சாருலதாவை முடக்க நினைத்த மாற்றான் யூனிட்


ப்ரியாமணி நடித்த சாருலதாவைப்போன்று, கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள மாற்றான் படமும் ஒட்டிப்பிறந்த இரட்டையர் கதையில்தான் உருவாகியுள்ளது. 

அதிலும் இரண்டு படங்களுமே ஒரு வெளிநாட்டு படத்தின் அப்பட்டமான காப்பி என்று கூறப்படுகிறது. 

இதை சாருலதா யூனிட் ஒத்துக்கொண்ட போதும், மாற்றான் யூனிட் 4 வருடங்களாக மூளையை கசக்கி நாங்களே யோசித்த கதை என்று பில்டப் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. 

அதோடு, சாருலதா வேறு, மாற்றான் வேறு. படம் வெளியானதும் பாருங்கள் என்றும் ரசிகர்களை திசைதிருப்பும் வேலைகளிலும் ஈடுபட்டிருக்கின்றனர்.

ஆனால் இப்படி பேசுபவர்கள், சாருலதா படம் திரைக்கு வருவதற்கு முன்பு, அப்படத்தை தயாரித்தவர்களை அணுகி, படத்துக்கு ஒரு பெரிய ரேட் பேசி வாங்கி, அதை வெளியிடாமல் முடக்கவும் முயற்சி எடுத்திருக்கிறார்கள். 

ஆனால் அப்படத்தை வாங்கியவர்கள், அதற்கு ஒத்துக்கொள்ளவில்லையாம். ஆக, சாருலதா வெளியாகி, இப்போது மாற்றானுக்கு பெருத்த தலைவலியை கொடுத்திருக்கிறது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...