அங்காடித் தெரு படத்தில், நாயகன் மகேஷுக்கு நண்பனாக நடித்த, "பிளாக் பாண்டி, சமீபத்தில் நடித்த, "பாகன் படத்துக்கு பிறகு, "பிசி ஆன நடிகராகி விட்டார்.
"பாக்கணும் போல இருக்கு, நீர்ப்பறவை உட்பட பல படங்களில், தற்போது நடித்து வருகிறார். "என் தாத்தா, "பபூன் சொக்கலிங்கம், பெரிய நாடக நடிகர். எம்.ஜி.ஆர்., சிவாஜி, தியாகராஜ பாகவதர், கே.பி.சுந்தராம்பாள் போன்றோருடன் நடித்தவர்.
அதேபோல், என் தந்தை பாரதி சேகரும், மேடை நடிகர். அதனால், நடிப்பு, என் ரத்தத்ததில் ஊறிப் போயிருக்கிறது.
மூன்றாம் தலைமுறை நடிகரான நான், சினிமாவில் பெரிய அளவில் சாதிக்காமல், ஓய மாட்டேன் என்கிறார் பாண்டி.
தனக்கு பொருத்தமான கதைகள் கிடைத்தால், எதிர்காலத்தில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆசையும், பாண்டிக்கு உள்ளது.
0 comments:
Post a Comment