இயக்குனரை மூடுஅவுட் செய்த ஹீரோக்கள்


குண்டு பூ நடிகையை திருமணம் செய்து கொண்ட அந்த சு.சி இயக்குனர், கதாநாயகன் வேடத்துக்கு மார்க்கெட் இல்லாததால் மீண்டும் இயக்குனர் போஸ்ட்டுக்கு மாறினார். 

மார்க்கெட்டில் இருக்கிற மூன்று நடிகர்களை வைத்து மூன்று கமர்சியல் படங்களை இயக்கினார். 

ஆனால், இந்த நேரத்தில் மீண்டும் அவரது அடிமனதிற்குள் ஹீரோ ஆசை தலை தூக்கியதால், அடுத்து என் படங்களில் எந்த நடிகருக்கும் சான்ஸ் கொடுக்கப்போவதில்லை, என்னை நானே இயக்கிக்கொள்ளப்போகிறேன் என்று அறிவித்தார்.

ஆனால் களத்தில் குதிக்கிற நேரத்தில் சு.சிக்கு ஒரு சின்ன பயம். அதாவது, தனியாக குதிப்பதைகூட தனது சமீபத்திய படங்களில் நடித்த ஹீரோக்கள் யாரையாவது கூட சேர்த்துக்கொண்டு குதித்தால் ஒரு பாதுகாப்பாக இருக்குமே என்று மேற்படி நடிகர்களிடம், தனது படத்தில் இன்னொரு ஹீரோவாக நடிக்க அழைப்பு விடுத்தாராம். 

ஆனால், அந்த மூன்று நடிகர்களுமே, மறுபடியும் உங்களுக்கு ஹீரோ ஆசை வந்ததே தப்பு. 

இதுல எங்களை வேற கூட்டணி சேர்க்கிறீங்களா? அதுக்கெல்லாம் வேற ஆளை பாருங்க என்று டிமிக்கு கொடுத்து விட்டார்களாம்.

இதை சற்றும் எதிர்பார்க்காத சு.சி இயக்குனர், பயங்கர மூடுஅவுட்டில் இருக்கிறாராம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...