோம்.
இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து, வெற்றிகளை பரிசளித்து வரும் ரசிகர்களுக்காக, இதை அறிவித்தோம் என, மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார், ஷாருக் கான்.
0 comments:
Post a Comment