ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுப்பவர் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் அவரே ஹீரோயின்கள் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
பல ஹீரோயின்கள் என் மனதை காயப்படுத்தியிருக்கிறார்கள். நான் இயக்கிய ஒரு படத்தில் ஹீரோயின் பண்ணிய அட்காசத்தை இப்போ நினைச்சாலும் கோபம் வருகிறது. என்னோட படங்களில் ஹீரோயின்களுக்கு நல்ல முக்கியத்துவம் இருக்கும்.
கஜினி படத்தில் ஹீரோயின்தான் படத்தோட கீ ரோல், 7ம் அறிவு படத்துல கதையை கொண்டு போறதே ஹீரோயின்தான். என் படத்துல தேவையில்லாம ஒரு சீன்கூட இருக்காது.
ஆனா ஒரு படத்துல நடிச்ச ஹீரோயின் எனக்கு ஒரு டூயட் பாட்டு வையுங்கன்னு சண்டை போட்டாங்க. கவர்ச்சியாத்தான் டிரஸ் போடுவேன்னு அடம்பிடிச்சாங்க.
அந்த ஹீரோயினுக்கு தமிழ் தெரியும் என்பதால் அவரையே டப்பிங் பேசுங்கன்னு சொன்னேன் ஆனா அதுக்கு பத்து நாள் வேலை இருக்கும்னு தெரிஞ்சுக்கிட்டு பேச மறுத்துட்டாங்க.
ஒரு படத்துக்காக ஹீரோ சிக்ஸ் பேக்ஸ், மொட்டை, வெயிட்டை ஏத்துறது இறக்குறதுன்னு அம்புட்டு ஹார்ட் ஒர்க் பண்றாங்க. ஆனா ஹீரோயின்கள் எந்த மெனக்கெடலும் செய்றதில்ல.
படத்த கெடுக்குறதுக்கு உண்டான வேலைகளத்தான் செய்றாங்க. ஒரு சில நடிகைங்க தவிர மற்ற யாருக்குமே சினிமா மேல அக்கறை இல்லை. தங்களோட கேரியர், சம்பளம் இதுமேலதான் அக்கறையா இருக்காங்க.
0 comments:
Post a Comment